காயல்பட்டினத்தில் வடகிழக்குப் பருவமழை தொடர்ச்சியாகப் பெய்து, நகரே வெள்ளக்காடான நிலையில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மழை பெய்யாதிருந்தது. இந்நிலையில், இம்மாதம் 09ஆம் நாளன்று அதிகாலையில் சுமார் 1 மணி நேரம் சிறுமழை பெய்தது.
அதன் தொடர்ச்சியாக, இன்று (டிசம்பர் 11) நள்ளிரவு துவங்கி, அதிகாலை 06.30 மணி வரை சிறுமழை தொடர்ந்து பெய்தவண்ணம் இருந்தது.
இன்று காலை 10.50 மணி நிலவரப்படி, நகரில் குளிர்ந்த வானிலை நிலவுகிறது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. வெயில் இல்லையெனினும் வெளிச்சம் உள்ளது.
காயல்பட்டினத்தில் மழை குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |