பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5 | பாகம் 6 | பாகம் 7 | பாகம் 8 | பாகம் 9 | பாகம் 10
------------------------------------------------------------------------
சமையல் எரிவாயுக்கான (LPG) மானியம் பொது மக்களுக்கு நேரடியாக அவர்களின் வங்கி கணக்குக்கு வழங்கப்படும் (Direct Benefits Transfer
For LPG (DBTL) Consumers Scheme) என்ற முடிவினை அரசு கடந்தாண்டு எடுத்தது. சில மாற்றங்களுடன், 54 மாவட்டங்களில் - இவ்வாண்டு
நவம்பர் 15 முதல் அமல் செய்யப்பட்ட இந்த திட்டம், தற்போது - ஜனவரி 1, 2015 முதல் - நாடு முழுவதும் அமல் செய்யப்படவுள்ளது.
ஏன் இந்த திட்டத்தினை அரசு முழு ஆர்வத்துடன் அமல்படுத்துகிறது?
நாட்டில் உள்ள 186 எரிவாயு அடைப்பு தளங்களில் (BOTTLING PLANTS) இருந்து 13,000 விநியோகிஸ்தர்கள் (DISTRIBUTORS) மூலமாக 16 கோடி
இல்லங்களுக்கு, தினமும் (14.2 கிலோ எடைக்கொண்ட) 30 லட்சம் காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு இல்ல இணைப்பும் தற்போது ஆண்டுக்கு 12 காஸ் சிலிண்டர் வரை - மானிய விலையில் பெறலாம். அதாவது - சந்தை விலை 750
ரூபாய் என்றால், பொது மக்களுக்கு 400 ரூபாய் விலையில் வழங்கி, பாக்கி 350 ரூபாயினை (இது தான் மானியம்) - காஸ் சிலிண்டர்
நிறுவனங்களுக்கு அரசு வழங்குகிறது.
அனைத்து எரிவாயு வகைக்கும் சேர்த்து (மண்ணெண்ணை, டீஸல் போன்றவை) [TOTAL FUEL SUBSIDY] - 2013-14இல் 1,39,869 கோடி ரூபாய்
மானியமாக அரசு வழங்கியது. LPG வகை மானியம் (46,458 கோடி) அதில் 35 சதவீதம் பங்கு வகிக்கிறது.
நேரடி மானியம் வழங்குதல் திட்டம் மூலம் அரசு என்ன சாதிக்க விரும்புகிறது?
வங்கி கணக்குகள் மூலம் நேரடியாக வழங்கப்படும் மானியம் மூலமாக அரசு தனது மொத்த மானிய பாரத்தை காலப்போக்கில் குறைக்க
நாடுகிறது.
இந்த திட்டம் மூலம் -
*** ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புள்ளவர்கள் மானியம் பெறுவதில் இருந்து தவிர்க்கப்படுவார்கள்.
*** மானியம் நேரடியாக வாடிக்கையாளருக்கு வழங்கப்படுவது மூலம், பொது மக்களுக்கு என வழங்கப்படும் மானிய சிலிண்டர், வியாபார
நிறுவனங்களுக்கு திருப்பபடுவது தவிர்க்கப்படும்.
மானியங்கள் என்பது பொருளாதார வசதி குறைந்தவர்களுக்கு என்பதால் - மானியம் பெறுவதில் இருந்து விலகிக்கொள்ளவும் இத்திட்டம் மூலம் அரசு
வகை செய்துள்ளது.
அதற்கான படிவமான - படிவம் 5 யை நிரப்பி - இதுவரை 10,000 க்கும் மேற்பட்டவர்கள் நாடு முழுவதும், மானியம் தேவையில்லை என பதிவு
செய்துள்ளனர்.
அவர்களின் பெயர்களை - சிலிண்டர் விநியோகம் செய்யும் நிறுவனங்கள், தங்கள் இணையதளத்தில் - SCROLL OF HONOUR என்ற தலைப்பில் - வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
படிவம் 5 பதிவிறக்கம் செய்ய இங்கு அழுத்தவும்
[தொடரும்]
------------------------------------------------------------------------
பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5 | பாகம் 6 | பாகம் 7 | பாகம் 8 | பாகம் 9 | பாகம் 10
|