பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5 | பாகம் 6 | பாகம் 7 | பாகம் 8 | பாகம் 9 | பாகம் 10
------------------------------------------------------------------------
சமையல் எரிவாயுக்கான (LPG) மானியம் பொது மக்களுக்கு நேரடியாக அவர்களின் வங்கி கணக்குக்கு வழங்கப்படும் திட்டத்திற்கு (Direct Benefits
Transfer For LPG (DBTL) Consumers Scheme) அவசியமான ஆவணங்கள் மூன்றாகும்.
(1) 17 இலக்கங்கள் (17 Digits) சிலிண்டர் இணைப்பு எண்
(2) வங்கிக் கணக்கு எண்
(3) ஆதார் எண் (கட்டாயம் அல்ல)
இந்த மூன்றில் ஆதார் எண் கட்டாயம் அல்ல.
(1) 17 இலக்கங்கள் கொண்ட சிலிண்டர் இணைப்பு எண்ணை - வாடிக்கையாளர் தனது கடைசி ரசீதில் இருந்தோ, வினியோகிஸ்தர் வழங்கும்
புத்தகத்தில் இருந்தோ பெற்றுக்கொள்ளலாம்.
(2) வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் அருகாமையில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட வங்கியின் கிளையில் புதிய கணக்கு திறக்கவேண்டும். இச்சேவையை
பயன்படுத்த - ZERO BALANCE / NO FRILLS ACCOUNT எனப்படும் சாதாரண வங்கி கணக்கு போதுமானது.
அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் விபரம்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை பெற்றுள்ளோர், இத்திட்டத்திற்கான படிவங்களை நிரப்பி, சம்பந்தப்பட்ட வங்கியிலும், சிலிண்டர்
விநியோகஸ்தர் அலுவலகத்திலும் சமர்ப்பித்து இத்திட்டத்தில் இணையலாம்.
இத்திட்டத்தில் இணையும் வழிகள் குறித்த முழு விபரம் தொடரும் பாகங்களில் வழங்கப்படும்.
ஜனவரி 1 நெருங்குவதால் - காயல்பட்டினத்தில் உள்ள வாடிக்கையாளர்கள் பலர், தங்கள் ஆவணங்களை வங்கிகளிலும், விநியோகிஸ்தர்களிடமும்
சமர்ப்பித்து வருகிறார்கள். இதில் பலர் - விரைவாக சமர்ப்பித்து அடுத்த வேலைக்கு செல்வோம் என்ற நோக்கில் செயல்பட்டாலும், ஒரு சிலர் -
ஜனவரி 1க்குள் சமர்ப்பிக்கவில்லை என்றால் மானியம் கிடைக்காது என்ற பதற்றத்திலும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க தயாராகி வருகிறார்கள்.
ஜனவரி 1ம் தேதிக்குள் சமர்ப்பிக்காவிட்டாலும் தொடர்ந்து மானியங்களை பெறலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த விபரமும் அடுத்த
பாகத்தில் வழங்கப்படும்.
அதற்கு முன்னர் - அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளவர்கள் அடுத்து என்ன எதிர்பார்க்கலாம் என்பதை காண்போம்.
விண்ணப்பங்கள் சமர்ப்பித்து, அவை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள வாடிக்கையாளர்களை, அரசு - Cash Transfer Compliant (CTC) என அடையாளம்
காண்கிறது. ஜனவரி 1, 2015 க்கு பிறகு - காஸ் சிலிண்டர் கோரி பதிவு செய்யும் போது (Booking), அவர்கள் வங்கி கணக்கில் - 568
ரூபாய் - அரசினால் செலுத்தப்படும். இது ஒரு முறை வழங்கப்படும் நிரந்தர முன் தொகை (One Time, Permanent Advance). இது மானியத் தொகை அல்ல.
முன் தொகை, வாழ்நாளில் - ஒரு முறை தான் வழங்கப்படும். இந்த தொகை ஒவ்வொரு நிதியாண்டும் மாற்றப்படும். தற்போதைய தொகை - (568 ரூபாய்), 2013-14 நிதியாண்டுக்கானது
பதிவு செய்த சில தினங்களில் - அந்த வாடிக்கையாளர், தனது விநியோகஸ்தர் மூலம் காஸ் சிலிண்டர் பெறுவார். அப்போது அவர் செலுத்த
வேண்டிய தொகை - முழு சந்தை தொகையாகும்.
அதாவது இதுவரை - 400 ரூபாய் செலுத்தி வந்தவர், சந்தை விலையான சுமார் 750 ரூபாயை தற்போது ரொக்கமாக செலுத்துவார்.
வழமையை விட கூடுதலான 350 ரூபாய் மானியத் தொகையை அவர் கையில் இருந்தோ, அல்லது அரசு வழங்கிய முன் தொகையில் இருந்தோ
வழங்கலாம்.
வாடிக்கையாளர் தனது காஸ் சிலிண்டரை முழு சந்தை விலையில் பெற்ற சில தினம் கழித்து, மானியத் தொகை (சுமார் 350 ரூபாய்) வங்கி
கணக்குக்கு அனுப்பப்படும்.
உதாரணம்:
ஜனவரி 3 - CTC வாடிக்கையாளர் சிலண்டர் கோரி பதிவு (Gas Booking) செய்கிறார்
ஜனவரி 5 - அவரின் வங்கி கணக்குக்கு முன் தொகையான ரூபாய் 568 (One Time Permanent Advance) அனுப்பப்படும்
ஜனவரி 8 - வாடிக்கையாளர் காஸ் சிலிண்டரை முழு சந்தை விலை (சுமார் 750 ரூபாய்; ஊருக்கு ஊர், காலத்திற்கு காலம் வேறுபடும்) செலுத்தி பெறுவார்
ஜனவரி 10 - மானியத் தொகை சுமார் 350 ரூபாய் அவர் வங்கி கணக்குக்கு அனுப்பப்படும்
ஏற்கனவே கண்டது போல் - முன் தொகை மானியத் தொகை அல்ல. காஸ் சிலண்டர் இணைப்பு - துண்டிக்கப்ப்படும்போது அந்த தொகை சரி
செய்யப்படும். இருப்பினும் - இந்த திட்டம் மூலம் முதல் இணைப்பை பெற, அந்த தொகையை பயன்படுத்த அரசு அனுமதிக்கிறது.
[தொடரும்]
------------------------------------------------------------------------
பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5 | பாகம் 6 | பாகம் 7 | பாகம் 8 | பாகம் 9 | பாகம் 10
|