பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5 | பாகம் 6 | பாகம் 7 | பாகம் 8 | பாகம் 9 | பாகம் 10
------------------------------------------------------------------------
LPG மானியத்தை நேரடியாக வங்கி கணக்குகளுக்கு வழங்கும் திட்டத்தை, காங்கிரஸ் அரசு ஜூன் 1, 2013 அன்று அறிமுகம் செய்தது. 6 கட்டமாக,
நாட்டின் 261 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த திட்டத்தில், ஆதார் எண்ணை சமர்ப்பிப்பது கட்டாயம் ஆக்கப்பட்டிருந்தது. இதனால் -
ஆதார் எண்ணை பெறாதவர்கள் இந்த திட்டத்தில் இணைய முடியாத நிலை இருந்தது.
இவ்வாண்டு மே மாதம் பதவியேற்ற புதிய அரசாங்கம், இந்த திட்டத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தி, நாட்டின் 54 மாவட்டங்களில், நவம்பர் 15
முதல் - மீண்டும் இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
PAHAL ("PrAtyaksh (Direct) HAstantarit (transferred) Labh (Benefit)") என்று அழைக்கப்படும் புதிய திட்டத்தில், ஆதார் எண் இது வரை பெறாதவர்களும், இந்த திட்டத்தில் இணைவதற்கு வழி வகுக்கப்பட்டுள்ளது.
இதன்படி - இந்த திட்டத்தில் இணைய,
--- ஆதார் எண் பெற்றவர்களுக்கு,
--- ஆதார் எண் பெறாதவர்களுக்கு
என இரு வழிகள் - உள்ளன.
ஆதார் எண் பெற்றவர்கள் - கண்டிப்பாக ஆதார் எண் வழியையே பயன்படுத்தவேண்டும். அதனை தவிர்த்து - ஆதார் எண்ணை குறிப்பிட மறுத்து,
மாற்று வழியை பயன்படுத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயல்பட்டினத்தில் கடந்தாண்டு பலர் தேசிய மக்கள் தொகை பதிவகம் (NATIONAL POPULATION REGISTRY - NPR) முகாம்களில் பங்கேற்றனர். அந்த முகாம்கள் மூலமும் ஆதார் எண் வழங்க வழி செய்யப்பட்டது. அந்த முகாமில் பங்கேற்று, இது வரை ஆதார் அட்டையை தபால் மூலம் பெறாதவர்கள், இணையதளம் மூலம் ஆதார் எண்ணை பெறலாம் (eAadhaar).
எவ்வாறு eAadhaar பெறுவது என்ற விபரத்தை காண இங்கு அழுத்தவும்
http://kayalpatnam.com/shownews.asp?id=12887
54 மாவட்டங்களில் மறு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த திட்டம், நாட்டின் இதர மாவட்டங்களில் ஜனவரி 1, 2015 முதல் அமலுக்கு வருகிறது.
அந்த தேதிக்குள் திட்டத்தில் இணையாவிட்டால், மானியம் கிடைக்காதா? தொடரும் பாகங்களில் காணலாம்.
[தொடரும்]
------------------------------------------------------------------------
பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5 | பாகம் 6 | பாகம் 7 | பாகம் 8 | பாகம் 9 | பாகம் 10
|