பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5 | பாகம் 6 | பாகம் 7 | பாகம் 8 | பாகம் 9 | பாகம் 10
------------------------------------------------------------------------
முந்தைய பாகத்தில் - ஆதார் எண் பெற்றுள்ளவர்கள் எவ்வாறு Direct Benefits Transfer For LPG (DBTL) Consumers Scheme திட்டத்தில்
இணையலாம் என பார்த்தோம். அதில் ஆதார் எண்ணையும், LPG எண்ணையும் இணைக்கும் படிவம் 2 - விநியோகஸ்தரிடம் நேரில் வழங்கப்பட
வேண்டும் என்ற தகவலும் வழங்கப்பட்டது.
நேரில் படிவம் 2யை வழங்குவதற்கு பதிலாக - ஆதார் எண்ணையும், LPG எண்ணையும் இணைக்க - மேலும் ஐந்து வழிகளை அரசு
தெரிவிக்கிறது.
(i) படிவம் 2 யை - தபால் மூலம், இணைப்புகளுடன், விநியோகஸ்தருக்கு அனுப்பலாம்
(ii) 1-800-2333-555 என்ற அனைத்து நிறுவனங்களுக்கும் பொதுவான தொலைப்பேசியை தொடர்புக்கொண்டு, அவர்கள் தெரிவிக்கும் முறையில், ஆதார் எண்ணையும், LPG எண்ணையும் இணைக்கலாம்
(iii) https://rasf.uidai.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று ஆதார்
எண்ணையும், LPG எண்ணையும் இணைக்கலாம். [காயல்பட்டினத்தை பொறுத்தவரை IOCL / வேலவன் காஸ் ஏஜன்சி வாடிக்கையாளர் விபரங்கள்
மட்டுமே இந்த இணையதளத்தில் தற்போது உள்ளது].
(iv) சிலிண்டர் வழங்கும் நிறுவனங்களின் பிரத்தியேக Interactive Voice Response System (IVRS) எண்களை தொடர்புகொண்டும், அவர்கள் தெரிவிக்கும் முறையில், ஆதார் எண்ணையும், LPG எண்ணையும் இணைக்கலாம்
(a) IOCL / காஹிரா எண் - 81240 24365
(b) BPCL / வேலவன் காஸ் ஏஜென்சி எண் - 94860 56789
(c) HPCL எண் 90922 23456
(v) குறுஞ்செய்திகள் (SMS) மூலமாகவும் ஆதார் எண்ணையும், LPG எண்ணையும் இணைக்கலாம்
(a) IOCL / காஹிரா வாடிக்கையாளர்கள்
IOC[space]4639281100[space]{Consumer Number} என்ற தகவலை, 81240 24365 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தியாக (SMS) அனுப்பி தங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு, UID[space]{Aadhaar Number} என்ற தகவலை, 81240 24365 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தியாக (SMS) அனுப்பி ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்
(b) BPCL / வேலவன் காஸ் ஏஜென்சி வாடிக்கையாளர்கள்
வாடிக்கையாளர் - தனது மொபைல் எண்ணை, விநியோகஸ்தரிடம் முதலில் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு UID[space]{Aadhaar Number} என்ற தகவலை 57333 (All India) அல்லது 52725 (Vodafone, MTNL, Idea, Airtel & Tata users) என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தியாக (SMS) அனுப்பி ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்
(c) HPCL வாடிக்கையாளர்கள்
REG[space]{Distributor number with STD Code/without zero}[space]{Consumer Number} என்ற தகவலை, 90922 23456 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தியாக (SMS) அனுப்பி தங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு, UID[space]{Aadhaar Number} என்ற தகவலை, 90922 23456 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தியாக (SMS) அனுப்பி ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்
அடுத்து ஆதார் எண் இல்லாதவர்கள் எவ்வாறு - இந்த திட்டத்தில் இணைவது என்பதை விரிவாக காணலாம்.
[தொடரும்]
------------------------------------------------------------------------
பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5 | பாகம் 6 | பாகம் 7 | பாகம் 8 | பாகம் 9 | பாகம் 10
|