பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5 | பாகம் 6 | பாகம் 7 | பாகம் 8 | பாகம் 9 | பாகம் 10
------------------------------------------------------------------------
முந்தைய பாகங்களில் ஆதார் எண் பெற்றுள்ள காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள், Direct Benefits Transfer For LPG (DBTL) Consumers
Scheme திட்டத்தில் இணைவது எப்படி என்பது குறித்து கண்டோம்.
இந்த பாகத்தில் ஆதார் எண் இல்லாத காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள், Direct Benefits Transfer For LPG (DBTL) Consumers
Scheme திட்டத்தில் இணைவது எப்படி என்பதை காண்போம்.
ஆதார் எண் இல்லாதவர்கள் - Direct Benefits Transfer For LPG (DBTL) Consumers Scheme திட்டத்தில் இணைய இரண்டு படிவங்கள் உள்ளன.
அந்த இரண்டில் - ஏதாவது ஒன்றினை பயன்படுத்தி, திட்டத்தில் இணையலாம்.
சில வாடிக்கையாளர்கள் மத்தியிலும், சில விநியோகஸ்தர்கள் மத்தியிலும் - ஆதார் எண் இல்லாதவர்கள், இரண்டு படிவத்தையும் (படிவம் 3
மற்றும் படிவம் 4) சமர்ப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் நிலவுகிறது. இரண்டு விண்ணப்பத்தையும் சமர்ப்பிப்பது அவசியமில்லை. இரண்டு
படிவத்திலும் ஒரே தகவல் பெறப்படுவதால், ஏதாவது ஒன்றை (வங்கியில் படிவம் 3 அல்லது விநியோகஸ்தரிடம் படிவம் 4) சமர்ப்பித்தால்
போதுமானது.
(a) கணக்கு வைத்துள்ள வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டிய படிவம் 3
அல்லது
(b) காஸ் சிலிண்டர் வழங்கும் விநியோகஸ்தரிடம் சமர்ப்பிக்க வேண்டிய படிவம் 4
படிவம் 3 யை பதிவிறக்கம் செய்ய இங்கு அழுத்தவும்.
படிவம் 4 யை பதிவிறக்கம் செய்ய இங்கு அழுத்தவும்.
கணக்கு வைத்துள்ள வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டிய படிவம் 3
வாடிக்கையாளர்கள் நிரப்ப வேண்டிய படிவம் 3 மேலே வழங்கப்பட்டுள்ளது. இந்த படிவத்தை நிரப்பி, கணக்கு வைத்துள்ள வங்கியிடம்,
வாடிக்கையாளர் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த விண்ணப்பம் 11 தகவல்களை மட்டும் கோருகிறது.
(1) விநியோகஸ்தர் வழங்கும் வாடிக்கையாளர் எண் (CONSUMER NUMBER)
(2) 17 இலக்க LPG எண்
(3) காஸ் சிலிண்டர் இணைப்பில் உள்ள பெயர்
(4) காஸ் சிலிண்டர் விநியோகஸ்தர் பெயர்
(5) காஸ் சிலிண்டர் நிறுவனம் பெயர் (IOCL/BPCL/HPCL)
(6) வங்கி கணக்கில் உள்ள பெயர்
(7) வங்கி பெயர்
(8) வங்கி கிளை பெயர்
(9) IFSC குறியீடு
(10) வங்கி கணக்கு எண்
(11) மொபைல் எண்
விண்ணப்பத்துடன் இணைப்பு:
(1) விநியோகஸ்தர் வழங்கிய DGCC புத்தகத்தின் முதல் பக்க நகல் (அல்லது) கடைசியாக பணம் செலுத்திய ரசீது நகல் (அல்லது) காஸ்
சிலிண்டர் வழங்கும் நிறுவனத்திடம் இருந்து இன்னார் பெயரில் தான் இணைப்பு உள்ளது என்ற சான்றிதழ்
விநியோகஸ்தர் எண் மற்றும் LPG எண் - ரசீதில் மற்றும் வாடிக்கையாளர்களிடம் இருக்கும் DGCC புத்தகத்தில் இருக்கும்.
வங்கியின் IFSC குறியீடு, காசோலை புத்தகத்தில் இருக்கும்.
காயல்பட்டினத்தில் உள்ள மூன்று பிரதான வங்கிகளிலும் இந்த படிவத்தை சமர்ப்பிக்கலாம் என அரசு தெரிவிக்கிறது. அந்த வங்கிகளின் IFSC விபரம்
வருமாறு:
(1) CENTRAL BANK OF INDIA (IFSC குறியீடு: CBIN0280928)
(2) ICICI BANK (IFSC குறியீடு: ICIC0006153)
(3) INDIAN OVERSEAS BANK (IOB) (IFSC குறியீடு: IOBA0000491)
விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட வங்கி - படிவத்தின் அடியில் உள்ள ஒப்புதல் ரசீதை வழங்கும்.
படிவம் 3 யை வங்கியில் சமர்ப்பித்த ஆதார் எண் இல்லாத வாடிக்கையாளர்கள், படிவம் 4 யை (விநியோகஸ்தர்களிடம்) சமர்ப்பிக்க
தேவையில்லை.
வங்கியில் படிவம் 3 யை சமர்ப்பிக்க விரும்பாதவர்கள், படிவம் 4 யை பூர்த்தி செய்து, தங்கள் விநியோகஸ்தர்களிடம்
சமர்ப்பிக்கலாம்.
காஸ் சிலிண்டர் வழங்கும் விநியோகஸ்தரிடம் சமர்ப்பிக்க வேண்டிய படிவம் 4
வாடிக்கையாளர்கள் நிரப்ப வேண்டிய படிவம் 4 மேலே வழங்கப்பட்டுள்ளது. இந்த படிவத்தை நிரப்பி, காஸ் சிலிண்டர் வழங்கும் விநியோகஸ்தரிடம்
வாடிக்கையாளர் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த விண்ணப்பம் 9 தகவல்களை மட்டும் கோருகிறது.
(1) விநியோகஸ்தர் வழங்கும் வாடிக்கையாளர் எண் (CONSUMER NUMBER)
(2) 17 இலக்க LPG எண்
(3) காஸ் சிலிண்டர் இணைப்பில் உள்ள பெயர்
(4) மொபைல் எண்
(5) வங்கி கணக்கில் உள்ள பெயர்
(6) வங்கி கணக்கு எண்
(7) வங்கி பெயர்
(8) வங்கி கிளை பெயர்
(9) 11 இலக்க IFSC அல்லது 9 இலக்க MICR குறியீடு
விண்ணப்பத்துடன் இணைப்பு:
(1) விநியோகஸ்தர் வழங்கிய DGCC புத்தகத்தின் முதல் பக்க நகல் (அல்லது) கடைசியாக பணம் செலுத்திய ரசீது நகல் (அல்லது) காஸ்
சிலிண்டர் வழங்கும் நிறுவனத்திடம் இருந்து இன்னார் பெயரில் தான் இணைப்பு உள்ளது என்ற சான்றிதழ்
(2) வங்கியின் பாஸ் புக் நகல் அல்லது ரத்து செய்யப்பட்ட காசோலை
விநியோகஸ்தர் எண் மற்றும் LPG எண் - ரசீதில் மற்றும் வாடிக்கையாளர்களிடம் இருக்கும் DGCC புத்தகத்தில் இருக்கும்.
வங்கியின் IFSC குறியீடு, காசோலை புத்தகத்தில் இருக்கும்.
காயல்பட்டினத்தில் உள்ள மூன்று பிரதான வங்கிகளிலும் இந்த படிவத்தை சமரிப்பிக்கலாம் என அரசு தெரிவிக்கிறது. அந்த வங்கிகளின் IFSC விபரம்
வருமாறு:
(1) CENTRAL BANK OF INDIA (IFSC குறியீடு: CBIN0280928)
(2) ICICI BANK (IFSC குறியீடு: ICIC0006153)
(3) INDIAN OVERSEAS BANK (IOB) (IFSC குறியீடு: IOBA0000491)
விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட விநியோகஸ்தர் - படிவத்தின் அடியில் உள்ள ஒப்புதல் ரசீதை வாடிக்கையாளரிடம் வழங்குவார்.
முன்னர் கண்டது போல், ஆதார் எண் இல்லாதவர்கள், படிவம் 3 அல்லது படிவம் 4, இரண்டில் ஏதாவது ஒன்றை நிரப்பி, வங்கியிலோ (படிவம் 3),
விநியோகஸ்தரிடமோ (படிவம் 4) வழங்கலாம். இரண்டு விண்ணப்பத்தையும் நிரப்ப தேவையில்லை.
ஆதார் எண் இல்லாத வாடிக்கையாளர்கள் - தங்கள் காஸ் சிலிண்டர் வழங்கும் நிறுவனங்களிடம் - இணையதளம் வழியாகவே, தங்கள் வங்கி கணக்கு விபரங்களை சமர்ப்பிக்கலாம். இந்த முறையை பயன்படுத்தி, ஆதார் எண் இல்லாதவர்கள், படிவங்கள் (3 மற்றும் 4) நிரப்புவதை தவிர்க்கலாம்.
இந்த சேவையை பயன்படுத்த, வாடிக்கையாளர்கள், தங்களுக்கு காஸ் சிலிண்டர் வழங்கும் நிறுவனத்தின் இணையதளத்தை - கீழ் காணும் முகவரிகளில் - நாடவேண்டும்.
(1) IOCL / காஹிரா இணைப்பு உள்ளவர்கள்
http://indane.co.in/new_customer.php
(2) BPCL / வேலவன் காஸ் ஏஜன்சி இணைப்பு உள்ளவர்கள்
http://my.ebharatgas.com/bharatgas/main.jsp?opt=about
(3) HPCL இணைப்பு உள்ளவர்கள்
http://myhpgas.in/myHPGas/Login.aspx
[தொடரும்]
------------------------------------------------------------------------
பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5 | பாகம் 6 | பாகம் 7 | பாகம் 8 | பாகம் 9 | பாகம் 10
|