பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5 | பாகம் 6 | பாகம் 7 | பாகம் 8 | பாகம் 9 | பாகம் 10
------------------------------------------------------------------------
உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, Direct Benefits Transfer For LPG (DBTL) Consumers Scheme திட்டத்தில் இணையாமல் இருக்கும் வாடிக்கையாளர்களை - அரசு, NOT TRANSFER COMPLIANT (NTC) என காண்கிறது.
திட்டம் அமலுக்கு வரும் ஜனவரி 1, 2015 முதல் 3 மாதங்களுக்கு (மார்ச் இறுதி வரை), வாடிக்கையாளர்கள் - மானியத் தொகையில் காஸ் சிலிண்டர் பெறலாம். அதாவது - அவர்கள் இல்லம் தேடி காஸ் சிலிண்டர் கொண்டு வரும் விநியோகஸ்தர், அவர்களிடம் வழக்கம் போல் சுமார் 400 ரூபாய் மட்டுமே வசூலிப்பார்.
இந்த காலக்கட்டத்தை, அரசு - GRACE PERIOD என அழைக்கிறது. இந்த காலக்கட்டம் நிறைவடைவதற்கு முன்னர், வாடிக்கையாளர், ஆவணங்களை சமர்ப்பித்து, மானியங்களை வங்கி கணக்கில் பெற, CASH TRANSFER COMPLIANT (CTC) என மாறி கொள்ளலாம்.
3 மாதத்திற்குள்ளும் (அதாவது மார்ச் 2015க்குள்), வாடிக்கையாளர் - Direct Benefits Transfer For LPG (DBTL) Consumers Scheme திட்டத்தில் இணையவில்லை என்றாலும், மேலும் 3 மாதம் வாய்ப்பினை அரசு வழங்குகிறது. இந்த காலக்கட்டம் - ஏப்ரல் 2015 முதல் ஜூன் 2015 வரை தொடரும். இந்த காலக்கட்டத்தினை, அரசு - PARKING PERIOD என அழைக்கிறது.
இந்த காலக்கட்டத்தில், NTC வாடிக்கையாளர் (திட்டத்தில் இணையாத வாடிக்கையாளர்) - முழு சந்தை தொகையை (சுமார் 750 ரூபாய்) செலுத்தி - காஸ் சிலிண்டர் பெறவேண்டும். இந்த காலக்கட்டத்திற்குள் (அதாவது - Parking Period), அவர் திட்டத்தில் இணைந்தால், ஒரு முறை அரசு வழங்கும் நிரந்தர முன் தொகையுடன் (ரூபாய் 568) (ONE-TIME, PERMANENT ADVANCE) சேர்த்து , அவர் ஏற்கனவே [ஏப்ரல் - ஜூன் காலக்கட்டத்தில்] தனது கையில் இருந்து செலவு செய்த மானியத் தொகையும் (ஒரு சிலிண்டருக்கு சுமார் 350 ரூபாய் என) - வங்கி கணக்கில் வழங்கப்படும்.
இரண்டாவது அவகாச காலக்கட்டத்திலும் வாடிக்கையாளர் - இந்த திட்டத்தில் சேரவில்லை என்றாலும், அதன் பிறகும் (ஜூலை 2015 முதல்) அவர் இந்த திட்டத்தில் இணையலாம். இருப்பினும் - PARKING PERIOD காலக்கட்டத்தில், அவர் கையில் இருந்து அவர் செலுத்திய மானிய வித்தியாச தொகையை (ஒரு சிலிண்டருக்கு சுமார் 350 ரூபாய்) அவர் இழப்பார். அது அவருக்கு - வழங்கப்படாது. ஒரு முறை அரசு வழங்கும் நிரந்தர முன் தொகை(ரூபாய் 568) (ONE-TIME, PERMANENT ADVANCE) மற்றும் இனி வரும் காலத்திற்கான மானியம் மட்டுமே அவருக்கு வழங்கப்படும்.
[தொடரும்]
------------------------------------------------------------------------
பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5 | பாகம் 6 | பாகம் 7 | பாகம் 8 | பாகம் 9 | பாகம் 10
|