இந்தியாவின் முன்னணி தரவரிசையிலுள்ள சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், காயல்பட்டினம் குத்துக்கல் தெருவைச் சேர்ந்த எஸ்.எம்.டி.இஸ்மாஈல் என்ற கிஃப்டோ இஸ்மாஈல் - தைக்கா கதீஜா உம்மா தம்பதியின் மகளும், தைக்கா செய்யித் அஹ்மத் மற்றும் செய்கு சுலைமான் லெப்பை ஆகியோரின் பேத்தியுமான மாணவி எம்.ஐ.ஃபாத்திமா ஹஃபீளா பல் மருத்துவத்துவம் பயின்று டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
29.11.2014 சனிக்கிழமையன்று, சென்னை ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ பல்கலைக் கழகக் கேளரங்கில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. துணை வேந்தர் வி.ஆர்.வெங்கடாச்சலம் இவ்விழாவிற்குத் தலைமையேற்று, கல்லூரியில் மருத்துவக் கல்வி கற்றுத் தேர்ந்துள்ள இம்மாணவி உள்ளிட்ட 340 மாணவ-மாணவியருக்கு பட்டச் சான்றிதழ்களை வழங்கினார்.
புது டில்லியிலுள்ள இந்தியப் பல்கலைக் கழகங்களின் கூட்டமைப்பான Association of Indian Universitiesயின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ஃபுர்கான் கமர் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
இன-மத பேதமற்ற முறையில் மருத்துவப் பணியாற்றுவதாகவும், இக்கல்லூரியின் புகழ் மேலோங்கப் பாடுபடுவதாகவும் மாணவ-மாணவியரிடம் உறுதிமொழி பெறப்பட்டதுடன் விழா நிறைவுற்றது.
டாக்டர் பட்டம் பெற்ற மாணவி எம்.ஐ.ஃபாத்திமா ஹஃபீளாவை, அவரது குடும்பத்தினர், உற்றார் - உறவினர் மற்றும் சென்னை வாழ் காயலர்கள் வாழ்த்தினர்.
கீழ்க்காணும் இணைப்புகளில் சொடுக்கி, பட்டமளிப்பு விழாவின்போதான அசைபடப்பதிவைக் காணலாம்:-
அசைபடம் 1 அசைபடம் 2
தகவல்:
சென்னையிலிருந்து...
புகாரீ |