காயல்பட்டினம் பரிமார் தெருவில் அமைந்துள்ள மஹான் ஷெய்கு நூருத்தீன் வலிய்யுல்லாஹ் தர்ஹாவில், 103ஆம் ஆண்டு கந்தூரி விழா நிகழ்ச்சிகள் இம்மாதம் 09ஆம் நாள் செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றன.
அன்று மாலையில், கடைப்பள்ளி இமாம் எம்.ஐ.செய்யித் முஹம்மத் புகாரீ தங்ஙள் தலைமையில் கத்முல் குர்ஆன் ஓதப்பட்டு, மஹான் அவர்களின் பெயரில் ஈஸால் தவாப் செய்யப்பட்டது. அன்றிரவு திக்ர் மஜ்லிஸும், அதனைத் தொடர்ந்து மஹான் அவர்களின் வாழ்க்கைச் சரித சொற்பொழிவும் நடைபெற்றது.
துவக்கமாக மவ்லவீ மீர் காஸிம் ஸமதானீ - ‘ஸலவாத்தின் சிறப்புகள்’ எனும் தலைப்பிலும், அவரைத் தொடர்ந்து, அல்ஜாமிஉல் கபீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வரும், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ, ‘மஹான் ஷெய்கு நூருத்தீன் வலிய்யுல்லாஹ் அவர்களின் வாழ்க்கைச் சரிதம்’ என்ற தலைப்பிலும் சொற்பொழிவாற்றினர்.
மறுநாள் - டிசம்பர் 10 புதன்கிழமை மாலையில் பேண்டு வாத்தியத்துடன் பால்குட ஊர்வலமும், இரவில் தஃப்ஸ் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து வான வேடிக்கைகளுடன் யானை - பல்லக்கு ஊர்வலமும், சிலம்ப விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
தகவல் உதவி:
ஹாஃபிழ் ஷாஹுல் ஹமீத் ஃபைஸல்
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) பரிமார் தெருவில் நடைபெற்ற கந்தூரி தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |