காயல்பட்டினத்தில் செயல்படுத்துவதற்காக தமிழக அரசால் அனுமதிக்கப்பட்டு, நிதியொதுக்கீடும் செய்யப்பட்டுள்ள பயோகேஸ் திட்டத்தை, மாநில அரசே நேரில் தலையிட்டு நிறைவேற்றிடுமாறு, காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) சார்பில், அதன் செயலாளர் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் - முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு கோரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளார். அதன் வாசகம் வருமாறு:-
எமதூர் காயல்பட்டினத்தில், குப்பையிலிருந்து எரிவாயு தயாரிக்கும் பயோகேஸ் எரிவாயு நிலையம் அமைய அரசு நிதியொதுக்கீடு செய்துள்ளதாக அறிகிறோம்.
நகராட்சி மூலம் இத்திட்டம் நடைமுறை செய்ய நீண்ட காலமாகி வருகிறது. பொதுமக்களுக்கு அவசியமான இத்திட்டம் விரைவில் நடைபெற வேண்டும் என ஊர் பொதுமக்களும், எம் சங்கமும் பெரிதும் எதிர்பார்க்கிறோம்.
தங்களின் நேரடியான தலையீடு மூலம் இத்திட்டம் நிறைவேற நாடுகிறோம்.
இவ்வாறு அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
பயோகேஸ் திட்டம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|