சவுதி அரேபியாவில் நடந்த பள்ளிக்கூடங்களுக்கு இடையிலான போட்டிகளில் காயல் மாணவி மும்தாஜ் ருக்கையா முதல் மற்றும் மூன்றாம் பரிசுகளை வென்றுள்ளார்.
(மறைந்த) மஹ்மூத் புஹாரி, ஹாஜா மும்தாஜ் ருக்கையா, ஹாஜி ஜரூக், ஹாஜா ஜீனத் ஆகியோரின் பேத்தியும், எம்.பி.சேக் தாவூத் மற்றும் பாத்திமா ஜென்னத் ஆகியோரின் மகளுமான இவர் - சவுதி அரேபியா தமாம் நகரில் உள்ள அல் ஹோசமா சர்வதேச பள்ளிக்கூடத்தில் (Al Khozama International School) பயின்று வருகிறார்.
பீவேஸ் குழும பள்ளிக்கூடங்கள் ஏற்பாட்டில் 4வது ஆண்டாக நடைபெற்று வரும், மாதிரி ஐக்கிய நாட்டு சபைகள் மாநாடு (PEEVES UNITED NATIONS SIMULATION CONFERENCE) போட்டிகளில் சமீபத்தில் கலந்துக்கொண்டு - தமாம் பகுதிக்கான (ZONAL) சிறந்த பேச்சாளருக்கான (BEST SPEAKER - ZONAL - FIRST PLACE) - முதல் இடத்தை மும்தாஜ் ருக்கையா வென்றார். அவருக்கு வழங்கப்பட்ட தலைப்பு Climate Change and Global Warming.
தொடர்ந்து சவுதி தலைநகர் ரியாத்தில் நடந்த இறுதி போட்டிகளில் சிறந்த மாதிரி தீர்மானத்தை வடிவமைத்தற்கான மூன்றாவது பரிசினையும் (BEST DRAFT RESOLUTION - SECURITY COUNCIL - THIRD PLACE) மும்தாஜ் ருக்கையா வென்றுள்ளார்.
தமாம் பகுதிகளில் இருந்து கலந்துக்கொண்ட மாணவியரில் பரிசினை வென்றவர் இவர் மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டிகள் குறித்த ஜீவன் தொலைகாட்சி (மலையாளம்) செய்தித் தொகுப்பினை காண இங்கு அழுத்தவும்
தகவல் மற்றும் புகைப்படங்கள்:
எம்.பி. சேக் தவ்வூத்,
தமாம், சவுதி அரேபியா. |