இந்தியா முழுவதும் மூன்று அரசு நிறுவனங்கள் - சமையல் எரிவாயு விநியோகம் தொழிலில் உள்ளன. அவர்கள் மூலமாக வாடிக்கையாளர்கள்
பெறும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மட்டுமே அரசு மானியம் வழங்குகிறது. அந்த மூன்று நிறுவனங்கள் -
இந்த மூன்று நிறுவனங்களில் இரண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே காயல்பட்டினத்தில் பெருவாரியான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
*** நகரில் BHARATH PETROLEUM CORPORATION LIMITED நிறுவனத்தின் விநியோகஸ்தர் - வேலவன் காஸ் ஏஜன்சி ஆகும். (விநியோகஸ்தரின்
மொத்த இணைப்புகள்: 1512)
*** நகரில் INDIAN OIL CORPORATION LIMITED நிறுவனத்தின் விநியோகஸ்தர் - காஹிரா (விநியோகஸ்தரின் மொத்த இணைப்புகள்: 4681)
சமையல் எரிவாயுக்கான (LPG) மானியம் பொது மக்களுக்கு நேரடியாக அவர்களின் வங்கி கணக்குக்கு வழங்கப்படும் (Direct Benefits Transfer
For LPG (DBTL) Consumers Scheme) திட்டத்தில் இணைய - முன்னரே கண்டது போல் - இரு வழிகள் உள்ளன.
(1) ஆதார் எண் / அட்டை பெற்ற வாடிக்கையாளர்களுக்கான வழி (Aadhaar based cash transfer).
(2) ஆதார் எண் / அட்டை பெறாத வாடிக்கையாளர்களுக்கான வழி (Non-Aadhaar based Process).
இரு வழிகளுக்கும் - தலா இரு படிவங்கள் உள்ளன.
ஆதார் எண் வழிக்கான படிவங்கள் படிவம் 1 மற்றும் படிவம் 2 ஆகும்.
ஆதார் எண் இல்லாதவர்களுக்கான வழிக்கான படிவங்கள் படிவம் 3 மற்றும் படிவம் 4 ஆகும். [ஆதார் எண் இல்லாதவர்கள் இரண்டு படிவங்களில் ஒரு படிவம் தான் சமர்ப்பிக்க வேண்டும். முழு விபரம் தொடரும் பாகங்களில் வழங்கப்படும்].
படிவத்தை நிரப்புவதற்கு முன் - வாடிக்கையாளர்கள் சில ஆவணங்களை தயார் செய்து வைத்திருக்க வேண்டும்.
(1) வங்கி கணக்கு அவசியம். மேலும் - வங்கி கணக்கு, வாடிக்கையாளர் பெயரில் தான் இருக்க வேண்டும்
(2) 17 இலக்க வாடிக்கையாளர் எண்ணை (LPG ID) கண்டறிந்திருக்க வேண்டும். இந்த எண் - ரசீது மற்றும் விநியோகஸ்தர் வழங்கும் புத்தகத்திலும்
இருக்கும். கீழ்க்காணும் இணையதள வழிகள் மூலமும் - பதிவு செய்த மொபைல் எண்ணை வழங்கி - LPG ID அறியலாம்.
(3) ஆதார் எண் வழியில் இத்திட்டத்தில் இணைய உள்ளவர்கள் - தபால் மூலம் பெற்ற ஆதார் அட்டையையோ (நகல்) / இணையதளம் மூலம்
பதிவிறக்கம் செய்த ஆதார் அட்டையையோ (eAadhaar) தயாராக வைத்திருக்க வேண்டும்.
அடுத்து - ஆதார் எண் பெற்றுள்ளவர்கள் எவ்வாறு இந்த திட்டத்தில் இணைய வேண்டும் என்பதை காண்போம்.
[தொடரும்]
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 5:20 pm / 13.12.2014]
1. Re:... மொத்த இணைப்புகள் posted byKASALI MARICAR (KATALPATTINAM)[13 December 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 38442
காபி&பேஸ்ட் *** நகரில் BHARATH PETROLEUM CORPORATION LIMITED நிறுவனத்தின் விநியோகஸ்தர் - வேலவன் காஸ் ஏஜன்சி ஆகும். (விநியோகஸ்தரின் மொத்த இணைப்புகள்: 1512)
*** நகரில் INDIAN OIL CORPORATION LIMITED நிறுவனத்தின் விநியோகஸ்தர் - காஹிரா (விநியோகஸ்தரின் மொத்த இணைப்புகள்: 4681)
ஓரு ஊகத்தின் அடிப்படையில் கூறுகிறேன். வேலவன் கேஸ்க்கு 4681னும் காஹிரா கேஸ்க்கு 1512 இருக்க வாய்ப்பு. ஊர்ஜிதம் செய்து கொள்ளவும்.
[Administrator: எண்ணை நிறுவனங்களின் இணையதளம் மூலம் பெற்றத் தகவல். இருப்பினும் ஊர்ஜிதம் செய்யப்பட்டு, திருத்தங்கள் இருப்பின் செய்யப்படும்.]
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross