பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5 | பாகம் 6 | பாகம் 7 | பாகம் 8 | பாகம் 9 | பாகம் 10
------------------------------------------------------------------------
முந்தைய பாகங்களில் தெரிவித்தது போல், ஆதார் எண் இருந்து, ஆதார் எண் இல்லாதவர்களுக்கான வழியினை பயன்படுத்தக்கூடாது. ஏன் எனில்
- ஆதார் எண் இல்லாதவர்களுக்கான படிவம் 3 மற்றும் படிவம் 4 இல் - ஆதார் எண் இல்லை என்ற உறுதிமொழி கோரப்படுகிறது. தவறான
உறுதிமொழி வழங்கினால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் வாய்ப்புள்ளது.
தற்போது ஆதார் எண் பெற்றுள்ளவர்கள் இந்த திட்டத்தில் இணைவது எப்படி என்பதை விரிவாக காணலாம்.
ஆதார் எண் பெற்றுள்ளவர்கள் - Direct Benefits Transfer For LPG (DBTL) Consumers Scheme திட்டத்தில் இணைய இரண்டு படிவங்களை
பயன்படுத்த வேண்டும்.
(a) கணக்கு வைத்துள்ள வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டிய படிவம் 1
(b) காஸ் சிலிண்டர் வழங்கும் விநியோகஸ்தரிடம் சமர்ப்பிக்க வேண்டிய படிவம் 2
படிவம் 1 யை பதிவிறக்கம் செய்ய இங்கு அழுத்தவும்.
படிவம் 2 யை பதிவிறக்கம் செய்ய இங்கு அழுத்தவும்.
கணக்கு வைத்துள்ள வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டிய படிவம் 1
வாடிக்கையாளர்கள் நிரப்ப வேண்டிய படிவம் 1 மேலே வழங்கப்பட்டுள்ளது. இந்த படிவத்தை நிரப்பி, கணக்கு வைத்துள்ள வங்கியிடம்,
வாடிக்கையாளர் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த விண்ணப்பம் 6 தகவல்களை மட்டும் கோருகிறது.
(i) வங்கி கணக்கு எண்
(ii) பெயர்
(iii) விலாசம்
(iv) பாலினம்
(v) ஆதார் எண்
(vi) மொபைல் எண்
விண்ணப்பத்துடன் இணைப்பு:
(1) ஆதார் அட்டை நகல்
விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட வங்கி - படிவத்தின் அடியில் உள்ள ஒப்புதல் ரசீதை வழங்கும். சுமார் 7 நாட்களில் - வாடிக்கையாளர் வங்கி
கணக்கும், ஆதார் எண்ணும் இணைக்கப்பட்டதற்கான தகவல் வழங்கப்படும்.
காஸ் சிலிண்டர் வழங்கும் விநியோகஸ்தரிடம் சமர்ப்பிக்க வேண்டிய படிவம் 2
வாடிக்கையாளர்கள் நிரப்ப வேண்டிய படிவம் 2 மேலே வழங்கப்பட்டுள்ளது. இந்த படிவத்தை நிரப்பி, தங்களுக்கு காஸ் சிலிண்டர் வழங்கும்
விநியோகஸ்தரிடம் வாடிக்கையாளர் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த படிவம் இரு பாதியாக இருக்கும். இடது பாதியில், ஆதார் எண் நகல் (புகைப்படமும் தெரியும் விதமாக) ஒட்டப்படவேண்டும். எவ்வாறு
ஒட்டவேண்டும் என்ற மாதிரி படம் - படிவத்தில் இருக்கும்.
படிவத்தின் மறு பாதியில், ஏழு தகவல்கள் கோரப்பட்டுள்ளன. அவை -
(1) சிலண்டர் வழங்கும் அரசு நிறுவனம் பெயர் (IOCL/BPCL/HPCL)
(2) வாடிக்கையாளரின் விநியோகஸ்தர் பெயர்
(3) வாடிக்கையாளர் எண்
(4) 17 இலக்கு LPG எண்
(5) வாடிக்கையாளர் பெயர்
(6) மொபைல் எண்
(7) விலாசம் (ஆதார் எண்ணில் உள்ள விலாசமும், காஸ் சிலண்டர் பெறும் விலாசமும் வேறு என்றால் மட்டும் இந்த தகவல்
நிரப்பப்படவேண்டும்)
விண்ணப்பத்துடன் இணைப்பு:
(1) ஆதார் அட்டை நகல் (ஒட்டப்படவேண்டும்)
(2) விநியோகஸ்தர் வழங்கியுள்ள DGCC புத்தகத்தின் முதல் பக்க நகல் அல்லது சமீப ரொக்க ரசீது நகல்
(3) ஆதார் எண்ணில் உள்ள விலாசமும், சிலண்டர் பெறும் விலாசமும் மாறினால் மட்டும், விலாசத்திற்கான ஆதாரம் (ஆதார் அட்டை நகல் / குத்தகை ஒப்பந்தம் நகல் / தொலைப்பேசி, மின் இணைப்பு அல்லது அது போன்ற ஆதாரம் நகல் / அரசு கஜெட் அலுவலர் சான்றுதல் வழங்கிய சுய படிவம் / இல்லம் ஒதுக்கப்பட்ட கடிதம் / எல்.ஐ.சி. பாலிசி கடிதம் / ஓட்டுனர் உரிமம் / வாக்காளர் அட்டை / பாஸ்போர்ட் / ரேஷன் அட்டை / வீடு பத்திர பதிவு நகல்)
விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட விநியோகஸ்தர் - படிவத்தின் அடியில் உள்ள ஒப்புதல் ரசீதை வழங்குவார்.
இந்த இரண்டு படிவங்களை மட்டும் - மேலே குறிப்பிடப்பட்டுள்ள வழி முறைகளில் - வங்கியிலும் (படிவம் 1), விநியோகஸ்தரிடமும் (படிவம் 2) சமர்ப்பித்தால் போதுமானது.
ஆவணங்கள் சரியாக இருப்பின் - இதன் நிறைவில், வாடிக்கையாளர், தனது வங்கி கணக்கில் - அரசிடம் இருந்து - முன் தொகை (ONE TIME, PERMANENT ADVANCE) மற்றும் மானியம் (SUBSIDY) பெற தயாராக உள்ள நிலையை (CASH TRANSFER COMPLIANT - CTC) அடைந்து விடுவார்.
[தொடரும்]
------------------------------------------------------------------------
பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5 | பாகம் 6 | பாகம் 7 | பாகம் 8 | பாகம் 9 | பாகம் 10
|