காயல்பட்டினத்தில் வடகிழக்குப் பருவமழை தொடர்ச்சியாகப் பெய்து, நகரே வெள்ளக்காடான நிலையில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மழை பெய்யாதிருந்தது. இந்நிலையில், இம்மாதம் 09ஆம் நாள் துவங்கி, அவ்வப்போது சாரலாகவும், சிறுமழையாகவும் பெய்து வருகிறது.
நேற்று (டிசம்பர் 12 வெள்ளிக்கிழமை) 07.50 மணி துவங்கி, 10.30 மணி வரை சிறுமழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக, இன்று 11.00 மணியளவில் சில நிமிடங்கள் சிறுமழை பெய்துள்ளது. நேற்று மழை பெய்த பின் பதிவு செய்யப்பட்ட படக்காட்சிகள்
இன்று 17.00 மணி நிலவரப்படி, நகரில் குளிர்ந்த வானிலை நிலவுகிறது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. வெயில் இல்லையெனினும் வெளிச்சம் உள்ளது.
காயல்பட்டினத்தில் மழை குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |