Direct Benefits Transfer For LPG (DBTL) Consumers Scheme திட்டத்தில் இணைய விண்ணப்பம் செய்தவர்களுக்கு - அவர்களின் விண்ணப்பங்களின் நிலை, குறுஞ்செய்தியாக (SMS) அனுப்பப்படும்.
அவ்வாறு தகவல் பெறாதவர்கள் - காஸ் சிலிண்டர் வழங்கும் எண்ணை நிறுவனங்களின் இணையதளத்தில் உள்ள - விண்ணப்ப நிலை அறிவதற்கான
பிரத்தியேக பக்கத்தில் - தங்கள் மொபைல் எண்ணை வழங்கியோ, ஆதார் எண்ணை வழங்கியோ, தங்கள் LPG எண்ணை வழங்கியோ -
விண்ணப்பங்களின் நிலையினை அறியலாம்.
இது தவிர - வாடிக்கையாளர்கள், தங்கள் ஆதார் எண் - வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதா என அறிய மற்றொரு வழியும் உண்டு.
Query Service on Aadhaar Mapper (QSAM) என்ற சேவை மூலம் இந்த தகவலை - சாதாரண மொபைல் மூலமும் - பெறலாம்.
(1) இந்த சேவையை பயன்படுத்த x99x99# என்ற எண்ணை மொபைலில் இருந்து டயல் செய்ய வேண்டும்
(2) இரண்டாம் கட்டமாக ஆதார் எண் கோரப்படும்
(3) மூன்றாவது கட்டமாக ஆதார் எண் ஊர்ஜிதம் செய்யப்படும்
(4) நான்காவது கட்டத்தில் - சமர்ப்பிக்கப்பட்ட ஆதார் எண், எந்த வங்கியின் கணக்கோடு இணைக்கப்பட்டுள்ளது என்ற விபரம் வரும்
கூடுதல் விபரம் விரும்புபவர்கள் - www.mylpg.in என்ற அரசு ஏற்படுத்தியுள்ள இணையதளத்தை அணுகலாம்.
1. Re:... posted byshaik abbas faisal D (kayalpatnam)[27 December 2014] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 38580
ஆதார் கார்ட் உள்ளவர்கள் மானியத்திற்கு விண்ணப்பித்து தங்கள் இணைப்பு வங்கி கணக்கோடு லிங்க் ஆகி விட்டது என்பதை தெரிந்து கொள்ள *99*99# அடித்து ஆதார் எண்ணை பதிவு செய்து அதனை உறுதி செய்து தெரிந்து கொள்ளலாம்.
ஆனால் ஆதார் கார்டு இல்லாமல் விண்ணப்பித்தவர்கள் எவ்வாறு தெரிந்து கொள்வது என்பதனை தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross