தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. காயல்பட்டினத்தில் பெய்துள்ள மழை காரணமாக, நகரின் தாழ்வான பகுதிகளில் நீண்ட நாட்களாக மழைநீர் தேங்கியுள்ளது. அளவுக்கதிமாகத் தேங்கியிருந்த மழை நீர் கடலை நோக்கி ஓரளவுக்கு வெட்டி விடப்பட்டுள்ள நிலையிலும், பல இடங்களில் இன்னமும் மழை நீர் தேங்கியே காணப்படுகிறது.
நகரிலுள்ள குடியிருப்புகளுக்கு நகராட்சியின் சார்பில் குடிநீர் வினியோகம் செய்வதற்காக, ஒவ்வொரு பகுதியிலும் உள்ள குடிநீர் வினியோகக் குழாய் தொட்டிகள் (சம்ப்) மழை நீர் தேங்கியே காணப்படுகிறது. அவ்வாறு தேங்கிய மழை நீர், காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் மின் மோட்டார் பம்ப் செட் துணையுடன் உறிஞ்சியகற்றப்பட்டு வருகிறது.
நேற்று (டிசம்பர் 12 வெள்ளிக்கிழமை) 16.00 மணியளவில், காயல்பட்டினம் தீவுத்தெருவில், ஈக்கியப்பா தைக்கா அருகிலுள்ள குடிநீர் வினியோகக் குழாய் தொட்டியில் தேங்கியிருந்த மழை நீர் நகராட்சியின் சார்பில் உறிஞ்சி வெளியேற்றப்பட்ட காட்சி:-
தொடர்மழை காரணமாக, நகரின் நிலத்தடி நீர்மட்டம் தரையளவுக்கு உள்ளது. எனவே, இத்தொட்டியில் தேங்கிய மழை நீர் வெளியேற்றப்பட்டபோது, தொட்டியினுள் ஆங்காங்கே காணப்பட்ட ஊற்றுகளிலிருந்து நீர் பீறிப் பாய்ந்துகொண்டிருந்தது.
காயல்பட்டினத்தில் மழை குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |