காயல்பட்டினம் சமூக நல்லிணக்க மையம் - தஃவா சென்டர் சார்பில், தர்பிய்யா 4ஆம் பிரிவிற்கான இரண்டாவது வகுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அந்நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
நமது தஃவா சென்டர் சார்பாக பிறமத சகோதரர்களுக்கு எவ்வாறு தஃவா செய்வது என்ற தஃவா தர்பிய்யா வகுப்பானது தற்போது நான்காவது Batch-ல் கிறிஸ்துவர்களுக்கு எவ்வாறு தஃவா செய்வது? என்ற வகுப்பு 07.12.14 ஞாயிறு அன்று சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வகுப்பை நடத்தித்தந்திட சென்னை சார்ந்த முன்னால் பாஸ்டராக இருந்து இஸ்லாத்தை தன் வாழ்வியலாக ஏற்று தாய்யியாக பணிபுரிந்துக் கொண்டிருக்கும் சகோதரர் உமர் ஃபாரூக் அவர்கள் கிறிஸ்துவர்களுக்கு எவ்வாறு தஃவா செய்வது? என்ற தலைப்பில் வகுப்பை காலை 10 மணி முதல் 1 வரை நடத்தினார்கள்.
இதில் கிறிஸ்தவம் பற்றிய அறிமுக வகுப்பில் அலசப்பட்ட கேள்விகள்.
..... கிறிஸ்தவம் பற்றி.....
• கிறிஸ்தவம் எப்போது & எங்கே உருவானது? கிறிஸ்தவர்கள் என்ற வார்த்தை எப்போது தொடங்கியது ?
• கிறிஸ்தவத்தில் எத்தனை வகையுள்ளது?அந்தந்த வகையினரின் கொள்கைகள் என்னென்ன ?
பவுல் யார்? இவருக்கும் கிறிஸ்தவத்திற்கும் என்ன சம்மந்தம் ?
..... பைபிளை பற்றி .....
• பைபிள் எப்போது எழுதப்பட்டது? எத்தனை பைபிள்கள் உள்ளன? பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளை பற்றி விளக்கம்?
• பைபிள் இறைவனின் வார்த்தையா? இல்லை என்றால் அதை எழுதியவர் யார்?
• பைபிளில் முரண்பாடுகள் உள்ளதா? ஆம் என்றால் சிறு உதாரணம் தரவும்?
• இயேசுவுக்கு இறக்கப்பட்டது இந்த பைபிள் தானா? அல்லது வேறு ஏதும் இருக்கிறதா?
• சுவிஷேசங்களை எழுதியவர்கள் யார்? (யோவான்,மார்க்,மத்தேயு,லூக்கா இவர்கள் யார்?)
..... கொள்கை பற்றி.....
• திரித்துவம் என்றால் என்ன? இதற்கும் கிறிஸ்தவத்திற்கும் என்ன சம்மந்தம்?
• இயேசு "நானே சத்தியமும் வழியும் ஜீவனுமாயிருக்கிறேன் என்று சொல்வதால் அவர்தான் கடவுள் என்று கிருஸ்தவர்கள் கூறுகிறார்களே .......அது பற்றி தங்களின் கருத்து.
• இயேசுவை கர்த்தர் என்றும் ,தேவ குமாரன் என்றும்,இறைவனின் தூதர் என்றும் கூறுகிறார்களே எது உண்மை?
• பரிசுத்த ஆவி என்றால் என்ன?
• நியாய தீர்ப்பு நாளில் ஏசுவின் உதவி இருக்காது என்பதை பைபிளில் இருந்து எவ்வாறு விளக்குவது?
..... சிலுவை பலி பற்றி.....
1.இயேசு அனைவரின் பாவத்திற்காகவும் உயிர் நீத்தார் என்பது உண்மையா?
2.அவர் சிலுவையில் அறைய பட்டாரா?
3.உயிர்தெழுதல் பற்றி....
..... அற்புதம் பற்றி.....
• கிறிஸ்தவர்கள் அற்புதம் செய்வதாக சொல்கிறார்களே அது உண்மையா?
• இது போன்று செய்பவர்களிடம் இது உண்மை இல்லை என்று சொல்லி எப்படி சத்தியத்தை எடுத்து சொல்வது?
• அற்புதத்தின் மூலம் குணம் கிடைத்தது என்று சொல்கிறார்களே அவர்களிடம் எப்படி நாம் தஃவா செய்வது?
..... பிற கேள்விகள்.....
• பர்னபாஸ் சுவிஷேசம்,சாவுக் கடல் சுருள் இவைகள் என்ன?
• இயேசு கூறும் தேற்றவாளன் யார்?
• முஹம்மது நபி (ஸல்) அவர்களை பற்றி பைபிள் என்ன கூறுகிறது?
• டாவின்சி கோடு (Da Vinci Code) என்பது பற்றி....?
• அந்நிய பாஷை உன்மையா?
• கஃபா பற்றிய செய்தி பைபிளில் உள்ளதா?
• Israel என்ற ஒரு தேசம் உருவாகும் என்று பைபிளில் முன்னறிவுப்பு உள்ளதா?
• கிறிஸ்தவம் பற்றி குர்ஆன் கூறுவதென்ன?
• ஈஸா (அலை) அவர்களுக்கு திருமணம் நடந்ததா ?
• ஈஸா (அலை) அவர்களின் இரண்டாம் வருகை பற்றி பைபிள் & குர்ஆன் / ஹதீஸ் கூறுவது என்ன?
• ஆதியாகமம் 2:26 வசனத்தை விளக்கவும்.
போன்ற கேள்விகளுக்கு மாணவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் விளக்கம் தந்தார்கள். மேலும் அதிலிருந்து மாணவ-மாணவியர்கள் கேட்ட கேள்விகளுக்கு சிறப்பான பதில்களை தந்தார்கள்.
பின்பு மதியம் 3.30 முதல் அஸர் வரை துஆ மனனம் வகுப்பை சகோ.பிலால் அவர்கள் நடத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து தாய்யிகளாக பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் மாணவர்கள் உளத்தூய்மையுடன் தஃவா பணி செய்திட வேண்டும் என்பதற்க்காக தூய உள்ளம் எது? தீய உள்ளம் எது? என்ற தலைப்பில் மௌலவி. ஷேக் அலி ஃபிர்தெளஸி அவர்கள் சிறப்பு அஹ்லாக் வகுப்பை நடத்தினார்கள். இதில் தீமையிலிருந்து தவிர்து தூய உள்ளம் கொண்டு இறைநேசம் பெறுவது எப்படி என்று அறிவுறுத்தினார்கள்.
மாலை 05.30 மணியளவில் மாணவ - மாணவியர்களுக்கான தனித்தனியாக பேச்சு பயிற்சி நடத்தப்பட்டது. இன்றைய வகுப்பு இனிதே முடிவடைத்தது. அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஃவா சென்டர் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |