தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதார் பதிவுக்கான நிரந்தர முகாம்கள் பதினொறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகர பகுதிகளுக்கு ஆதார் பதிவுக்கான முகாம்
1. நகராட்சி அலுவலக (பழைய கட்டிடம்) தூத்துக்குடி
கோவில்பட்டி மற்றும் காயல்பட்டினம் நகராட்சிப்பகுதிகளுக்கு ஆதார் பதிவுக்கான முகாம்
1. நகராட்சி நடுநிலைப்பள்ளி, கோவில்பட்டி
2. சேவை மையம், புதியபேருந்து நிலைய வளாகம், காயல்பட்டிணம்
கிராமப்பகுதிகளுக்கு ஆதார் பதிவுக்கான முகாம்கள்
1. சார் ஆட்சியர் அலுவலகம், தூத்துக்குடி (தூத்துக்குடி கிராமப்புற பகுதிகள் மட்டும்)
2. வட்டாட்சியர் அலுவலகம், ஸ்ரீவைகுண்டம்
3. வட்டாட்சியர் அலுவலகம், திருச்செந்தூர்
4. வட்டாட்சியர் அலுவலகம், சாத்தான்குளம்
5. வட்டாட்சியர் அலுவலகம், கோவில்பட்டி
6. வட்டாட்சியர் அலுவலகம், விளாத்திகுளம்
7. வட்டாட்சியர் அலுவலகம், ஒட்டப்பிடாரம்
8. வட்டாட்சியர் அலுவலகம், எட்டையபுரம்
இம்முகாம்கள் சனி மற்றும் ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும். செவ்வாய் கிழமைகளில் மட்டும் செயல்படாது.
இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பதிவு செய்து, புகைப்படம் எடுக்காமல் விடுபட்ட பொதுமக்கள் தங்கள் குடும்பத்திலுள்ள 5 வயதும் அதற்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பதிவு செய்து கொள்ளலாம் என்று ஆட்சியர் ரவிகுமார் அறிவித்துள்ளார்.
தகவல்:
www.tutyonline.com |