டிசம்பர் 6, 1992 - உத்தர் பிரதேஷ் மாநிலம் அயோத்தி நகரில் இருந்த பாபர் மசூதி - தீவிரவாத அமைப்புகளால் இடிக்கப்பட்டது. அதனை கண்டித்தும், மசூதி இருந்த இடத்தில் மீண்டும் மசூதி கட்டிட கோரியும் - ஒவ்வொரு ஆண்டும் - முஸ்லிம் அமைப்புகளால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் - ஆர்பாட்டங்களும், வெவ்வேறு வகையான நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
காயல்பட்டினத்தில் ஒவ்வொரு ஆண்டும் - இத்தினத்தில் கடைகள் அடைக்கப்படுகிறது. டிசம்பர் 6 ஆன இன்றும் காயல்பட்டினத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் - இந்த தினத்தில், கருப்பு சட்டை அணிந்து மாநிலம் முழுவதும் ஆர்பாட்டங்கள் நடத்தப்போவதாக அறிவித்திருந்தது. அதன்படி - இன்று காலை, சீதக்காதி திடல் அருகில் - த.மு.மு.க. ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் - த.மு.மு.க. நிர்வாகிகள் உட்பட - பொது மக்கள் பெருந்திரளாக கலந்துக்கொண்டனர்.
புகைப்படங்களில் உதவி:
'தமிழன்' முத்து இஸ்மாயில் |