Re:...கண்களும் குளமாகும் என்பது திண்ணம்... posted byN.S.E.மஹ்மூது (காயல்பட்டணம்)[14 December 2014] IP: 59.*.*.* India | Comment Reference Number: 38447
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
இந்த ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்துக்கொள்ள சென்றபோது சகோதரர் மஹ்மூது லெப்பை அவர்கள் வேண்டுகோள் விடுத்ததை செவியேற்கும் வாய்ப்பும் எமக்கு கிடைத்தது - அது மிகவும் உருக்கமான வேண்டுகோள்.
நேற்றுக்கூட ஒரு ஜனாஸாவை அவர்கள் குடும்பத்தார் வழமையாக அடக்கக்கூடிய மையவாடியில் தண்ணீர் தேங்கி நின்றதால் வேறொறு பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்தார்கள் – அந்த பள்ளி மையவாடியும் இக்கட்டான நிலையில்தான் இருக்கிறது.
-----------------------
பொதுவாக ஒருவர் மௌத்தாகிவிட்டால் அந்த வீட்டுக்கு சென்று மையித்தை போய் பார்ப்போம் , அவர்களுக்கு ஆறுதல் சொல்வோம், ஜனாஸாவுடன் சென்று தொழுது, அடக்கம் செய்தபின் நம் இருப்பிடம் திரும்புவோம். நம் வீட்டிலே உள்ளவர்கள் மௌத்தானால் கஃபன் துணி வாங்குவது முதல் அத்தனை செலவினங்களுக்கும் யாரிடமாவது பணத்தை கொடுத்து செய்ய சொல்லுவோம் அல்லது சிலர் தாங்களே முன்னின்று அவைகளுக்கான பணம் பட்டுவாடா செய்வார்கள்.
அதிகப்படியாக சொல்லவேண்டுமானால் ஜனாஸாவை எங்கள் குடும்பத்தவர்கள் அடக்கப்பட்டிருக்கும் இந்த இடத்தில் அடக்குங்கள் அந்த இடத்தில் அடக்குங்கள் என்று அந்த இடத்தின் நிலையை (புதிதாக ஜனாஸா அடக்கபட்டிருக்கிறதா? அல்லது வேறு ஏதும் இடையூறு இருக்கிறதா என்பதை) அறியாமல் பள்ளி நிர்வாகத்துடன் வாக்குவாதம் செய்வோம். இதைத் தவிர மையவாடியில் இருக்கின்ற எந்த சிறமமும், குறை, நிறைகளும் நமக்கு தெரியாது.
---------------------------
ஜனாஸாக்களை குளிப்பாட்டி , அடக்கம் செய்வது வரை உள்ள பணிகளை அல்லாஹ்வுக்காக வேண்டி செய்துவரும் சகோதரர் மஹ்மூது லெப்பை அவர்கள் ஜனாஸாக்களை அடக்குவதில் என்னென்ன சிறமங்கள் இருக்கிறது இந்த நிலை நீடித்தால் மேலும் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை நம் எல்லோரையும் விட மிகவும் நன்கு அறிந்தவர். ஆகவே சகோதரர் விடுத்திருக்கும் இந்த வேண்டுகோளை ஏற்று நாம் அனைவரும் அவரவர்களால் இயன்றளவு உதவிட வேண்டும். அதுவும் துரிதமாக உதவுவதில்தான் மிகுந்த பயன் உள்ளது.
எந்த ஓர் அபாயகரமான சூழலும் ஏற்படும்பொழுது அதற்கு நாம் அவசியம் உதவ வேண்டும் என்ற எண்ணம் நம்மவர்கள் மனதில் ஏற்படும் - அந்த எண்ணத்தை உடனே செயல்படுத்த வேண்டும். அப்படி உடனே செய்யவில்லையானால் அதன் வீரியம் குறைந்துவிடும் அது மறக்கடிக்கப்பட்டுவிடும் அதை மறந்துவிடுவோம் இதுதான் மனிதர்களின் இயல்பு.
இன்றைய தினம் வரை எல்லா மையவாடிகளும் தண்ணீர் தேங்கிய நிலையிலேயே உள்ளன. நம்மவர்கள் அதை ஒருமுறை சென்று பார்த்தால் மையவாடிகள் மட்டும் குளமாக தெரியாது - தூய எண்ணம் உள்ளவர்களின் கண்களும் குளமாகும் என்பது திண்ணம்.
------------------------------
இந்த ஜனாஸாவை அடக்க தோண்டப்பட்டிருக்கிற மண்ணறையை இந்த செய்தியிலே காட்டப்பட்டிருக்கிற படத்தில் பாருங்கள் எவ்வளவு உயரம் என்று - இரண்டு அடிகள்கூட இல்லை என்றே தெரிகிறது. எப்படியோ சமாளித்து அடக்கிவிட்டார்கள். இது போல் எத்தனை ஜனாஸாக்களை அடக்க முடியும் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்!.
இந்த நிலை நீடித்தால் ஊரில் மௌத்தானவர்களை வெளியூருக்கு கொண்டு போய்தான் அடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதையும் உணரவேண்டும்.
நாம் ஒவ்வொருவரும் இதை சிந்தித்து துரிதமாக செயல்பட்டோமானால் இன்ஷா அல்லாஹ்! நம் மையவாடிகள் அத்தனையும் மேடுகளாகி ஜனாஸாக்களை அடக்க சிரமம் ஏற்படாமல் இருக்கும்.
வல்ல அல்லாஹ்! நம் அனைவருக்கும் அந்த எண்ணத்தையும் அதை நிறை வேற்றக்கூடிய ஆற்றலையும் தருவானாக ஆமீன். வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross