சிறப்புக் கட்டுரைகள்:எனக்கொரு மகன் பிறப்பான்; அவன் என்னைப் போலவே இருப்பான்! [ஆக்கம் - டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ் (ஓ)] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...எனக்கொரு மகன் பிறப்பான்.. posted bymackie noohuthmbi (kayalpaattinam)[15 December 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 38450
"எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னை போலவே இருப்பான்'
என்பதோடு நிறுத்திக் கொண்டால் பரவா இல்லை.
"தனக்கொரு பாதையை வகுக்காமல்
தன் தலைவன் வழியிலே நடப்பான்"
என்ற கொள்கையுடன் வாரிசாக அரியணையில் அமர்ந்தாலும் பரவா இல்லை.
இவற்றை எல்லாம் தாண்டி தன் தந்தை பெயரை கெடுப்பதில் - தன் தந்தையின் வழிமுறையே தவறு என்று தண்டோரா அடித்து "என் வழி தனி வழி" என்று முடிசூட நினைப்பதுதான் தவறாக இருக்கிறது.
அரசியல் தலைவர்களில் பல ரகம் உண்டு. திருமணம் ஆகாமலே தலைவராக ஆகி தொடர்ந்து அந்த பதவியிலேயே இருந்து ஒய்வு பெறுபவர்கள். திருமணம் ஆகாமலே தலைவராகி தொடர்ந்து அந்த பதவியில் இருக்கும்போதே இவ்வுலகை விட்டு மறைந்து விடுவது. திருமணம் ஆனாலும் தன் மனைவி எங்கு இருக்கிறாள் என்று தெரியாமல் அல்லது அதை உலகுக்கு அறிவிக்காமல் தலைவர் ஆகி விட்ட பிறகு மனைவியே தன் கணவர் இவர்தான் என்று அடையாளம் காட்டுவது - திருமணம் ஆகியும் வாரிசுகள் இல்லாமல் தலைவராகி மறைந்து விடுவது - திருமணம் ஆகியும் வாரிசு இல்லாமல் தலைவராகி நீண்ட நாளைக்கு பிறகு ஒரு வளர்ப்பு மகனை மக்களுக்கு மத்தியில் அறிமுக படுத்தி, அவனுக்கு பல கோடி செலவில் திருமணம் செய்து வைத்து பின்னர் அந்த வளர்ப்பு மகன் இந்த தாயையும் கூட்டிக் கொண்டு சிறைவாசம் செல்வது . தலைவராகி, மணம் முடித்து, மனைவிகளும் துணைவிகளும் வாரிசுகளும் நிறைந்திருந்து நிம்மதி இல்லாமல் வாழும் தலைவர்கள் - இப்படி வாரிசுகள் பிரச்சினை பலவாறாக தலை தூக்கி இந்த தமிழ்நாட்டின் அரசியலை படாத பாடு படுத்திக் கொண்டிருக்கிறதை மிக இரத்தின சுருக்கமாக நகை சுவையுடன் எடுத்து எழுதியுள்ள பெரியவர் முஹம்மது அலி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ஒரு காவல் துறை அதிகாரிகள் அந்த காக்கி சட்டைக்குள் ஒரு கலைஞன், ஒரு கவிஞன், ஒரு எழுத்தாளன் மறைந்திருப்பதை நீங்களே வெளிப் படுத்தியிருப்பது ஒரு புதுமை. கடுமையான உள்ளம், கொடுமையான தோற்றம் நம்மை பிடித்து விட்டானே இனி நம்மை அடித்து சின்னா பின்னமாக்கி விடுவானே, என்னென்ன சட்ட விதிகளுக்குள்ளே நம்மை FIR எழுதி உள்ளே தள்ளுவானோ என்றுதான் காவல் துறை அதிகாரிகளைக் கண்டவுடன் ஒரு சாமான்யன் பயப்படுகிறான். அந்த அதிகாரிகள் இன்னொரு உள்ளம் இருக்கிறது என்பதை நீங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டியுள்ளது. காவல் துறை அப்படிதான் செயல்படுகிறது. போலீஸ் உங்கள் தோழன் என்பதெல்லாம் வெறும் ஏட்டில்தான். வாய்மையே வெல்லும் என்ற வசனத்துடன் காந்தி மகானின் சிரித்த உருவப் படத்துடன் தலைக்கு மேலே கொழுவி இருக்கும் ஒரு போர்டுக்கு கீழே அகன்ற மேசை சுழல் நாற்காலி குளிரூட்டப் பட்ட அறையில் அட்டகாசமாக அமர்ந்து இருக்கும் அந்த காவல் துறை அதிகாரி, கொஞ்சமும் இரக்கமில்லாமல் இலுதிவரப்பட்டவனை தனது பூட்ஸ் காலால் நெஞ்சில் எதி மிதிப்பதும் இதயத்துக்கும் இவர் எழுத்துக்கும் சம்பந்தமில்லாமல் அவர் நடக்காத ஒன்றை நடந்ததாக அவன்மேல் குற்றப் பத்திரிக்கை எழுதுவதும் நானே அனுபவித்த ஒரு நிகழ்வு.
இவர்களை நினைக்கும்போது சகோதரர் முஹம்மது அலி அவர்கள் அந்த துறையில் எப்படி இவ்வளவு காலம் பணியாற்ற முடிந்தது என்பதை ஆச்சரியத்துடன் நினைத்துப் பார்க்கிறேன்.
கல்லுக்குள் ஈரம் இருப்பது பொய்யில்லை என்பது இப்போது புரிகிறது. உங்கள் வாரிசுகள் இந்த பணிக்கு வரக் கூடாது என்று நீங்கள் நினைத்ததால்தான் வாரிசுகளின் நிலை பற்றி உங்களால் இப்படி ஒரு அழகான கட்டுரையை எழுத முடிந்துள்ளது. வாழ்த்துக்கள்.
உங்கள் பொருள் செல்வங்களும் குழந்தை செல்வங்களும் இந்த உலகத்தின் அலங்காரங்கள்
நிச்சயமாக உங்கள பொருள் செல்வங்களும் குழந்தை செல்வங்களும் உங்களுக்கு சோதனைதான். இரண்டுமே அல்லாஹ் சொல்லும் அற்புதமான வேத வரிகள்.
அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சாகும். இது அழகிய தமிழ் மகன் இந்த உலகத்தில் சொன்ன அற்புத நீதி வசனம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross