எங்கள் இரு ஊரார்களையும் எந்த சக்தியாலும் பிரித்துவிட முடியாது! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[16 December 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38460
மத நல்லிணக்கதிற்கு வித்தூன்றிய ஊர்களில் காயல்நகர் ஆறுமுகநேரி என்கின்ற ஊர்கள் என்றால் அது மிகையல்ல.
சுதந்திரம் பெற்ற காலத்திற்கு முந்திய காலம்தொட்டே வாழ்ந்த பெரியவர்கள் புண்ணியவர்களான செல்வராஜ் போன்றவர்கள் அண்மைய ஊரான காயல் நகர மக்களோடு கைகோர்த்து ஒற்றுமைக்குறிய உன்னத வழிகாட்டியாய் பிரகாசித்த காரணத்தினால்தான்,பெரும்பாலான ஆறுமுகநேரி சகோதரர்கள் சந்தோசமாக காயலில் கடைகளை திறந்து சுதிந்திரமாக தொழில் செய்து வாழ்வின் உயரே சென்றார்கள் என்பது இந்த உலகறிந்தஉண்மையாகும்!
அந்தகாலத்தில் காயல் நகருக்கு ஒரு பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்ற நிலை வரும்பொழுது,காயல் தனவந்தர்கள் அதுக்கு சம்மதம் தெரிவித்து அந்தப்பள்ளியை காயல் நகரின் உள்ளே அமைக்காமல் நம் சகோதர சமுதாய மக்கள் வாழும் அண்மைய ஊரான ஆறுமுகநேரிக்கும் காயல் நகருக்கும் நடுவில் அமையப்படவேண்டும் இரு ஊர்பிள்ளைகளும் படித்து பயன்பெறவேண்டும் அதுவும் நம்பிள்ளைகள்தான் என்ற பெருந்தன்மை யோடும்,நம்மிரு ஊர்களின் மதநல்லிணக்கம் மற்றய ஊரார்களால் மெச்சப்படவேண்டும் என்ற ஒரே உன்னத நோக்கத்தோடு,பேயன்விளை பக்கத்தில் "காயல்பட்டணம் ஆறுமுகநேரி மேல்நிலைப்பள்ளி என்று பெயர்சூட்டி ஒரு பள்ளியை ஆரம்பித்த அந்தகாலத்திலிருந்தே நம் இரு ஊரார்களும் அண்ணன் தம்பிகளாய்,அக்கா,தங்கைகளாய் உறவாடி வாழ்ந்து வருகிறோம்!.
1950-ல் காயலுக்கு தண்ணீர் ஆத்தூரிலிருந்து கொண்டு வரவேண்டும் அதற்க்கு பெரும்தொகை தேவை என்ற தருணத்தில் காயல் தனவந்தர்கள் அந்த தொகையை செலுத்தி அந்த தண்ணீர் நேரடியாக காயல் நகரை வந்தடைய தேவையில்லை, அருகிலிருக்கும் ஆறுமுகநேரி மக்களும் பயன்பெறும் விதமாக திட்டங்களை அமையுங்கள் என்று வலியுறுத்திய வள்ளல்கள் வாழ்ந்து மறைந்த,அவர்கள் வழிகளில் வழிவழியாக இரு ஊரார் களும் ஒற்றுமையாக வாழ்ந்த்து கொண்டிருக்கும் இவ் வேலையில்,
DCW ஆலைக்கெதிராக விஷம பிரச்சாரம் பண்ணுகிறார்கள் அவர்கள்மீது நடவடிக்கை எடுங்கள் என்ற கோரிக்கையோடுகளம் இறங்கி இருக்கும் ஒருசில சகோதரர்களே, இந்த ஆலையின் எதிர்ப்பு ஏதோ நேற்றோ, இன்றோ உருவாகியுள்ளது மாதிரி ஒரு தோற்றத்தை உருவாக்க முயல்கிறீர்கள், உங்களிடம் ஒரு சிறு சில கேள்விகளை கேட்கிறோம், நீங்கள் மாவட்ட ஆட்சியரை அணுகுமுன் காயல் நகர மக்களை அணுகினீர்களா?
DCW ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுகள் காயல் கடலுக்கு செல்லும் வழியிலும்,அது கலக்கும் தருணத்திலும் அக் கழிவிலிருந்து பரவும் கிருமிகளின் தாக்கத்தால் அதிகமாக பாதிப்படைந்து பலஉயிர்களை
பறிகொடுதுக்கொண்டிருக்கின்ற இந்த பயங்கரமான பாதக நிலைக்கு,அந்த ஆலையின் கழிவுநீர் முக்கிய காரணம் என்ற ஆதாரத்தோடு அவாலைக்கெதிராக வழக்காடி வரும் "காயல் சுற்றசூழல் பாதுகாப்பு அமைப்பு" என்ற ஒரு அமைப்பு இயங்கி வருகிறதே,அந்த அமைப்பை அணுகி அதன் ஆதாரத்தையும்,விளக்கத்தையும் பெற்றீர்களா? அல்லது,
புதிய தலைமுறை போன்ற பல சின்னத்திரை ஊடகங்கள் DCW ஆலையின் கழிவுநீர் கொடுமையைப்பற்றி கூறியதே அந்த ஊடகங்களை அணுகி விளக்கம் பெற்றீர்களா?பெரும்பாலான தினசரி,வார,மாத பத்திரிகைகள் DCW ஆலையின் கொடுமை பற்றி பின்னிபெடலெடுத்தார்களே அவர்களை அணுகினீர்களா?
ஏன் "ஒரு ஊர்ல இரண்டு ராஜா" என்ற திரைப்படம் இந்த ஆலையின் அவல நிலையை சித்தரித்து இலைமறைகாயாக எல்லோருக்கும் தெரியும் வண்ணம் தமிழகம் முழுவதும் திரையிட்டார்களே அந்த பட இயக்குனரிடம் நீங்கள் விளக்கம் கேட்டீர்களா?அண்மையில் உப்பு த்தொழிலாளர்கள் தொலைக்காட்சிக்கு DCW க்கு எதிராக பேட்டி கொடுத்ததாவது உங்களுக்குத் தெரியுமா?
ஆகவே,நீங்களும் உங்கள் அமைப்பும் உண்மையாகவும்,மனசாட்சியுடனும் இயங்கி கொண்டிருக்குமேயானால் மேலே சொன்ன எந்த ஒரு அமைப்பை யாவது அணுகி இருப்பீர்கள்,ஆனால் நீங்கள் அதைசெய்யவில்லை. ஏனெனில் நீங்கள், நாங்கள் அண்ணணன்தம்பிகளாய் ஒருதாய் பெற்ற பிள்ளைகள் போல் உறவாடிகொண்டிருக்கும் உண்மையான ஆறுமுகநேரி சகோதரர்கள் அல்ல.
உங்கள் சூழ்ச்சியால் பலப்பல ஆண்டுகள் ஆலமர உறுதியாய் நிலைத்துநிற்கும் எங்கள் இரு ஊரார்களின் ஒற்றுமையின் ஒரு உரோமத்தைகூட உதிர்த்துவிட முடியாது,இந்த வையகம் வாழும்வரை எங்கள் உறவும் நீடிக்கும் நீசமுடைய நயவஞ்சகர்கள் அதைபார்த்து அதிர்ச்சியில் அழிந்துபோவார்கள்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross