பெருந்தலைவர் DCW வை மூடிட உத்தரவு பிறப்பித்து இருப்பார்..! posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[16 December 2014] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 38474
இந்த பகுதி வளர்ச்சியடைய வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 1959ல் அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் கோசல்ராம், சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் ஆகியோரின் முயற்சியால் அன்றைய முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் டிசிடபிள்யூ தொழிற்சாலையை தொடங்கி வைத்தார்,, (CP)
சகோதரர்களே..! கறைபடியாத கரத்துக்கு சொந்தக்காரர், தமிழகத்தின் கல்வி தந்தை மறைந்தும் மக்கள் மனதில் வாழும் அன்றைய முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் காலத்தில் தொடங்கப்பட்ட DCW தொழிற்சாலை உற்பத்தி வேறு...! இன்று அந்த DCW தொழிற்சாலை உற்பத்தி வேறு என்பதை நீங்கள் விளங்குவீர்களா..! உணர்வீர்களா..!
சகோதரர்களே..! அன்றைய முதல்வர் பெருந்தலைவர் இன்று இருந்திருந்தால் இந்நகர் மக்கள் படும் துயரத்தை அறிந்து மக்களின் உயிரை கொல்லும் இன்றைய DCW தொழிற்சாலையின் இரசாயன உற்பத்தியை மூடிட உத்தரவு பிறப்பித்து இருப்பார்..! இன்றைய முதவர்களிடம் இதை எதிர்பார்க்க முடியாது..! ஆகவே நகரில் - குடும்பத்தில் சகோதரனை / சகோதிரிகளை / சிறுவர், சிறுமியர்களை / குழந்தைகளை பறிகொடுத்த துயரத்தில் வேதனையின் விழும்பில் பாதிக்கப்பட்ட மக்கள் இந்த ஆலைக்கு எதிராக போராடுகிறார்கள்..
சகோதரர்களே.. உங்கள் குடும்பத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டால் நீங்கள் அதன் வேதனையை அறிவீர்கள்.. இந்து நாளிதழ் எழுத்தாளர் திரு. சமஸ் அவர்களுக்கு காயலின் அழுகுரல் கேட்டு இந்நகர் விஜயம் வந்து இங்கு நேரடி ஆய்வு செய்து சமீபத்தில் இந்து நாளிதழில் அரசே.. அபலைகளின் அழுகுரல் உனக்கு கேட்க்கிறதா..! என்ற தலைப்பில் இந்த ஆலையால் பாதிக்கப்பட்ட உண்மை நிலைமைகளை உலகறிய செய்த செய்தியை நாளிதழ்களில் நீங்கள் படிக்க தவறியது ஏன்..?
சுற்றுவட்டார மக்களிடம் பகைமை உணர்வை எற்படுத்துகிறது (CP)
சகோதரர்களாக பழகி வரும் சுற்றுவட்டார மக்களிடம் கம்பு வெட்டி போடும் உங்கள் சூழ்ச்சி ஒருபோதும் நிறைவேறாது..! காரணம்..? அணைத்து சமய மக்களும் மிக தெளிவாக இருக்கிறார்கள்.
இந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுவட்டார மக்களின் வாழ்வைத் தரம் உயர்வதற்கு உறுதுனையாக இருக்கும் டிசிடபிள்யூ தொழிற்சாலை (CP)
பலரின் உயிர்களை கொன்னு புதைத்து தான் பொருளாதார வளர்ச்சி / பிறரின் வாழ்வு தரம் உயர வேண்டும் என நீங்கள் உங்கள் மனதில் எண்ணுகிறீர்களா..?
தூய்மையான நல்ல எண்ணத்தில் அகிம்சை / அமைதி வழியில் DCW அமில ஆலைக்கு அருகிலுள்ள சுற்றுவட்டார மக்களின் வாழ்வை அவர்களின் தலைமுறைகளை நோயின்றி காக்க ஆலையின் மாசுக்கு எதிராக போராடும் "காயல்பட்டினம் சுற்றசூழல் பாதுகாப்பு அமைப்புக்கு நீதி மன்றத்தில் நியாயம் கிடைக்க உங்களையும் / எங்களையும் படைத்த வல்ல இறைவனை பிராத்திப்போம்..!
சகோதர்களே..! நீதி வெல்லும்..! அநீதி தோல்வியுறும்..! உங்கள் மனசாட்சியே நாளைக்கு உங்களை கேள்வி கேட்கும்..!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross