20 முறை மின் தடை ஏற்பட்டிருக்கிறது posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[09 April 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 3849
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
தேர்தல் ஆணையம் போடக்கூடிய உத்தரவு ஆறுமுகநேரி துணை மின் நிலையத்தை கட்டுப்படுத்தாது என்று நினைக்கிறோம்.
ஏனென்றால் (அவர்களே போடக்கூடிய ) அட்டவணைப்படி அவர்கள் பெரும்பாலும் நடப்பதில்லை. இதிலே தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி நடப்பதற்கு அவர்கள் என்ன அடிமைகளா?.
சென்ற மாதம் " மாதாந்திர பராமரிப்பிற்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் நாள் " என்று 3 முறை ( 22 ; 24 மற்றும் 26 ) தேதிகளை மாற்றி விநியோகத்தை நிறுத்தாமல் கடைசியாக மார்ச் 31 அன்று மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.
ஏன் அட்டவணைப்படி மின் விநியோகம் நிறுத்தப்படவில்லை ? என்று கேட்டால் அதற்கு தகுந்த காரணம் இருக்காது.
ஆனால் அதற்கு மக்கள் சொல்லும் காரணம் கிரிக்கெட் விளையாட்டு நடைபெறுவதால் நிறுத்தவில்லை என்று. அது உண்மையாக இருக்கும் என்றால் நிச்சயமாக அதற்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படக்கூடியவர்களே.
பள்ளிக்கூடங்களிலே தேர்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது , மாணவர்களுடைய தேர்வுக்கு மதிப்பு இல்லை. ஆனால் விளையாட்டு முக்கியமாகிவிட்டது.
மேலும் பகல் நேரத்தில் 2 மணி நேரங்கள்தான் மின் விநியோகம் நிறுத்த வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகளே உத்தரவு பிரப்பித்திருக்கும்போது நமது ஊரிலே பெரும்பாலும் 3 மணி நேரங்கள் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இன்று சனிக்கிழமை காலையில்கூட 3 மணி நேரங்கள் ( 6 - 9 ) மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.
அதுமட்டுமில்லாமல் இந்த ஏப்ரல் மாதம் தொடங்கி 9 நாட்களே ஆகின்றன இதுவரை குறைந்தது 20 முறை மின் தடை ஏற்பட்டிருக்கிறது.
குறிப்பாக சொன்னால் ஏப்ரல் 1 ஆம் தேதி 4 முறையும்; 5 ஆம் தேதி 5 முறையும்; 6 ஆம் தேதி மற்றும் 8 ஆம் தேதி தலா 3 முறைகளும் மின் தடை ஏற்பட்டிருக்கிறது.
இதற்கெல்லாம் காரணம் தகுதியற்றவர்கள் பதவியில் இருப்பதுதான். எங்கு தகுதி உள்ளவர்கள் பணியாற்றுகிறார்களோ அங்கு குறை
காணமுடியாது. குறை காண்பின் அதற்கு தகுந்த காரணம் இருக்கும்.
தகுதி உள்ளவர்கள் பணியாற்றி மக்கள் நலமாக வாழ இறைவன் அருள்வானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross