எல்லாம் வல்ல அல்லாஹ் எங்களது தந்தையின் அன்பு காக்காவும் மரியாதைக்குரிய பெரியப்பா மர்ஹூம் ஹாஜி சட்னி, எஸ்.எம்.முஹம்மது லெப்பை அவர்களின் நல்லறங்களை ஏற்று நல்லமல்கள் யாவற்றையும் கபூல் செய்து பாவபிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமாக்கியும் விசாலமாக்கியும் வைத்து
நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும்
மேலான சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் எங்கள் குடும்பத்தார்கள் ,
மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் இவர்களின் பிரிவை தாங்கிடும் மனவலிமையும் ,'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையையும் மேன்மையும் கீர்த்தியும் நிறைந்த
வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக ஆமீன்.
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
ஒரு ஜனாஸாவுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள்:
இறைவனே! இவருக்கு பாவமன்னிப்பை நல்குவாயாக!
இவர் மீது கருணை காட்டுவாயாக!
இவரை நல்ல நிலையில் வைத்திருப்பாயாக!
இவரது பாவங்களை மன்னிப்பாயாக!
இவரது மண்ணறையை விரிவுபடுத்துவாயாக!
வெள்ளைத் துணியிலிருந்து அழுக்கை அகற்றுவது போல
இவரது பாவங்களை மன்னிப்பாயாக!சுவனத்தில் இடம் கொடுப்பாயாக!மண்ணறையின் வேதனையிலிருந்தும் நரக நெருப்பிலிருந்தும்
இவரைக்காத்தருள்வாயாக!அறிவிப்பாளர் :அஃவ்ப் பின் மாலிக்(ரலி)அவர்கள் .
எங்களது இந்த துக்க சம்பவத்தில் தாங்களும் பங்கு பெற்றதோடு நேரடியாகவும்,அலைபேசி மூலமாகவும் ,சமூகதளங்கள் வழியாகவும் மேலும் இணையதள கருத்துகள் வாயிலாகவும் ஆறுதல்களை,அனுதாபங்களை தெரிவித்த,தெரிவித்து வரும் அன்புள்ளங்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியை உளப்பூர்வமாக தெரிவித்து கொள்கின்றோம்.ஜசாக்குமுல்லாஹு ஹைரா...,
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross