Re:...திருமணம் எனும் நிகாஹ்,,, posted bymackie noohuthmbi (kayalpaattinam)[28 December 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 38605
திருமணம் எனும் நிக்காஹ்....
அட, கவ்ஷிகி சக்ரபூர்த்தி - முன்னா ஷௌகத் அலி நடித்து சமீபத்தில் வெளி வந்த திரைப் படம், அது ஊத்திக்கிரிச்சே ... உங்கள் ஊகம் சரியானதுதான்.
ஆனால் நான் சொல்ல வந்தது நமதூரில் நடக்கும் திருமணம் எனும் நிகாஹ். டிசம்பர் மாதம் என்றால் தமிழகத்தை 2004 ஒரு குலுக்கு குலுக்கிய ஆழி பேரலையும் சுனாமியும்தான் மக்கள் நினைவுக்கு வரும். ஆனால் அன்று கூட மக்கள் அறியாமல் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தில் ஒரு திருமண நிகழ்ச்சி அமைதியாக நடந்து கொண்டிருந்தது.
நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒரு நண்பரிடம் கேட்டேன், சுனாமியின் தாக்குதல் அதன் தாக்கம் காயபட்டினத்தில் எப்படி உணரப்பட்டது என்று கேட்டேன். சுனாமியா அப்படி என்றால் என்ன, ஒன்றும் தெரியவில்லையே , நான் ஒரு திருமண விழாவில் பிசியாக இருக்கிறேன் பிறகு பேசுங்கள் என்று போனை கட் பண்ணிவிட்டார்.
அப்படித்தான், இந்த ஏழு நாட்கள்.
எந்த மழையின் தாக்கமும் இங்கு தெரியாது. இங்குள்ள திருமணம் எனும் நிக்காஹ் இரு தனி கதைதான்.
வெளியூர்களில் RECEPTION - WEDDING - FEAST இவை மூன்றும் ஒரே நாளில் ஒரே மூச்சில் நடந்து முடிந்து விடும். இங்கு இது 3 நாட்கள் தனி தனியாக நடக்கிறது. இதற்கான பொருளாதார செலவுகள் சொல்லி முடியாது.
மன மேடையில் ஆலிம்கள் மிக அழகாக பேசுவார்கள்... நபி வழி என்பார்கள் -நபிமார்கள் முன்மாதிரி என்பார்கள் - ஆன்றோர்கள் நடை முறை - சான்றோர்கள் சகோதரத்துவ வழிமுறை என்பார்கள். "திருமணத்தில் சிறந்த திருமணம் செலவால் மிக குறைந்த திருமணம்" என்று நபிகள் நாயகம் திரு வசனத்தை அரபியிலும் தமிழிலும் நம் உள்ளத்தில் ஆழ பதிய செய்வார்கள். ஆனால் அந்த வசனம் சொல்லப்படும் இடம் மின் விளக்கு அலங்காரங்களால் பல ஆயிரம் ரூபாய்கள் செலவுகளால் ஜொலித்து நிற்கும். அந்த மேடை மலர்களால் அலங்கரிக்கப் பட்டு ராஜ தர்பாரில் போடப்பட்டிருக்கும் மன்னருக்குரிய சிம்மாசனங்களில் மாப்பிள்ளை வந்து அமர்வார். காலை 9 மணிக்கு திருமணம் என்று அழைப்பிதழில் காணப்படும் ஆனால் 10 மணிக்குத்தான் இஸ்லாமிய பாடல்களுடன் திருமண அரங்கத்துக்குள் மணமகன் நுழைவார். அவரை அழைத்து வருபவர்கள் மேலை நாடுகளில் - அரபு நாடுகளில் - அமீரகங்களில் உயர் பதவிகளில் இருப்பவர்கள். அவர்கள் கைக் கடிகாரத்தை பார்த்துதான் அவர்கள் அலுவலக சுவரில் மாட்டப்பட்டிருக்கும் நாள்காட்டியுடன் இணைந்த மணியை சரி செய்வார்கள். ஆனால் இங்கு வந்தவுடன் அவர்களில் நேரந்தவாறாமை அவர்களிடமிருந்து விடை பெற்றுவிடும்.
நேற்று அழைப்புக்கு வரவிலையே என்று ஒருவர் குறைபட்டுக் கொள்வார் - ஒரு வீட்டுக்கு பொய் திரும்புவதற்கு 120 ரூபாய் செலவாகிறது. நமது வீட்டிலிருந்து மாப்பிள்ளை வீட்டுக்கு 40 ரூபாய் - மாப்பிள்ளை வீட்டிலிருந்து பெண்வீட்டுக்கு போக 40 ரூபாய், நம் வீட்டுக்கு திரும்பி வர 40 ரூபாய். ஒரு திருமண வீட்டுக்கு பொய் வர செலவு.
இப்படி ஒரே நேரத்தில் பல இடங்களில் அழைப்பு என்றால் எவ்வளவு செலவு வரும் என்று கணக்கு பார்த்துக் கொள்ளுங்கள். அடுத்து ஒரே நாளில் திருமணம் - அதற்கு வந்திருப்பவர்களுக்கு பிஸ்கட் ஒரு பக்கெட் குறைந்த செலவு 10 ரூபாய் ஒரு நபருக்கு. ஆயிரம் பேர் வந்தால் 10,000 ரூபாய் அவுட்.
அடுத்து சாப்பாடு ஒரே நாளில் பல இடங்களில் ஒரே நபருக்கு அழைப்பு. இவர் வருகையை கணக்கு பண்ணி சாப்பாடு ஆக்குவார்கள். ஒரு வீட்டில் அதிகம் ஆள் வந்துவிட்டதால் சாப்பாடு தட்டி விட்டது என்பார்கள். ஒரு வீட்டில் ஆட்கள் குறைவாக வந்ததால் சாப்பாடு மிஞ்சி சீரழிந்து விட்டது என்பார்கள். ஒரு சட்டி சாப்பாடு குறைந்த பட்சம் 30,000 அவுட்.
கல்யாணத்துக்கு முந்திய இரவு ஒரு சாப்பாடு. கல்யாண பகல் ஒரு சாப்பாடு. கல்யாணம் முடிந்த இரவு மாப்பிள்ளையின் நண்பர்களுக்கு பெண் வீட்டில் சாப்பாடு. இந்த செலவுகள் கணக்கு தெரியவில்லை.....இப்படியே திருமணம் எனும் நிகாஹ் கதை இன்னும் தொடர்கிறது....
மடிக் கணினி மறைந்து இதயக் க(ணி)னி - i pad - e -pad என்று பல விஷயங்கள் இளைஞர்கள் கைகளில் தவழ்கின்றன. முகநூல், த்விட்டேர் என்று பல இணையத்தளம் பெற்ற புது வரவுகள் இளைஞர்களை பாடை படுத்துகிறது....ஆனால் இந்த திருமணம் எனும் நிகாஹ் அதற்காக செலவிடப்படும் நேரங்கள், பல லட்சக்கணக்கான ரூபாய் செலவுகள், அதற்காக நாம் எடுத்துக் கொள்ளும் சிரமங்கள், ஏற்படும் மன அழுத்தங்கள் மட்டும் கூடிக் கொண்டே போகிறது. இது ஒரு தொடர்கதையாக போய்க் கொண்டிருக்கிறது...
எது நபி வழியில் திருமணம்...திருமணம் எனும் நிக்காஹ்..
.நபிகள் நாயகம் சொல்கிறார்கள்...திருமணத்தில் சிறந்த திருமணம் செலவால் குறைந்ததுதான் .... சிந்திப்போம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross