ஆண்டுதோறும் டிசம்பர் மாத கடைசி வாரம் விடுமுறைக் காலமாக இருப்பதால், வெளியூர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் காயலர்கள் அந்நாட்களில் தாயகம் திரும்புவது வழமை. இந்த 7 நாட்களில், ஆண்டுதோறும் குறைந்தது 30 திருமண நிகழ்ச்சிகளும், அதிகபட்சமாக நூற்றுக்கும் மேற்பட்ட திருமண நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதுண்டு.
நடப்பு டிசம்பர் மாத கடைசி இரண்டு வாரங்களில், காயல்பட்டினத்தில் 40க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறுகிறது. வெளியூர் - வெளிநாடுகளிலிருந்து இத்திருமணங்களுக்காக விடுமுறை எடுத்து வந்திருப்போரும், வழமையான விடுமுறையில் வந்திருப்போரும் நகரில் குவிந்திருப்பதால், நல விசாரணை, அரட்டை, சிற்றுலா, சுற்றுலா என நகரே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
இவை ஒருபுறமிருக்க, இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின்போது, காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் சிறிய குத்பா பள்ளியில் மக்கள் திரள் அதிகமாக இருந்ததால், உட்பள்ளி, நடுப்பள்ளி, வெளிப்பள்ளி, பக்கப் பகுதிகள், மாடி என அனைத்தும் நிறைந்து, சித்தன் தெரு வீதியிலும் 3 வரிசையில் பொதுமக்கள் நின்று தொழும் நிலை ஏற்பட்டது.
மக்கள் திரளை உணர்ந்தறிந்த பள்ளி நிர்வாகத்தினர், வீதிகளில் தொழும் பொதுமக்களுக்காக பாய்களை விரித்து, ஏற்பாடுகளைச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கள உதவி:
K.M.T.சுலைமான்
ஜும்ஆ தொழுகையில் மக்கள் திரள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சிறிய குத்பா பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |