இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்ப்புப் பணியைத் தீவிரப்படுத்திட, அதன் மாவட்ட அளவிலான கலந்தாலோசனைக் கூட்டத்தில் மாவட்ட அளவில் ஒருங்கிணைப்புக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட கலந்தாலோசனைக் கூட்டம், இம்மாதம் 27ஆம் நாள் காலை 11.00 மணியளவில், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலுள்ள - கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதிர் மன்ஸிலில் நடைபெற்றது.
மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ அறிமுகவுரையாற்றி, நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். கட்சியின் மூத்த உறுப்பினர் எம்.கே.முஹம்மத் அலீ என்ற ஹாஜி காக்கா கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். காயல்பட்டினம் நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் வரவேற்றுப் பேசினார்.
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய - கட்சியின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் பீ.மீராசா மரைக்காயர் தலைமையுரையாற்றினார்.
மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட பொருளாளர் வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப்,, மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
இக்கூட்டத்தில், கட்சியின் மாநில துணைச் செயலாளர் திண்டுக்கல் ஏ.ஷபீர் அஹ்மத் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
காயல்பட்டினத்திற்கு முதன்முறையாக வந்துள்ள அவருக்கு மாவட்ட தலைவர் பீ.மீராசா மரைக்காயர் - கட்சியின் சார்பில் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார்.
மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் சிறப்புரையாற்றினார்.
வரும் 30ஆம் நாளன்று கட்சியின் சார்பில் நடத்தப்படவுள்ள பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள், அதில் பங்கேற்க வருகை தரும் கேரள முஸ்லிம் லீகின் முனவ்வர் அலீ ஷிஹாப் தங்ஙள் அவர்களை வரவேற்பதற்கான செயல்திட்டங்கள் குறித்து அவர் விளக்கிப் பேசினார்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தீர்மானம் 1 - உறுப்பினர் சேர்ப்பிற்கான ஒருங்கிணைப்புக் குழு:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்ப்புப் பணியைத் தீவிரப்படுத்தி, முழுமையாக செய்து முடித்திட, பின்வருமாறு ஒருங்கிணைப்புக் குழுவை நியமித்து இக்கூட்டம் தீர்மானிக்கிறது:-
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு:
(1) மன்னர் பாதுல் அஸ்ஹப் (தலைவர்)
(2) எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ
(3) எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன்
(4) பெத்தப்பா எம்.ஏ.சுல்தான்
(5) எம்.இசட்.சித்தீக்
(6) எம்.எச்.அப்துல் வாஹித்
(7) ஆர்.பீ.ஷம்சுத்தீன்
காயல்பட்டினம் நகர ஒருங்கிணைப்புக் குழு:
(1) எம்.கே.முஹம்மத் அலீ என்ற ஹாஜி காக்கா (தலைவர்)
(2) வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர்
(3) ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ்
(4) எம்.ஏ.முஹம்மத் ஹஸன்
(5) எலக்ரீஷியன் பஷீர்
(6) எம்.டீ.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன்
(7) ஏ.ஆர்.ஷேக் முஹம்மத்
தீர்மானம் 2 - பொதுக்கூட்ட சிறப்பு விருந்தினருக்கு வரவேற்பு:
வரும் 30ஆம் நாளன்று காயல்பட்டினத்தில் நடைபெறவிருக்கும் கட்சியின் பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள வருகை தரும் கேரள முஸ்லிம் லீகின் முன்னாள் தலைவர் மர்ஹூம் ஷிஹாப் தங்ஙள் அவர்களது மகனும் - சிறந்த கல்வியாளருமான முனவ்வர் அலீ ஷிஹாப் தங்ஙள் அவர்களுக்கு, காயல்பட்டினத்தின் அனைத்து ஜமாஅத்தினர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட கிளை நிர்வாகிகளைத் திரட்டி, விமரிசையான வரவேற்பளிப்பதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன் நன்றி கூற, நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை, காயல்பட்டினம் நகர கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தகவல்:
S.A.இப்றாஹீம் மக்கீ
படங்களுள் உதவி:
A.R.ஷேக் முஹம்மத்
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் இதற்கு முன் நடைபெற்ற மாவட்ட கலந்தாலோசனைக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |