‘காயல்பட்டினம் கல்வித்தந்தை’ என்றழைக்கப்படும் ஹாஜி எல்.கே.லெப்பைத்தம்பி அவர்களின் கொள்ளுப் பேத்தியும், ஐக்கிய விளையாட்டு சங்க முன்னாள் தலைவர் எல்.கனீ மற்றும் எல்.கே.மேனிலைப்பள்ளி தாளாளர் டாக்டர் எஸ்.எல்.முஹம்மத் லெப்பை ஆகியோரின் பேத்தியும், எல்.கே.மேனிலைப்பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினரும் - திருச்சி எல்.கே.எஸ்.ஜுவல்லர்ஸ் நிறுவன பங்குதாரருமான ஹாஜி எல்.கே.லெப்பைத்தம்பியின் மகளுமான - காயல்பட்டினம் குத்துக்கல் தெருவைச் சேர்ந்த மாணவி லெ.சமீரா, திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் எம்.பி.ஏ. பாடப்பிரிவில் பயின்று தேர்வெழுதி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக அளவில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
இம்மாதம் 23ஆம் நாள் செவ்வாய்க்கிழமையன்று, பல்கலைக் கழகத்தின் 31ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் வழங்கினார். பல்கலைக் கழக நிதி நல்கைக் குழு துணைத்தலைவர் எச்.தேவராஜ் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
விழாவிற்குத் தலைமை தாங்கிய தமிழக ஆளுநர் கே.ரோசய்யா, திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக அளவில் எம்.பி.ஏ. பாடப்பிரிவில் தரவரிசையில் முதலிடம் பெற்ற மாணவி லெ.சமீரா உட்பட – அனைத்து பாடப் பிரிவுகளிலும் தரவரிசையில் முன்னிலை பெற்ற மாணவ-மாணவியருக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் கீழ், தமிழகத்தின் 9 மாவட்டங்களைச் சேர்ந்த 68 கல்லூரிகள் இடம்பெறுகின்றன. அவ்வனைத்து கல்லூரிகளும் முதல் தரவரிசை பெற்ற மாணவ-மாணவியருள் - மாணவி லெ.சமீரா முதலிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தகவல் & படங்கள்:
‘கொமந்தார்’ இஸ்மாஈல் |