மக்களின் உடல்நலனைப் பாதிக்கும் DCW ஆலை குறித்து தமிழக சட்டப்பேரவையில் வெள்ளையறிக்கை தாக்கல் செய்யக் கோரி வருகிற 30ஆம் நாளன்று ஆலையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா - எஸ்.டி.பீ.ஐ. கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்ட பொறுப்பு தலைவர் மெளலவி அஸ்ரப் அலி பைஜி தலைமை வகிக்கிறார். கட்சியின் மாநில தலைவர் தெஹலான் பாகவி, அணு சக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார், முகிலன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தரராஜன் மற்றும் பலர் பங்கேற்கின்றனர்.
நாளை (டிசம்பர் 30 செவ்வாய்க்கிழமை) காலை 11.00 மணியளவில், காயல்பட்டினம் அஞ்சல் அலுவலகம் அருகிலிருந்து ஆலையை நோக்கி முற்றுகைப் போராட்டப் பயணம் துவங்கவுள்ளதாக அக்கட்சியின் நகர நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
4. Re:...வாழ்த்துவோம் துஆ செய்வோம்.! posted byomer anas (kayalpatnam)[29 December 2014] IP: 59.*.*.* India | Comment Reference Number: 38652
அஸ்ஸலாமு அழைக்கும்,
காயல்பட்டணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை தனது ஆலையின் விசக்கழிவுகளால் அழித்தொழிக்க நினைக்கும் DCW எனும் நச்சு ஆலைதனை நிரந்தரமாக மூடும் முகமாக போராடும் எஸ்.டி.பீ.ஐ சார்பில் நடைபெறும் இப்போராட்டத்திற்கு மனித நேயம்கொண்டோர் அனைவர்களும் ஆதரவு நல்குவதோடு, அவர்களை வாழ்த்தி துஆச் செய்வோமாக ஆமீன்.!
நாரே தக்பீர் அல்லாஹு அக்பர்!
வல்ல அல்லாஹ் உங்கள் இப்போராட்டத்தினைவெற்றியாக்கி அருள்வானாக!
5. எல்லாம் வல்ல அல்லாஹ் வெற்றியை தடுவானாக ஆமீன்! . posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[29 December 2014] IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38653
பதைக்க துடிக்க் பறி கொடுத்த உயிர்களின் உடன்பிறவா பிறவிகள் என்ற உரிமையிலும், கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு பறிபோகத்துடிக்கும் உயிர்களுக்காகவும்,பல்லாயிரக்கணக்கான மக்களின் நலன் பாதுகாப் பிற்க்காகவும் போராட்ட களம் இறங்கிபோராட இருக்கும் புண்ணியவான்களே, கண்ணியவான்களே உங்கள் புண்ணிய இலட்சிய போராட்டம் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவியால் முழு அளவில் வெற்றிபெறும்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழும் நம்மூரில் நெஞ்சில் ஈரமுள்ள எல்லோர்களும் உங்களுடன் கைகோர்த்து களத்தில் இறங்குவார்கள் .உங்களுடன் வரமுடியாத உடல் நலியுற்றோர்கள் வீட்டிலிருந்தாலும் உங்கள் போராட்ட வெற்றிக்காக வல்லோனிடம் வேண்டியவர்களாகத்தான் இருப்பார்கள்!
.
கடல் கந்து வாழுகின்ற நாங்கள் எல்லோர்களும் இருகரம் ஏந்தியவர்களாக, இரு கண்களிலும் நீர்ததும்ப எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் வேண்டியவயவர்களாக இருகிறோம்.வேதனை நெஞ்சங்களின் பிரார்த்தனைகளை எல்லாம் வல்ல அல்லாஹ் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறான் விரைவில் வெற்றியை தந்துடுவான்.ஆமீன்!
உண்மையான இதையத்தோடு வீதிக்கு வந்த நீங்கள் ஒற்றுமையின் ஒப்பற்ற அணியணியாய் ஒருங்கிணைந்து ,ஒழுக்கமின்மை ஒரு நுனி பகுதிகூட பிசகாமல்,போரட்டகளம் காணும் உங்ககளனைவர்களையும் பாராட்டும் வண்ணாம் போராடி வெற்றிக்கனிகளை கொய்தவர்களாக அதை கண்ணியமிகு காயல் மக்களுக்கு காணிக்கையாக்குங்கள்!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
6. வெற்றி நமதே !! posted bySalai.Mohamed Mohideen (Philly)[30 December 2014] IP: 207.*.*.* United States | Comment Reference Number: 38657
DCW போன்ற தொழிற்சாலைகளின் அமிலக் கழிவுகளாலும் காற்றில் கலந்து வரும் நச்சு வாயுவினாலும் தினந்தோறும் கேன்சர் போன்ற கொடிய நோய்களின் பிடியில் சிக்கி வலியால் அவதிப்படுபவர்களும் அவ்வலியுடனே மரணம் அடைந்தவர்களும்... வலிகளை கண்ட விழிகள் (உற்றார் உறவினர்) தான் நமதூரில் எத்தனை எத்தனை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross