காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் - கே.எஸ்.ஸி. மைதானத்தில், பாட்மிண்டன் (இறகுப் பந்து) உள்விளையாட்டரங்க கட்டுமானப் பணிகள் நடப்பு 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் துவக்கப்பட்டு, சில நாட்களுக்கு முன் நிறைவுற்றுள்ளது. இதனையடுத்து, இன்று (டிசம்பர் 29 திங்கட்கிழமை) 16.30 மணியளவில் திறப்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கந்தசாமி இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, உள்விளையாட்டரங்கத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
நகரப் பிரமுகர்களான முனைவர் ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப், எம்.எம்.முஹம்மத் சுல்தான், எம்.பி.ஏ.முஹம்மத் ஸலீம், எம்.என்.ஸதக்கத்துல்லாஹ் மரைக்கார், எஸ்.அக்பர்ஷா, பாளையம் முஹம்மத் ஹஸன், வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், ரயீஸ், எம்.கே.முஹ்யித்தீன் தம்பி துரை, வாவு எஸ்.அப்துல் கஃப்பார், பொறியாளர் பீ.எச்.எம்.செய்யித் இஸ்மாஈல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவர் எம்.பி.ஏ.முஹம்மத் நூஹ் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் தலைவரும், காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவன தலைவருமான வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் விழாவிற்குத் தலைமை தாங்கி, தலைமையுரையாற்றினார். எம்.எம்.ஷாஹுல் ஹமீத் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) செயலாளர் பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார். தூத்துக்குடி மாவட்ட இறகுப்பந்து விளையாட்டுக் கழக செயலாளர் எஸ்.டீ.ஆர்.சாமுவேல் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினரான - தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கந்தசாமி சிறப்புரையாற்றினார்.
எல்.எஸ்.அப்துல் காதிர் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை நெறிப்படுத்திய கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் துஆவுடன் விழா நிகழ்ச்சிகளை நிறைவுபடுத்தினார்.
விழாவின்போது, சிறப்பு விருந்தினருக்கு கே.எஸ்.ஸி. தலைவர் சால்வை அணிவிக்க, எம்.பி.ஏ.ஸலீம் நினைவுப் பரிசை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட இறகுப்பந்து விளையாட்டுக் கழக செயலாளருக்கு வாவு ஷாஹுல் ஹமீத் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார்.
இந்த உள் விளையாட்டரங்கம் கட்டியெழுப்பப்படுவதற்கு முழு முயற்சிகளை துவக்கம் முதல் இறுதி வரை முன்னின்று செய்தமைக்காக, வி.எஸ்.எச்.ஃபஸ்லுல் ஹக், வெள்ளி செய்யித் அஹ்மத், யானி அபுல்ஹஸன் ஆகியோருக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
உள்விளையாட்டரங்கத்தை நல்ல முறையில் கட்டமைத்தமைக்காக, மேஸ்திரிகள் ராசய்யா, சுயம்பு, வெல்டர் பாபு, பெயிண்டர் ஷாஹுல் ஹமீத், எலக்ட்ரீஷியன் எம்.ஏ.அப்துல் ஜப்பார் ஆகியோருக்கும் விழாவின்போது சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
இவ்விழாவில், காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் அங்கத்தினர், நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து இறகுப்பந்து விளையாட்டு வீரர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
விழா ஏற்பாடுகளை, KSC நிர்வாகிகள் செய்திருந்தனர். திறப்பு விழாவின் நிறைவில், KSC அங்கத்தினர் அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து, கே.எஸ்.ஸி. அணி மற்றும் எச்.ஆர். குழும அணியினருக்கிடையே - நட்பு முறையிலான இறகுப்பந்துப் போட்டி உள்விளையாட்டரங்கின் முதற்போட்டியாக நடைபெற்றது.
தகவல்:
K.J.ஷாஹுல் ஹமீத்
படங்கள்:
M.M.ஷாஹுல் ஹமீத்
சுலைமான்
M.ஜஹாங்கீர்
ஜெஸ்மின் பாஸ்கர்
காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |