காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளியருகில் – குத்துக்கல் தெருவில் இயங்கி வரும் ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியத்தின் சார்பில், நபிகள் நாயகம் பிறந்த நாள் மீலாது விழா மற்றும் அமைப்பின் 31ஆம் ஆண்டு துவக்க விழா ஆகியன வரும் பிப்ரவரி மாதம் 08ஆம் நாளன்று பல்சுவைப் போட்டிகளுடன் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
மீலாத் விழா:
காயல்பட்டினம், குத்துக்கல் தெரு, முஹியத்தீன் பள்ளி அருகில் கடந்த 30-ஆண்டுகளாக இயங்கி வரும் சமூக,சமுதாய நல அமைப்பான ரஹ்மத்துன்-லில் ஆலமீன் மீலாது பேரியம் சார்பாக இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 2015, பிப்ரவரி மாதம் 08-ஆம் தேதி (ஹிஜ்ரி 1436, ரபியுல் ஆகிர் பிறை-18) ஞாயிறன்று நம் உயிரினும் மேலான நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பிறந்த தின மீலாது பெருவிழா மற்றும் பேரியத்தின் 31-ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சியினை நனிசிறப்புடன் நடாத்திட சென்னையில் நடைபெற்ற வருடாந்திர நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கலந்தாலோசனைக் கூட்டம்:
இக்கூட்டம் கடந்த 23-12-2014, செவ்வாய்க்கிழமை மக்ரிபுக்குப்பின் சென்னை, மண்ணடி, ஈத்காபள்ளி சமீபம் உள்ள வேலாயுதம் தெரு,தோல்ஷாப் இல்லத்தில் வைத்து நடைபெற்றது.
ஜனாப் தோல்ஷாப்,எம்.எல். செய்யத் உமர் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.ஹாஜி,தோல்ஷாப் எம்.எல்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்து வரவேற்றதோடு, அமைப்பின் செயல்பாடுகள் குறித்து மிக விபரமாக விளக்கிப் பேசினார்.
முன்னதாக வெளியூர், வெளிநாடுகளிலுள்ள அமைப்பின் நிர்வாகிகளிடம் அலைபேசி வாயிலாக கருத்துக்கள் கேட்டும் அவைகளும் பரிசீலிக்கப்பட்டது,
விழா நிகழ்முறை:
அகிலத்திற்கோர் அருட்கொடை அண்ணலெம் பெருமானார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பிறந்ததின மீலாது பெருவிழா மற்றும் பேரியத்தின் 31-ஆம் ஆண்டு விழாவை இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 2015 ,பிப்ரவரி மாதம் 08-ஆம் தேதி (ஹிஜ்ரி 1436,ரபியுல் ஆகிர் பிறை-18) ஞாயிறன்று கீழ்காணும் நிகழ்முறை விளக்கப்படி நனிசிறப்புடன் நடாத்திட ஒருமனதாக இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது:-
08-02-2015 (ஹிஜ்ரி 1436, ரபியுல் ஆகிர் பிறை-18) ஞாயிற்றுக்கிழமை.
---------------------------------------------------------------------------------------------------------------
காலை 07-00 மணி, சுன்னத் எனும் கத்னா வைபவம்.
காலை 08-00 மணி, பூமான் நபியின் புகழ் கூறும் புனித மவ்லிது மஜ்லிஸ்.
காலை 10-00 மணி, இளம் ஹாபிழ்களுக்கான இனிய ஹிஃப்ழ் போட்டி.
மாலை 04-30 மணி, இளம் மாணவர்களுக்கான இனிய சன்மார்க்க பேச்சுப்போட்டி.
இரவு 07-00 மணி முதல் சன்மார்க்க சிறப்புச்சொற்பொழிவு நிகழ்ச்சி.
விழா இறுதியில் பேச்சுப்போட்டி மற்றும் ஹிஃப்ழ் போட்டிகளில் வெற்றிப்பெற்ற மற்றும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசளிப்பு நிகழ்ச்சியும், பேரியத்தின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாகிய உயர் கல்விக்கான உதவி ஒரு நபருக்கு ஓராண்டுக்கு ரூபாய் 5 ஆயிரம் வீதம் மூன்றாண்டுக்கான முழு தொகையாக ரூபாய் 15 ஆயிரம் வீதம் இரு பயனாளிக்கு மொத்தம் ரூபாய் 30 ஆயிரம்
இக்ரா கல்வி சங்கம் மூலம் கடந்தாண்டுகளைப் போல் வழங்கப்படும்.
பாத்திஹா துஆ ஸலவாத்துடன் இப்புனிதமிகு நிகழ்வு இனிதே நிறைவு பெறும், இன்ஷாஅல்லாஹ்!
பரிசு விபரங்கள்:
ஹிஃப்ழ் போட்டிக்கான பரிசு தொகையாக
முதலாம் பரிசு ரூபாய் 1500/-
இரண்டாம் பரிசு ரூபாய் 1250/-
மூன்றாம் பரிசு ரூபாய்,1000/-
பேச்சுப்போட்டிக்கான பரிசு தொகையாக
முதலாம் பரிசு ரூபாய் 1000/-
இரண்டாம் பரிசு ரூபாய்,750/-
மூன்றாம் பரிசு ரூபாய்,500/-
கலந்துகொள்ளும் அனைத்து போட்டியாளருக்கும் ஆறுதல் பரிசு தொகைகள் கடந்தாண்டுகளைப் போல் வழங்கிடவும் முடிவு செய்யப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் இப்பொழுதிலிருந்தே துவக்கி சிறப்புற செய்திடவும் நிகழ்ச்சி நோட்டீஸ் விரைவில் வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டது.
பேரியத்திற்கு தொடர்ந்து நல்லாதரவும், ஆலோசனைகளும் நல்கி வரும் உள்ளூர், வெளியூர் குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் நல்லுள்ளம் கொண்ட தயாளர்கள் மற்றும் பேரியத்தின் உறுப்பினர்கள் அனைவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தும் இதுபோல் தொடர்ந்து தங்களது பங்களிப்பை தாராளமாக செய்வதுடன் இனிய இவ்விழாவில் கலந்து சிறப்பித்து தருமாறும் மிக்க அன்புடன் வேண்டி விரும்பி அழைக்கப்பட்டது.
சிறப்பழைப்பாளர்:
இவ்விழாவின் சிறப்பு அழைப்பாளராக நெல்லை, மேலப்பாளையம், உஸ்மானியா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் நாடறிந்த நாவலர் ஹாஜி,பி.ஏ.காஜா முஹியத்தீன் ஆலிம் உஸ்மானி அவர்கள் கலந்து சிறப்பிக்க இசைந்துள்ளார்கள் என்பதையும் மிகுந்த மகிழ்வுடன் அறிய தருகின்றோம்.
ஜனாப் பாலப்பா,எம்.எஸ்.கே.முஹம்மது இப்றாஹீம் நிறைவாக நன்றி நவில ஹாஜி தோல்ஷாப்,எம்.எல்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் பாத்திஹா துஆ ஓதிட புனித ஸலவாத்துடன் அமைப்பின் இவ்வருடாந்திர நிர்வாகிகள் கூட்டம் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
ஜித்தாவில் கலந்தாலோசனைக் கூட்டம்:
இதுபோல் சவூதி அரேபியா,ஜித்தா நகரிலும் நிர்வாகக்குழு உறுப்பினர் ஹாஜி,சட்னி எஸ்.ஏ.கே.செய்யது மீரான் தலைமையில் நடைபெற்ற கலந்தாலோசனை கூட்டத்தில் எமது பேரியத்திற்க்கு தொடர்ந்து நல்லாதரவும் நல்லுதவியும் அளித்துவரும் அன்பர்கள் நண்பர்கள் திரளாக கலந்தும் நல்லாலோசனைகளும் வழங்கினார்கள். ஹாஜி பிரபு எஸ்.ஜெ.நூருதீன் நெய்னா பாத்திஹா துஆ ஓதிட இந்நிகழ்வு இனிதே முடிவுற்றது.அல்லாஹ்விற்கே எல்லா புகழும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஜித்தாவிலிருந்து...
சட்னி S.A.K.செய்யித் மீரான்
படங்கள்:
சென்னையிலிருந்து...
பாலப்பா M.S.K.முஹம்மத் இப்றாஹிம்
ஜித்தாவிலிருந்து...
சட்னி S.A.K.முஹம்மத் உமர் ஒலி
ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியத்தின் சார்பில் கடந்தாண்டு நடத்தப்பட்ட மீலாத் விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |