| |
செய்தி எண் (ID #) 15122 | | | வெள்ளி, ஐனவரி 2, 2015 | இன்று மாலையில் எல்.கே.மேனிலைப்பள்ளியில் பெங்களூரு கா.ந.மன்றம் நடத்தும் – மாணவர்களுக்கான துறைசார் ஆலோசகர் நியமனத் திட்ட விளக்க நிகழ்ச்சி! பிரசுரம் வெளியீடு!! | செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 2480 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய | |
ப்ளஸ் 2 மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, அவர்கள் விரும்பும் தொழில்துறை தேடலில், சரியான விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டல்களை வழங்கிடுவதற்காக, பெங்களூரு காயல் நல மன்றம் சார்பில் “துறை சார் ஆலோசகர் நியமன திட்டம்” (Mentor & Mentee Programme) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்து விளக்கவும், விரும்பும் மாணவர்களை - தகுந்த ஆலோசகர்களுடன் இணைப்பதற்காகவும், அம்மன்றத்தின் சார்பில் - இக்ராஃ கல்விச் சங்க ஒருங்கிணைப்பில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியில் இன்று (ஜனவரி 02 வெள்ளிக்கிழமை) 16.00 மணியளவில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சியில், அம்மன்றத்தின் துணைத்தலைவர்களான ‘ஹனீவெல்’ எஸ்.ஏ.கே.ஜபரூத் மவ்லானா, ‘ஹனீவெல்’ எம்.முஹம்மத் இப்றாஹீம் ஆகியோர் - இத்திட்டம் குறித்து மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் விளக்கவுள்ளனர். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள பிரசுரம்:-
பெங்களூரு காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|