சஊதி அரபிய்யா - தம்மாம் கால நற்பணி மன்றத்தின் 69ஆவது பொதுக்குழுக் கூட்டம் 19.12.2014 வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றுள்ளது. இதுகுறித்து, அம்மன்றத்தின் துணைத்தலைவர் சாளை ஜியாவுத்தீன் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
சவுதி அரேபியா, தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 69 வது பொதுக்குழு கூட்டம், இறைவனின் அருளால் 19.12.14 வெள்ளிக்கிழமை மாலை 6:30மணியளவில், அல்கோபார்- ரபா மருத்துவமனை ( RAFA ) வளாகத்தில் சிறப்பாக Sநடைபெற்று முடிந்தது. அல்ஹம்து லில்லாஹ்.
இந்த கூட்டத்தை சகோதரர் பாலப்பா அஹமது அவர்களின் மகன், இளவல் யூசுப் சாஹிப் கிராஅத் ஓதி துவங்கி வைத்தார். வந்திருந்த அனைவர்களையும் சகோதரர்S.D.அபூபக்கர் அவர்கள் வரவேற்று வரவேற்பு உரை நிகழ்த்தினார்.
தலைமையுரை:
அடுத்ததாக, மன்றதின் தலைவர் டாக்டர்முஹம்மது இத்ரீஸ் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்கள். அவரது உரைச்சுருக்கம்:-
மன்றத்திற்கு பல சந்தர்ப்பங்களில் பல வகையிலும் உதவிக் கரங்களை நீட்டி, எந்தப் பாராட்டுதல்களையும் எதிர்பாராமல் நற்பணி செய்துவரும் தல்சகோதரர்களுக்கும் (தல்.P.S.M. சேகு நூருத்தீன்.தல்.இப்ராஹிம்,தல்.ஜாகிர் அலி) ,திருச்சியைச் சேர்ந்தவர்களாயினும் நம் காயல் நற்பணி மன்றத்தில் தங்களையும் இணைத்துக்கொண்டு, எல்லா நற்காரியங்களிலும் கை கொடுத்து உதவும் அருமைச் சகோதரர்கள் ஜனாப். அப்பாஸ் பாய். ஜனாப். முபாரக் பாய் அவர்களுக்கும் மன்றத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.
திருமண வாழ்த்து:
அடுத்து , நம் மன்றத்திற்கு வரப்பெற்ற திருமண அழைப்பிதழ்களை வரிசைப்படுத்தி, மன்ற உறுப்பினர் அனைவரின் வாழ்த்துக்களையும் துஆக்களையும் மணமக்களின் பெற்றோருக்கு சமர்ப்பித்துக்கொண்டார்.....
முதலாவதாக,நம் மன்றத்தின் வாழ்நாள் உறுப்பினரும் எல்லாக் காலங்களிலும (தான் கத்தரில் பணி புரிந்தாலும்) நம்மோடு கைகோர்த்து நிற்கும் அன்புக்குரிய சகோதரர் சோனாமொஹிதீன் அவர்களின் மகனார் மஹ்மூது மானா தம்பி – மணமகள் ராபியா நிஹாரா மணமக்களையும்
அடுத்து, நம் மன்ற செயற்குழுவின் முக்கிய உறுப்பினரும் உற்சாகத்துடன் எல்லாப்பணிகளையும் சிரமேற்கொண்டு சீரிய முறையில் செய்து வருபவருமான ஜனாப். ஊண்டி அபூபக்கர் அவர்களின் மருமகன்-M...S..ஜிஃப்ரி இர்பான்&சல்மாஷபானா மணமக்களையும்..
அடுத்து ..நம் மன்ற உறுப்பினர் ஜனாப்..A.M. அபூபக்கர் நிஜார் அவர்களின் மகள் A.N.சேகு மாஜிதா_மணமகன் S.A..B..முஹம்மது அபூபக்கர் சிபாய் .மணமக்களையும்,
இவர்களை அடுத்து .. நம் மன்ற உறுப்பினர் M.M.முஹம்மது அபூபக்கர் சித்தீக் அவர்களின் அருமை மகளார்..M.A.S. ஜிஸ்மி ஹமீதா _ மணமகன் V.M.H.செய்யது முஹம்மது B.E. ஆகியோரின் திருமணத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து, அவர்களின் மணவாழ்க்கை சிறப்பாக அமைய வல்ல இறைவனிடம் எல்லோரின் சார்பாகவும் துஆ செய்து வாழ்த்தினார்.
தலைவர் முன்னுரையில் சில முக்கிய பகுதிகள்:-
அவசர கால மருத்துவ சேவை:
நமதூர் மக்களுக்கு இரவு நேரங்களில் மற்றும் அவசரமான ஆபத்தான தருணங்களில் மருத்துவ உதவி கிடைப்பது கடினமாகிவிட்ட இக்கால கட்டத்தில் ஒரு எமெர்ஜென்சி சர்வீஸ் ( அவசர மருத்துவ உதவி ) ஏற்பாடு செய்ய நமதூர் கே.எம்.டி .மருத்துவ மனையின் உதவியை நாடுவது, இந்த இன்றியமையாத சேவையை சவூதி காயல் நற்பணி மன்றங்களும், கத்தார், துபாய், அபுதாபி மன்றங்களும் இணைந்து கே.எம்.டி. நிர்வாகத்தினருடன் கலந்தாலோசித்து ஒரு நல்ல முடிவு காண்பது..
ஜன்சேவா:
அழகிய கடன் வழங்கும் திட்டம் (வட்டியில்லாக் கடன்) ஏற்படுத்தி அதனை வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் “ ஜன சேவா “ அமைப்பினை நமது அதிகப்படியான வைப்பு நிதிகள் (டெபாசிட்) மூலம் வலுப்படுத்துவது என தம் கருத்துக்களை அழுத்தமாகப் பதிவு செய்து அமர்ந்தார்...
அறிவியல் கண்காட்சி:
தலைவர் உரையைத்தொடர்ந்து மன்றத்தின் துணைத் தலைவர் எஸ்.ஐ.ஜியாவுத்தீன் அவர்கள், 18.10.2014 சனிக்கிழமை காலை 09.30 மணியளவில் காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில், நம் தம்மாம் காயல் நற்பணி மன்றம் இக்ராஃ கல்விச் சங்கத்துடன் இணைந்து நடத்திய - காயல்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பள்ளிகளின் மாணவ-மாணவியர் பங்கேற்ற மூன்றாவது அறிவியல் கண்காட்சிப் போட்டி பற்றிய விளக்கத்தைத் தெரிவித்தார்.
இவரின் உரையைத் தொடர்ந்து மன்றத்தின் பொதுச் செயலாளர் ஜனாப். அஹமது ரபீக் அவர்களின் உரை அமைந்தது.
அவர்களின் உரையில் சென்ற பொதுக்குழுவிற்கும் இந்த பொதுக்குழுவிற்கும் இடையில் மன்றத்தால் செய்யப்பட நல உதவிகளைத் தெரிவித்ததோடு, ஜனசேவா வட்டியில்லாக்கடன் குறித்த பல பயனுள்ள தகவல்களை அறியத் தந்தார்.
பாராட்டு:
நம் காயல்பட்டினத்தில் அண்மையில் தொடராகப் பெய்த வடகிழக்குப் பருவமழையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பணிகளை ஒருங்கிணைந்த முறையில் செய்திடுவதற்காக ‘காயல்பட்டினம் மழை - வெள்ள நிவாரணக் குழு’ எனும் பெயரில் தற்காலிக அமைப்பு துவக்கப்பட்டு, நிவாரணப் பணிகள் செய்யப்பட்டு வருகிறது..மழை வெள்ளத்தால்பெருமளவில் பாதிக்கப்பட்டஅம்மக்களுக்கு நிலையான நிவாரண உதவிகளைச் செய்யவும், அவர்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டவும் முயற்சிகள் செய்து வரும் இந்தக் குழுவிற்கு பாராட்டுக்களைத் தெரிவித்து, அந்த நல்ல காரியங்களில் நம் மன்றமும் பங்கு பெற வேண்டியதின் அவசியத்தையும்,
சுற்றுப்புறத் தூய்மைக்கு செயல்திட்டம்:
நோய் இல்லாத வாழ்விற்கு அதி முக்கியம் சுற்றுப்புறத் தூய்மை தான். அதில் கூடுதல் கவனம் எடுத்து நம் ஊரையும் நம் கடற்கரையையும் தூய்மையாக வைத்து இருக்க சுற்றுப்புற சுகாதார மையம் (Environmental Program) ஒன்றை ஏற்படுத்த முயலுவது என்றும், அதற்கு சம்பந்தப்பட்ட ஆர்வலர்களைத் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பது என்றும் அதற்கு மன்ற உறுப்பினர்கள் உதவிக்கரம் நீட்டுமாறும் வேண்டுகோள் விடுத்தார்...
புதிய உறுப்பினர்கள் அறிமுகம்:
இவர்களின் உரையைத் தொடர்ந்து, தம்மாம் பகுதிக்குப் புதிதாய் வந்துள்ள சகோதரர்களான M.H. அப்துல் நஜீர்,M. செய்யது முஹம்மத் ஆகியோர் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு மன்றத்தில் இணைத்துக் கொண்டார்கள்.
கேள்வி - பதில்:
அடுத்ததாக, செயற்குழு உறுப்பினரும் ஆக்சன் கமிட்டி ஒருங்கிணைப்பாளருமான சகோதரர் முஹம்மது இஸ்மாயில் (தம்மாம் இஸ்மாயில்) அவர்கள், அழகிய கடன் வங்கியான, ஜனசேவா வங்கியைப் பற்றி விரிவான உரையையும், உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு நிறைவான பதிலையும் தந்து, உறுப்பினர்களுடையே மிகுந்த ஆர்வத்தை உண்டாக்கினார். பல உறுப்பினர்கள் பெரிய அளவில் வைப்பு நிதிகளை வழங்கி தங்களை ஜனசேவாவில் இணைத்துக்கொண்டார்கள். அல்ஹம்து லில்லாஹ்.
மார்க்க அறிவுரை:
அதனைத் தொடர்ந்து தம்மாம் இஸ்லாமிய வழிகாட்டு மையத்தின் மூத்த மார்க்கப்பேரறிஞர் மௌலவி நூஹூ மஹ்லரி அவர்களின் மார்க்க உரை நடைபெற்றது. இதில் பணம் சம்பாதிப்பது, செலவு செய்வது, வட்டியின் கொடுமை, ஜனசேவா வின் அவசியம் போன்றவற்றை விளக்கிப் பேசினார்கள்.
இறுதியில் வல்ல அல்லாஹ்விற்கும், கலந்து சிறப்பித்த அனைவர்களுக்கும், உறுதுணை புரிந்த சகோதரர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்து, துஆவுடன் நிறைவு செய்தார், மன்றத்தின் பொதுச் செயலாளர் ஜனாப் அஹமது ரஃபீக் அவர்கள். அல்ஹம்து லில்லாஹ்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தம்மாம் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |