நவம்பர் 2014 முடிய, 2014 - 2015 நிதியாண்டில் காயல்பட்டினம் நகராட்சிக்கு, தமிழக அரசு மூலமாக 2
கோடியே, 6 லட்சத்து, 54 ஆயிரத்து, 883 ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பென்ஷன் வகை, New Health Insurance Scheme. NHIS வகை,
சிறப்பு சாலை அமைப்பு திட்டங்களுக்காக TUFIDCO நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட கடன், TNUDF நிறுவனத்திற்கு செலுத்தப்படும் தொகை - ஆகிய
வகைகளுக்கு 15 லட்சத்து, 15 ஆயிரத்து, 795 ரூபாய் பிடித்தம் (deductions) போக மீதி தொகை மொத்தம் 1 கோடியே, 91 லட்சத்து, 39
ஆயிரத்து 88 ரூபாய் - நகராட்சி வங்கி கணக்குக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நவம்பர் 2014
அரசு உதவி தொகை (A) - 29,50,698
பிடித்தம் (Deductions) (B) - 2,50,399
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 27,00,299
ஏப்ரல் - நவம்பர் 2014
அரசு உதவி தொகை (A) - 2,36,05,581
பிடித்தம் (Deductions) (B) - 17,66,194
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 2,18,39,387
2013 - 2014 நிதியாண்டில் - காயல்பட்டினம் நகராட்சிக்கு, தமிழக அரசு மூலமாக 2 கோடியே , 90
லட்சத்து , 22 ஆயிரத்து 48 ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பென்ஷன் வகை, சிறப்பு சாலை அமைப்பு திட்டங்களுக்காக TUFIDCO
நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட கடன், குடிநீர் விநியோக கடன் வகைக்கு HUDCO நிறுவனத்திற்கு செலுத்தப்படும் தொகை - ஆகிய வகைக்களுக்கு 26
லட்சத்து , 47 ஆயிரத்து 875 ரூபாய் பிடித்தம் (deductions) போக மீதி தொகை மொத்தம் 2 கோடியே , 63 லட்சத்து, 74 ஆயிரத்து 173 ரூபாய் -
நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2013 - மார்ச் 2014
அரசு உதவி தொகை (A) - 2,90,22,048
பிடித்தம் (Deductions) (B) - 26,47,875
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 2,63,74,173
2012 - 2013 நிதியாண்டில் - காயல்பட்டினம் நகராட்சிக்கு, தமிழக அரசு மூலமாக 3 கோடியே , 13
லட்சத்து , 58 ஆயிரத்து 772 ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பென்ஷன் வகை, சிறப்பு சாலை அமைப்பு திட்டங்களுக்காக TUFIDCO
நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட கடன், குடிநீர் விநியோக கடன் வகைக்கு HUDCO நிறுவனத்திற்கு செலுத்தப்படும் தொகை - ஆகிய வகைக்களுக்கு 95
லட்சத்து , 61 ஆயிரத்து 339 ரூபாய் பிடித்தம் (deductions) போக மீதி தொகை மொத்தம் 2 கோடியே , 17 லட்சத்து , 97 ஆயிரத்து 433 ரூபாய்
- நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2012 - மார்ச் 2013
அரசு உதவி தொகை (A) - 3,13,58,772
பிடித்தம் (Deductions) (B) - 95,61,339
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 2,17,97,433
2011 - 2012 நிதியாண்டில் - காயல்பட்டினம் நகராட்சிக்கு, தமிழக அரசு
மூலமாக 3 கோடியே , 27 ஆயிரத்து 208 ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பென்ஷன் வகை, சிறப்பு சாலை அமைப்பு திட்டங்களுக்காக
TUFIDCO நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட கடன், குடிநீர் விநியோக கடன் வகைக்கு HUDCO நிறுவனத்திற்கு செலுத்தப்படும் தொகை -
ஆகிய வகைக்களுக்கு 58 லட்சத்து , 67 ஆயிரத்து 380 ரூபாய் பிடித்தம் (deductions) போக மீதி தொகை மொத்தம் 2 கோடியே , 41 லட்சத்து , 59 ஆயிரத்து 828 ரூபாய் - நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2011 - மார்ச் 2012
அரசு உதவி தொகை (A) - 3,00,27,208
பிடித்தம் (Deductions) (B) - 58,67,380
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 2,41,59,828
தகவல்:
நகராட்சி நிர்வாகத்துறை, சென்னை.
|