இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்ப்புப் பணி, அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் தலைமையில், காயல்பட்டினத்தில் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் முறைப்படுத்தப்பட்ட உறுப்பினர் சேர்ப்புப் பணி தமிழகமெங்கும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அந்த வரிசையில், காயல்பட்டினத்திலும், மாவட்டத்தின் அனைத்து கிளைகளிலும் உறுப்பினர் சேர்ப்புப் பணியை தீவிரப்படுத்திட - அண்மையில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
காயல்பட்டினத்தில்...
அதனடிப்படையில், இம்மாதம் 01ஆம் நாள் வியாழக்கிழமையன்று 16.30 மணியளவில், காயல்பட்டினம் 03ஆவது வார்டுக்குட்பட்ட நெய்னார் தெருவில் உறுப்பினர் சேர்ப்புப் பணி, கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமையில் நடைபெற்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இந்திய முஸ்லிம்கள் ஒன்றிணைய வேண்டியதன் அவசியம் குறித்து தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூபும் பரப்புரை செய்துகொண்டே செல்ல, கட்சி நிர்வாகிகள் உறுப்பினராக விரும்பிய பெண்கள் உள்ளிட்ட பொதுமக்களிடம் படிவத்தை வழங்கி, பூர்த்தி செய்து பெற்றுக்கொண்டனர்.
நெய்னார் தெருவிலுள்ள பெண்கள் தைக்காவில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியிலும் மாநில நிர்வாகிகள் உரையாற்ற, அதன் தொடர்ச்சியாக அங்கிருந்த ஏராளமான பெண்கள் உறுப்பினராவதற்கு விண்ணப்பித்துள்ளனர்.
கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், காயல்பட்டினம் நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், காயல்பட்டின் நகரின் மூத்த தலைவர் எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம், நகர நிர்வாகிகளான ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், எம்.எல்.ஷேக்னா லெப்பை, பீ.எம்.எஸ்.அமானுல்லாஹ், முஹம்மத் முஹ்யித்தீன், எம்.இசட்.சித்தீக், கே.எம்.டீ.சுலைமான் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டவர்களாவர்.
ஆத்தூரில்...
அதன் தொடர்ச்சியாக, இம்மாதம் 04ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று தெற்கு ஆத்தூரில் உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது.
கட்சியின் தெற்கு ஆத்தூர் கிளை தலைவர் எல்.இ.அப்துல் காதிர் தலைமையிலும், அதன் நிர்வாகி அப்பாஸ் முன்னிலையிலும் நடைபெற்ற இம்முகாமில், கட்சியின் மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், காயல்பட்டினம் நகர நிர்வாகிகளான ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், பெத்தப்பா சுல்தான், எம்.இசட்.சித்தீக் ஆகியோர் இணைந்து களப்பணியாற்றினர்.
சென்ற இடங்களிலெல்லாம் பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்து, உறுப்பினர் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
இத்தகவல்களை, கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் தெரிவித்துள்ளார்.
தகவல்களுள் உதவி:
மன்னர் பாதுல் அஸ்ஹப்
(மாவட்ட துணைத்தலைவர்)
படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்
(காயல்பட்டினம் நகர இளைஞரணி அமைப்பாளர் - இ.யூ.முஸ்லிம் லீக்)
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |