புகழ்பெற்ற தொழிலதிபரும், பல்வேறு கல்வி நிறுவனங்களையும் - பொதுநல அமைப்புகளையும் உருவாக்கியவரும், சேனா ஆனா (செ.அ.) என பரவலாக அழைக்கப்பட்டவரும், இ.டீ.ஏ. குழும நிறுவனங்களின் துணைத்தலைவரும் - கீழக்கரையைச் சேர்ந்தவருமான ஹாஜி பி.எஸ்.அப்துர்ரஹ்மான் என்ற புகாரீ செய்யித் அப்துர் ரஹ்மான் இன்று 17.30 மணியளவில் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 87.
அன்னாரின் ஜனாஸா, நாளை (ஜனவரி 08 - வியாழக்கிழமை) 11.30 மணிக்கு சென்னையிலுள்ள அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, வண்டலூரிலுள்ள க்ரஸண்ட் பள்ளி வளாகத்தில் 13.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
பல்வேறு கல்வி நிறுவனங்களைத் துவக்கி நிர்வகித்து வரும் சீதக்காதி அறக்கட்டளை, All India Islamic Foundation (அனைத்திந்திய இஸ்லாமிய நிறுவனம்), பி.எஸ்.அப்துர்ரஹ்மான் பல்கலைக் கழகம் உட்பட பல நிறுவனங்களை இவர் நிறுவி, நிர்வகித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவரது படங்கள் சில...
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 21:50 / 07.01.2015]
3. Re:...இன்ன லில்லாஹி வ இன்ன இலை ஹி .. ராஜிஊன் posted byA.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA)[07 January 2015] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38786
இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் ...
மிகவும் சிறந்த பண்பாளர் & பொது நலவாதி.
இவரால் நமது சமூதாய மக்கள் பலர் பயன் அடைந்து உள்ளார்கள்.
வல்ல நாயன் மர்ஹூம் அவர்களுக்கு மேலான சுவன பதியில் நல்ல உயர்ந்த இடத்தினை கொடுப்பதுடன் , அவனது உகப்பான நல்லடியார்கள் கூட்டத்தில் இவறையும் இணைத்து வைப்பானாக . ஆமீன் .
6. Re:...condolence posted bys.d.segu abdul cader (quede millath nagar)[07 January 2015] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38790
CONDOLENCE
Assalamu alaikum wrwb.
INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.
May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous.
I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.
Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.
7. Re:...மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னிப்பானாக! posted byM.S.ABDULAZEEZ (China Guangzhou)[07 January 2015] IP: 14.*.*.* China | Comment Reference Number: 38793
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன்.
எல்லாம் வல்ல ரஹ்மான், அவனுடைய மேலான கிருபையினாலும், நம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பாரக்கத்தினாலும், மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னிப்பானாக!
அவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக! அவர்களின் குடும்பத்தார்களுக்கு நல்ல பொறுமையையும் கொடுப்பானாக!
அன்னவர்களுக்கும் நம் யாவர்க்கும் அவனுடைய ரிழா என்னும் திருப்பொருத்ததையும் தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்துடன் நாளை
மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக! ஆமீன்!
11. Re:... posted byM.S. Shah Jahan (Singapore )[07 January 2015] IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 38797
ரஹ்மான் காக்காவிடம் நான் கற்ற முதல் பாடம்.
அது 1964 மார்ச் அல்லது ஏப்ரல் மாதம். ஹாங்காங்கில் பல்லாக் கம்பெனி சதக்கு ஹாஜியார் அவர்களோடு 611 China Building பணியாற்றி வந்தேன்.
ரஹ்மான் ஹாஜியார் உலக சுற்றுப்பயணம் சென்று வந்த பின் சதக்கு ஹாஜியாரைப் பார்ப்பதற்காக வந்தார்கள். பேச்சு நடுவில் என்னைப் பார்த்து " தம்பி யாரு ?" என்று என்னைப் பார்த்துக் கேட்டார்கள். நான் "உங்களுக்கு என்னைத் தெரியாது" என்றேன்.
காரணம் நான் கொழும்பில் வளரவில்லை. அதோடு படிப்பு, விளையாட்டு என்று என் காலம் போனது. நம் மக்களோடு எனக்கு தொடர்பில்லை. எனக்குப் பலரைத் தெரியாததால் பலருக்கும் என்னைத் தெரியாது என்ற சிறு மதி.
"வாப்பா பெயர் என்ன" என்று கேட்டார்கள். சொன்னேன். உடனே எனது தந்தையின் அங்க அடையாளங்கள் அனைத்தையும் சொல்லி வேறு விபரங்களையும் சொன்னார்கள். அசந்து விட்டேன். முதல் குத்திலேயே நான் நாக் அவுட் ஆகிவிட்டேன். இந்த மனிதர் சாதாரண ஆள் இல்லை என்று அப்போதே மனதில் பதிந்துவிட்டது.
சுமார் 10 வருடங்களுக்கு முன்பு காயல் நகரில் அவர்களுக்கு ஒரு வரவேற்பு கொடுக்க வேண்டும் என்ற என் பிரேரணை கூடி வரவில்லை. தனக்காக மட்டும் வாழாத பெருமகன் ரஹ்மான் காக்கா. எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு சுவனபதியைக் கொடுப்பானாக. ஆமீன்.
12. Re:...KULLUMAN ALAIHA FAAN posted byNaseem (Srilanka)[07 January 2015] IP: 103.*.*.* Sri Lanka | Comment Reference Number: 38798
இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்
மறைந்த மர்ஹூம் அவர்களின் பிழைகளை இறைவன் மன்னித்து அவர்கள் சமுதாயத்திற்கு செய்த சேவைகளை ஏற்றுக்கொண்டு மேலான சுவனத்தைக் கொடுப்பானாக. அன்னாரின் குடும்பத்தாருக்கு சபூர் எனும் பொருமையைக் கொடுப்பானாக ஆமீன்
13. Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[07 January 2015] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38799
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இமயம் சரிந்தது என்று சொல்லுவார்களே, அது உண்மை ஆகும் என்று உணர முடிகின்றது.
இவர்களை யார் என்று கூறுவது..? கல்வியாளரா...? பெரும் தொழில் அதிபரா..? பெரும் கொடை வள்ளலா..?, பல ஆயிரம் குடும்பங்களின் நெஞ்சில் பாசத்தை வளர்த்து, துஆக்களை பெற்றுக்கொண்டு இருக்கும் நல்லவரா, ஊஹூம். அனைத்தையும் ஒன்றாக கலந்த கலவை இவர்கள்.
வலை தளங்களிலும், சமூக ஊடகங்களிலும் இவர்களைப் பற்றி மக்கள் கூறும் கருத்துக்களை படித்ததும் நபிகள் நாயகத்தின் ஹதீஷும், இந்த குறளும் தான் நினைவுக்கு வருகின்றது..
ஒரு முறை, மக்கள் ஒரு ஜனாஸாவைக் கடந்து சென்றபோது, இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உறுதியாகிவிட்டது" என்றார்கள். மற்றொரு முறை வேறொரு (ஜனாஸாவைக்) கடந்து சென்றபோது மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசலாயினர். அப்போதும் நபி(ஸல்) அவர்கள், 'உறுதியாகிவிட்டது?' எனக் கூறினார்கள்.
உமர்(ரலி) 'எது உறுதியாகிவிட்டது?' எனக் கேட்டதும் நபி(ஸல்) அவர்கள், 'இவர் விஷயத்தில் நல்லதைக் கூறிப் புகழ்ந்தீர்கள்; எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது. இவர் விஷயத்தில் தீயதைக் கூறினீர்கள். எனவே இவருக்கு நரகம் உறுதியாகிவிட்டது. ஆக நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாகவீர்கள்" எனக் கூறினார்கள்
சகோதரர் எம். எஸ். ஷாஜஹான் அவர்களுக்கு நடந்த சம்பவம் போல எனக்கும் நடந்தது.
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி மாணவனாக இருந்த சமயம், அங்கு United Economic Form மீட்டிங் நடைபெற்றது. அப்போது நமது மறைந்த பாதுல் அஷ்ஹாப் ஹாஜியார் அவர்கள் என்னை அழைத்து, அருகில் இருந்த பி.எஸ்.அப்துர்ரஹ்மான் ஹாஜியாரிடம், என்னுடைய சொந்தக்கார பையன்தான், என் பேத்தியை தான் மணமுடிக்க போகிறார் என்று அறிமுகப்படுத்தியதும்,…,
அவர்கள்.. நான் வந்ததில் இருந்தே இந்த பையனை கவனித்து வருகின்றேன், அங்கும் இங்கும் ஆடி ஓடி எல்லோரையும் கவனிக்கும்போதே, தம்பி நம்ம கீழக்கரை அல்லது காயல்பட்டினமாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன் என்று விசாரித்து, வாப்பாவின் பெயரை கேட்டார்கள்..
பெயரை சொன்னதும்... அடடே சென்னை, தேனாம்பேட்டை எங்க பெட்ரோல் பாங்க்கில் மேனேஜர் ஆக இருந்த ஐதுரூஸ் மகனா என்று அனைத்துக் கொண்டார்கள். அவர்களின் மனம் இன்னும் என் சுவாசத்தில் நிற்கின்றது.
எந்த உதவி வேண்டுமானாலும் என்னை வந்து பாரு, படிப்பு முடிந்ததும் என்னை சந்தி என்றார்கள். அந்த சந்தர்ப்பம் கிட்டவை இல்லை.
கிருபையுள்ள வல்ல அல்லாஹ் இவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களை மன்னித்து, அவர்களின் கபுரில் சுவன தென்றலை வீசச்செய்து, மறுமையில் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை அளிப்பானாக.
16. Re:...நமது காலத்தில் வாழ்ந்த வள்ளல் posted bymackie noohuthambi (kayalpaattinam)[08 January 2015] IP: 180.*.*.* India | Comment Reference Number: 38805
இஸ்லாமிய சரித்திரத்தில் "செத்தும் கொடுத்த சீதக் காதி" வள்ளலை படிக்கிறோம். தமிழ் சரித்திரத்தில் "முல்லைக்கு தேர்" கொடுத்த பாரி வள்ளலை படிக்கிறோம். இதிகாசங்களில் "என்ன கொடுப்பான் எது கொடுப்பான் என்று நினைக்கும் முன்னே அள்ளிக் கொடுப்பான் போதாது போதாது என்றால் இன்னும் கொடுப்பான்" என்று அள்ளிக் கொடுத்த கர்ணன் என்ற வள்ளலை படிக்கிறோம்.
இன்றைய அறிவியல் முன்னேற்றத்தில் இதை எல்லாம் அசை போடுகிறவர்கள் இவை நடைமுறை சாத்தியமா என்று ஒரு கணம் சிந்திப்பதுண்டு - விவாதிப்பதுண்டு.
ஆனால் நாம் வாழும் காலத்தில் அப்படி ஒரு வள்ளல் வாழ்ந்தார்கள் என்ற உண்மையை B .S அப்துர் ரஹ்மான் அவர்கள் நிறுவியுள்ள கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், மக்களுக்கு வாரி வழங்கிய வள்ளல் தன்மைகள் எல்லாம் நிதர்சனமாக நம் கண்களில் தெரிந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் மறைந்து விட்டாலும் இந்த நிறுவனங்களை பார்க்கும் போது அவர்களால் உருவாக்கப்பட்ட கலைஞர்கள், பொறி இயல் வல்லுனர்கள், மருத்துவ வல்லுனர்கள், தொழில் ஜாம்பவான்கள், அவர்களிடம் உதவி பெற்று தங்கள் வாழ்வாதரங்களை உயர்த்திக் கொண்டு வாழும் எல்லோர் உள்ளங்களிலும் இல்லங்களிலும் அவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பது தெரிகிறது..
அள்ளிக் கொடுத்து வாழ்பவன் நெஞ்சம் ஆனந்த பூங்காற்று -
வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர்போல் யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
என்ற கவிதை வரிகளுக்கு உயிர் ஓட்டமாய் விளங்குகின்ற பீ.எஸ்.அப்துர் ரஹ்மான் வள்ளல் அவர்களுக்கு இந்த அரசு ஒரு பத்ம ஸ்ரீ விருதை அளித்து கௌரவித்து இருந்தால் அவர்களால் அந்த விருது புகழ் பெற்றிருக்கும்.
நாட்டுக்கும், மொழிக்கும் சமுதாயத்துக்கும் அளப்பரிய சேவை ஆற்றி மறைந்திருக்கும் சேவை செம்மல் அவர்களின் எல்லா நல்ல பணிகளையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக. அவர்கள் பிழைகளை மன்னித்து அருள்வானாக. அவர்கள் மண்ணறையை சொர்க்க பூஞ்சோலையாக ஆக்கி வைப்பானாக. மறுமையில் அவர்களுக்கு மேலான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சொர்க்க வாழ்வை நசீபாக்கி வைப்பானாக. அவர்கள் அடிச் சுவட்டை பின் பற்றி அவர்கள் சந்ததிகள் அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை முன்னெடுத்து செல்ல எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கு தவ்பீக் செய்வானாக.
அவர்கள் குடும்பத்தினருக்கு- எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்து வாழும் எங்கள் அன்பு தந்தை - மறைந்த வள்ளலின் நட்பு வட்டத்தில் வாழ்ந்த- காயல்பட்டினம் அல்ஹாஜ் முஹம்மது மக்கி ஆலிம் அவர்கள் மக்களாகிய நாங்கள் எங்களின்அனுதாபங்களையும் து ஆக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
17. إنـا لله وانـا اليـــه راجـعــــــــون posted byyahya mohiadeen (dubai)[08 January 2015] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38806
أللـهـــــــــم اغـفــــر لـه وارحـمـــــــــه
இன்றைய நாட்களைப் போல் தொழில் நுட்ப வசதிகள் போதிய அளவு இல்லாத நாட்களிலேயே தங்களின் நிறுவனங்களை சிகரத்தின் உச்சியில் நிறுத்தியவர்.
மேலும், நம்மவர்கள், மாணிக்க கற்களுடன் இலங்கை, ஹாங்காங் போன்ற நாடுகளில் வாணிபம் செய்த காலங்களில், துணிந்து பெல்ஜியம் சென்றவர் என்று அறிந்திருக்கிறேன்.
இன்னும், பட்டதாரிகளுக்கு மட்டுமே வெளிநாடு செல்லும் தகுதி கிட்டும் என்ற நிலையை மாற்றி சாதாரணமாணவர்களும் இங்கு (துபாய்) வந்து, தத்தமது குடும்பங்களின் பொருளாதார நிலையை உயர்த்த முடியும் என்று நம்பி, அதனை நிரூபித்தவர்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நற்சேவைகளை ஏற்று அவர்களை மேலான சுவனத்தில் சேர்த்து வைப்பானாக.
அன்னவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு மற்றும் அனைவர்களுக்கும் சப்ருன் ஜமீல் என்ற பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்.
18. Re:... posted bymohamed salih (chennai)[08 January 2015] IP: 122.*.*.* India | Comment Reference Number: 38807
இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் ...
மிகவும் சிறந்த பண்பாளர் & பொது நலவாதி. இவரால் நமது சமூதாய மக்கள் பலர் பயன் அடைந்து உள்ளார்கள்.
அதில் நானும் ஒருவன் என்று நினைக்கும் போது பெருமை அடைகிறேன் .
வல்ல நாயன் மர்ஹூம் அவர்களுக்கு மேலான சுவன பதியில் நல்ல உயர்ந்த இடத்தினை கொடுப்பதுடன் , அவனது உகப்பான நல்லடியார்கள் கூட்டத்தில் இவறையும் இணைத்து வைப்பானாக. ஆமீன்.
என்றும் உங்கள் அன்புடன்,
முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்
சென்னை
20. மனிதருள் மாணிக்கம்! posted byS.K.Salih (Kayalpatnam)[08 January 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 38809
செல்வச் செழிப்பில் வாழ்ந்தாலும், சேவையே குறிக்கோளாய்க் கொண்டு வாழ்ந்த நம் சமகால மனிதப் புனிதர்.
அளவிலா நிலையான நன்மைகளுக்கு (ஸதக்கத்துன் ஜாரியாவுக்கு) சொந்தக்காரர்.
இந்தியாவில் - குறிப்பாக தமிழகத்தில் அவர் மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயன்பெறாதோரை விரல் விட்டு எண்ணிவிடலாம். அத்தனை பேரின் அளவிடவியலா துஆக்கள் மட்டுமே போதும் அவர்களின் மறுமை மோட்சத்திற்கு!
ஆனாலும், அதையெல்லாம் தாண்டி, தன் சுய வாழ்வில் ஓழுக்கம் பேணியவர்... வணக்க வழிபாடுகளை எந்நாளும் மறவாதவர்... தான் இறைவனின் மகத்தான அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டவன் என்பதை தனது ஒவ்வொரு நடவடிக்கையிலும் வெளிப்படுத்தியவர்.
நம் வாழ்நாளில் சந்தித்த வெகுசில நல்லவர்களுள் முதன்மைப் பட்டியலில் உள்ள ஒரு பெருந்தகையை இழந்துவிட்டோம்...
கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூம் பி.எஸ்.அப்துர்ரஹ்மான் ஹாஜியார் அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - அவர்களது குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையையும், மர்ஹூம் அவர்கள் விட்டுச் சென்றுள்ள மகத்தான நற்பணிகளைத் தொடர்ந்து உற்சாகத்துடன் செய்யும் பாக்கியத்தையும் வழங்கியருள்வானாக... ஆமீன்.
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.
துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.
21. posted bySHEIKH ABDUL QADER (RIYADH)[08 January 2015] IP: 37.*.*.* | Comment Reference Number: 38810
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.
இறையருள் நிறைக.
கல்விக்கும்,உதவிக்கும்,பொதுநல சேவைக்கும் ஒரு கலங்கரைவிளக்கமாகத்திகழ்ந்த ஹாஜி பி.எஸ்.அப்துர்ரஹ்மான் அவர்களின் தார்மீககுண நலன்கள் தரையைவிட்டும் மனதைவிட்டும் நீங்குவதில்லையென்று செய்திப்பதிவும் கருத்துப்பதிவும் களமிட்டுக்காட்டுகுன்றன மாஷாஅல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்.
தாழம்பூத்தோட்டத்திலிருந்து ஒரு முதிர்ந்தபூவை இறைவன் விரும்பிகொய்துகொண்டான் அதன்நறுமணம் இன்ஷா அல்லாஹ் மறுமைவரைக்கும் மணக்கும் அந்தத்தோட்டத்திலுள்ள மலர்கள் தாம் தம்முடிசூடாமலரின் பிரிவால்வாடியிருக்கும் மலர்களுக்குப்புத்துணர்வைக்கொடுத்து அதன்சிறந்த குணநலன்களை அதன்கிளைகளில் இறுதிநாள்வரை தொடர்ந்து பயன்தந்து நிலைக்கும் சந்ததிகளாக்கித்தருவானாக ஆமீன்.
பட்டியலிடும்வகையில் மறைந்தும் மணம்தந்து வாழ்ந்துகொண்டிருக்கும் வரிசையில் ஹாஜி பி.எஸ்.அப்துர்ரஹ்மான் அவர்களை இறைவன் சேர்த்துவிட்டான் அவனே மிகப்பெரியவன். அல்ஹம்துலில்லாஹ் அவனுக்கேஎல்லாபுகழும்.
அன்னவரைப்பிரிந்த குடும்பத்தினர்,கல்விக்கூடங்கள், தொழிற்கூடங்கள்,தொழிலாளிகள், நிறுவனங்கள்,நிர்வாகிகள் உதவிபெற்றோர்,கல்விபெற்றோர்,இன்னும் தொழிலுதவியும் பொருளுதவியும் ,கல்விபெற்றுக்கொண்டிருப்போர் அனைவருக்கும் அழகியபொறுமையைக்கொடுத்து அவர்கள்கட்டிய அரணைக்கட்டிக்காத்துவளர்த்துவரும் திறனை தொடர்ச்சியாக அம்மக்களுக்குக்கொடுத்து அவ்விடத்திற்கு நிறைவான ஒருவரைக்கொடுத்து நிவர்த்திசெய்தருள்வானாக ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
24. அனைத்து சமுதாய மக்களின் நெஞ்சத்திலும் இடம் பெற்றுள்ள இந்தியாவின் இஸ்லாமிய இமயம் மர்கூம் அவர்கள் ! posted bymohideen abdul kader (AbuDhabi)[08 January 2015] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38813
எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட அல்ஹாஜ் B.S.அப்துர் ரஹ்மான் அவர்களின் நல்லமல்களை ஏற்று பாவப்பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமுடன் விசாலமாக்கியும் வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ்
எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.
அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாரர்கள்
அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையையும்
எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்கியருள்வானாக ஆமீன்.
அன்னவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு மற்றும் அனைவர்களுக்கும் சப்ரன் ஜமீல் என்ற பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்.
மறைந்த மர்ஹூம் அவர்களின் பிழைகளை இறைவன் மன்னித்து அவர்கள் சமுதாயத்திற்கு செய்த சேவைகளை ஏற்றுக்கொண்டு மேலான சுவனத்தைக் கொடுப்பானாக. அன்னாரின் குடும்பத்தாருக்கு சபூர் எனும் பொருமையைக் கொடுப்பானாக ஆமீன்
கீர்த்திமிகு கீழக்கரை மகான் வெள்ளஹுமது லெப்பை , மாப்பிள்ளை லெப்பை குடும்ப வட்டத்தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து மறைந்த மா மனிதர் மச்சான் BSA அவர்கள் குடும்பத்தினருக்கு-
எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்து வாழும் எங்கள் அன்பு தந்தை - மறைந்த வள்ளலின் நட்பு வட்டத்தில் வாழ்ந்த- காயல்பட்டினம் தைக்கா முத்துவாப்பா ஆலிம் அவர்கள் மக்களாகிய நாங்கள் எங்களின் அனுதாபங்களையும் துஆ க்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
63:10. உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாதது மரணிக்கும் சமயம்); “என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான்.
அவர்களுக்கு இறைவன் சிறப்பான இவ்வுலக வாழ்வு தந்தது போல் மறு உலக வாழ்வின் மேலான ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் ஈடேற்றத்துக்காக நமது சமர்ப்பணமாக திலாவத் செய்து துஆ ஓதி நம் நன்றிக் காணிக்கையாக நிறைவேற்றுவோம்.
الى حضرة روح سيدنا و نبينا و مرشدها و مولانا محمد صلى الله عليه وسلم
. ثم الى روح من نويناهم الفاتحة......
الحمد الله رب العالمين ........اما بعده أقرء سورة يس سورة اخلاص والسورة فلق والناس و بعده
ادعو (دعا) الى للموتا كم
الحمد لله رب العلمين ، حمدا يوافي نعمه ويكافئ مزيده
اللهم صل على سيدنا و مولنا محمد وعلى ا'ل سيدنا مولنا محمد، اللهم اوصل ثواب ما قرءناه من كلامك العزيز هذه هدية واصلة ورحمة نازلة وبركة شاملة وتحفة كاملة منك الى روح سيدنا ونبينا محمد صلى الله عليه و سلم خاصة
ثم الى ارواح المسلمين عامة ثم الى روح من تلونا القرا'ن العظيم خصوصا
عبد الرحمن صاحب المرحوم الحاج الحرمين ابن العالم بخاري الكركري لاجله واغفر له ،وارحمه وغفر الله ذنوبه BSA الى روح
اللهم اجعل قبره روضةمن رياضالجنان ولا تجعل قبره حفرة من حفر النيران انك انت السميع العليم ا.ا'مين.
وألهم اهلها الصبر واحبابها وجمعكم بها في الفردوس الأعل وأعظم اجركم واجرهم وغفر لميتكم وأحسن عزائ'امين
اللهم اغفر له وارحمه واعف عنه اللهم اكرم نزله ووسع مدخله وبدّله داراً خيراً
داره وأهلاً خيراً من اهله اللهم اغسله بالماء والثلج والبرد ونقه من الذنوب والخطايا كما ينقى الثوب الابيض من الدنس اللهم ثبته بالقول الثابت اللهم قه عذاب القبر وعذاب النار اللهم ادخله الجنة مع الابرار اللهم الهم اهله وذويه الصبر والسلوان اللهم لا تحرمهم اجره ولا تفتنهم بعده اللهم وارحم اموات المسلمين وارحمنا اذا ما صرنا إلى ما صاروا اليه ..ق
هن رحمةالله القاهري ابن تيكا متوابا عالم القادري القاهري عفي عنهما
இந்த துஆவை எல்லா மவ்த்தாக்களுக்கும் ஓதலாம் ஒரு சில இடத்தில் மட்டும் (ஆண் ,பெண் வார்த்தைகளுக்கேற்ப. - لها / له or ها / ه /என ) மாற்றம் தேவை . வஸ்ஸலாம் والسلام
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross