காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியையடுத்து அமைந்துள்ளது மஹான் பேர் மஹ்மூத் மஜ்தூப் வலிய்யுல்லாஹ் தர்கா. மஹான் அவர்களின் 311ஆம் ஆண்டு கந்தூரி நிகழ்ச்சிகள், இம்மாதம் 05ஆம் நாள் புதன்கிழமை நடைபெற்றது.
கந்தூரியை முன்னிட்டு, ரபீஉல் அவ்வல் பிறை 01 முதல் 13 வரை ஒவ்வொரு நாளும் ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் கத்முல் குர்ஆன் ஓதி ஈஸால் தவாப் செய்யப்பட்டது. பிறை 01 முதல் 14 வரை இஷா தொழுகைக்குப் பின் மார்க்க அறிஞர்களால், பின்வரும் நிகழ்முறைப்படி உரை நிகழ்த்தப்பட்டது:-
கந்தூரி நாளான 05ஆம் நாள் (திங்கட்கிழமை) அன்று மாலையில் மஹான் அவர்களின் புகழ் பாடும் மவ்லித் மஜ்லிஸ் நடைபெற்றது.
மஃரிப் தொழுகைக்குப் பின் திக்ர் மஜ்லிஸும், இஷாவுக்குப் பின் மஹான் அவர்களின் வாழ்க்கைச் சரித சொற்பொழிவும் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவரும், காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ சொற்பொழிவாற்றினார்.
இம்மாதம் 06ஆம் நாள் செவ்வாய்க்கிழமையன்று (நேற்று) அதிகாலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் தபர்ருக் எனும் நேர்ச்சை வினியோகம் நடைபெற்றது. அனைத்து நிகழ்ச்சிகளிலும், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை, கந்தூரி கமிட்டி தலைவர் ஸ்டார் எம்.எஸ்.எம்.அப்துல் காதிர், செயலாளர் பீ.எம்.ஏ.முஹ்யித்தீன் அப்துல் காதிர், பொருளாளர் டீ.எம்.கே.முஹம்மத் ஹஸன், துணைச் செயலாளர்களான எஸ்.எம்.முஹம்மத் இத்ரீஸ், எஸ்.எச்.தைக்கா தம்பி, கே.எம்.டீ.சுலைமான், எம்.ஓ.பிலால் அமீன் ஆகியோர் செய்திருந்தனர்.
தகவல்:
‘வங்காளம்’ உமர் அனஸ்
பேர் மஹ்மூத் வலிய்யுல்லாஹ் அவர்களின் கடந்தாண்டு (310ஆம் ஆண்டு) கந்தூரி நிகழ்ச்சிகள் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 14:46 / 07.01.2015] |