உணவுக் கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பயோகேஸ் திட்டத்தைக் காயல்பட்டினத்தில் செயல்படுத்திட - தமிழக அரசு அனுமதி வழங்கி, ரூபாய் 90 லட்சம் நிதியொதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.
காயல்பட்டினத்தில் இத்திட்டத்தின் அமைவிடம் குறித்து பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. இந்நிலையில், இத்திட்டம் குறித்து, காயல்பட்டினம் ‘நகர்மன்ற துணைத்தலைவர் மற்றும் அஇஅதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள்’ என்ற பெயரில் ஒன்றும், ‘நகர அ.இ.அண்ணா தி.மு.கழகம்’ எனும் பெயரில் ஒன்றும் என - ஒட்டப்பட்டுள்ள இருவேறு சுவரொட்டிகள் வருமாறு:-
பயோகேஸ் திட்டம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
1. Re:... posted byM.Sulthan (Dubai)[06 January 2015] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38758
என்ன கொடுமை சார்... இந்த போஸ்டர் செய்தியை பார்க்கும் போது மன வேதனையைதான் அளிக்கிறது.. நான் ஒன்னு தெரியாமத்தான் கேக்குறேன்.. ஓட்டு கேக்கும் போது நான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் அல்ல.. மக்கள் தேவையே எங்கள் சேவைன்னு சொல்லி தானே ஓட்டு கேட்டு ஜெயிச்சிங்க.. இப்பொம் எங்கே இருந்து வந்தது இந்த கட்சி..
நல்லா நடக்குதுய்யா நகர்மன்றம்..
ஒன்னு கவனிச்சிங்களா தலைவியே கண்டித்து போஸ்டர் அடிச்சதும் கற்பகம் அச்சகம் & தலைவிக்கு ஆதரவு தெரிவிச்சு போஸ்டர் அடிச்சதும் அதே கற்பக அச்சகம். ஊர் மானத்தே நல்லா காப்பதுறிங்க.. இதெல்லாம் அரசியலில் சகஜமப்
2. Re:...இந்திய நண்டுகள் posted bymackie noohuthambi (kayalpaattinam)[06 January 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 38761
அவர் ஒரு விஞ்ஞானி. நண்டுகளை பற்றி ஆராய்ச்சி செய்பவர். 3 வெவ்வேறு கண்ணாடி பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பி 2-2 நண்டுகளை அதில் போடுகிறார். முதல் இரண்டு பாத்திரங்களையும் மேலே காற்றுப்போக துளை இட்டு இரண்டு அட்டைகளால் மூடுகிறார். 3வது பாத்திரத்தில் தண்ணீர் நிரம்பி இருக்கிறது. 2 நண்டுகளும் அதில் உள்ளன. ஆனால் இந்த பாத்திரத்தை மூடாமல் திறந்தே வைத்திருக்கிறார். அவரது நண்பர் இவரது அறைக்கு வருகிறார். நண்டுகள் உள்ள பாத்திரங்களை பார்க்கிறார். வித்தியாசமாக இருக்கிறதே என்று எண்ணி விஞ்ஞானி இடம் விளக்கம் கேட்கிறார்.
இப்போது விஞ்ஞானி சொல்கிறார். முதல் பாத்திரத்தில் உள்ள நண்டுகள் ஜேர்மனி நண்டுகள். இரண்டாவது பாத்திரத்தில் இருப்பது பிரித்தானிய நண்டுகள். இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே எப்போதும் போட்டி உண்டு. எனவே அந்த நண்டுகள் யார் முதலில் தப்பித்து வெளியேறி சாதனை படைக்கிறோம் பார்ப்போம் என்று ஒன்றை ஒன்று முந்திக் கொண்டு வெளியேறும். அதனால் அவற்றை மூடி வைத்திருக்கிறேன். மூன்றாவது பாத்திரத்தில் உள்ளது இந்திய நண்டுகள். அது ஒன்றை ஒன்று முந்த விடாது. ஒரு நண்டு மேலே போகும்போது அடுத்த நண்டு அதன் காலைப் பிடித்து கீழே இழுத்து விடும். எனவே அவை தப்பித்து வெளியே போகும் என்ற பயம் இல்லை. அதனால் அதை மூடி வைக்க தேவை இல்லை..
விஞ்ஞானி சொன்னது உண்மையோ கற்பனையோ நமக்கு தெரியாது. ஆனால் அதை உண்மை என்று நம்பும்படியான செய்திகள் நமது நாட்டிலும் நமது ஊரிலும் நடந்து கொண்டிருக்கிறது.தங்கப் பதக்கம் இந்தியாவுக்கு இந்த "காலை வாரி விடும்" விளையாட்டில்தான் கிடைத்தது என்று ஒரு நண்பர் நகை சுவையாக சொல்வார்.
இது இந்த பயோ காஸ் திட்டத்துக்கும் பொருந்துகிற மாதிரி தெரிகிறதே, விஷயம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். .
3. நகராட்சியில் இருந்து எந்த நன்மையும் பெறாத ஏமாளி மக்கள் நாம்!. posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[06 January 2015] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 38763
மதுரை மாநகராட்சியில் தி மு க, அ தி மு க உறுப்பினரிடையே மோதல்,சென்னையில் தி மு க,அ தி மு க ,கோவை திருச்சி,வேலூர் இன்னும் பல ஊர்களின் நகராட்சி,மாநகராட்சி போன்றவற்றில் தி மு க, அ தி மு க அல்லது தே மு தி க மற்றும் பல இரு கட்சிகளிடையே எதிரிகளாய் மோதிக்கொண்டிருக் கிறார்கள் என்ற செய்திகளைத்தான் படித்துக்கொண்டிருக் கிறோம்!
ஆனால் ஆஹா.....நம்மூரில் ஒரே கட்சியைச்சேர்ந்த இரத்தத்தின் இரத்தங்கள், இதய தெய்வம்,புரசித்தலைவி, புண்ணியத்தாய், புடம்போட்ட தங்கம் என்று புகழாரம் சூட்டி மகிழும் அந்த கட்சியின் தலைவியின் கீழ் தங்களை இணைத்துக்கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த நகராட்சி தலைவி முதல் அனைத்து உறுப்பினர்கள்வரை ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு புரளாத குறையாக,முட்டிமோதிக்கொள்ளும் காட்சிகள்
நம் நகராட்சியின் கண் கொள்ளாக்காட்சிகள் ஆகும்!
நீ இந்த திட்டத்தை கொண்டுவருகிறாயா?அதை எப்படி தடுக்கிறேம் பார் என்று ஒரு கோஷ்டியும்,அப்படியென்றால் நீங்கள் சொல்லும் எந்த திட்டமும் இமியளவும் நான் இங்கு உயிரோடு இருக்கும் வரை நிறைவேறாது என்று சபதம் ஏற்கும் இன்னொரு கோஷ்டியும் களத்தில் வார்த்தைகளால் வீரவசனங்கள்,சபதங்கள்,சந்தோஷ கேலி கிண்டல்கள் என்று களைகட்டி நாறுகிறது நம் நகராட்சி.ஆக,எந்தவித பயனும், உதவியும் நாம் பெறாமல் நம் வாயில் மண்ணை மாறி மாறி குத்துவதில்தான் என்ன குதூகலம் இருகோஷ்டிகளுக்கும்!
கண்ணியமிகு காயல் நெஞ்சங்களே,நாம் எத்தனை நாளைக்குதான் பொறுத்திருப்பது,பொறுமையின் எல்லைக்கே சென்று விட்டோம் விடை வெறுமை, வெறுமை,வெறுமைதான் . தனிப்பட்ட வல்லமை வாய்ந்த வில் வித்தகர்களின் விபரீதங்களின் விளைவால் வீசப்படும் அம்புகளால் அவதியுறும் அப்பாவி மக்கள்தான் நாம்!
பொருத்தது போதும் பொங்கிஎழு இளையசமுதாயமே,
இனிய நடுநிலை நெஞ்சங்களே,நேர்மையானஆன்றோர்களே சான்றோர்களே இந்த நகராட்சியை அடியோடு தலை முதல் அடிவரை அப்படியே கூட்டிப்பெருக்கி துடைத்தெறிய வேண்டும். அப்பொழுதுதான் நம்மூருக்கு விமோசனம் பிறக்கும்.வேறு எந்த வழியும் இதற்க்கு விடிவே அல்ல. இந்நிலை வளருமேயானால் வளர வளர வேதனைகளும், வீண் பகைகளும், வக்கரங்களும், ஊரின் வல்லமையின் ஆதிக்கங்களும்தான் கோலோட்சி புரியும்.அது நம்முடைய ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பதோடு, மிகப்பெரிய பகை உணர்வு புற்றுநோயாக பரவி ஊரையே அழித்துவிடும்!
எழுந்திரு காயலா,இத் தருணத்திலிருந்து விவேகத்துடனும், வேகத்துடனும் செயல்பட்டால்தான் ஒரு நிம்மதி
மூச்சுக்காற்று சிறுக சிறுக வெளிவந்து நம்மூருக்கு ஒரு
விடிவெள்ளியைப் பார்க்க முடியும்.வேதனையின் விரக்த்தியில் இருந்து கொண்டு இதை எழுதி உங்களை அழைக்கிறேன், கண்ணியமிகு காயலின் கற்றறிந்த,அறிஞர்களே, அனைத்து துறைகளிலும் அனுபவம் வாய்ந்த அன்புள்ளங்களே, அயல்நாட்டிலில் வாழும் அறிவுக்கூர்வாள் அருமை சகோதர்களே.ஆழசிந்தியுங்கள் அணுவளவும் ஆறப்போடக்கூடாத ஒரு முடிவுக்கு வாருங்கள்.
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
4. நில தரகர்களுக்குக்காக இத்திட்டம் அமைய BAFFER ZONE னை எதிர்ப்பதேன்..! posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[07 January 2015] IP: 180.*.*.* India | Comment Reference Number: 38774
இத்திட்டம் நிறைவேற வேண்டுமானால் உறுப்பினர்கள் BAFFER ZONE அமைக்க நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டியது தானே..! ஏன் முட்டுக்காட்டை போட்டு அரசு விதிமுறைக்கு மாற்றமாக இத்திட்டத்தை நிறைவேற்ற நகர்மன்ற தலைவரை வற்புறுத்துகிறார்கள்..!
நில தரகர்களுக்குக்காக BAFFER ZONE னை எதிர்ப்பதேன்..!
பிரச்சனை எங்கு இருந்து ஆரம்பிக்கிறது என்பதை நடுநிலைவாதிகள் நன்கு அறிவார்கள்..!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross