சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில், நகர்நலத் திட்டங்களுக்காக ரூபாய் 2 லட்சத்து 28 ஆயிரதது 150 நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
எமது ரியாத் காயல் நல மன்றத்தின் 45ஆவது மற்றும் (2014) இவ்வருட இறுதி செயற்குழு கூட்டம் கடந்த 19-12-2014 வெள்ளிக்கிழமை பிற்பகல் மன்றத் தலைவர் ஹாஃபிழ் ஷெய்கு தாவூத் இத்ரீஸ் அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.
சிறப்பான மதிய உணவோடு....
துவக்கமாக அனைவருக்கும் சுவையான மதிய உணவு பரிமாறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், ஆரம்பமாக நிகழ்ச்சி நிரல் சாராம்சம் பொருளாளர் முஹம்மத் ஹசன் நெறிபடுத்த, அதனைத் தொடர்ந்து இறைமறையை மன்ற மூத்த செயற்குழு உறுப்பினர் நயீமுல்லாஹ் ஓத நிகழ்ச்சி தொடங்கியது, அடுத்து வருகை தந்த அனைத்து உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு பார்வையாளர்களை சகோதரர் இப்ராஹிம் பைசல் வரவேற்றார், அதனைத்தொடர்ந்து பொறியாளர் சதகத்துல்லாஹ் அவர்கள் தலைமை வகித்து பேசினார்.
நல உதவி:
அடுத்து நம் நகரின் மருத்துவ கூட்டமைப்பான ஷிபா மூலம் பெறப்பட்ட ஏராளமான கடிதங்கள் வாசிக்கப்பட்டு ரூ. 1,86,150/ ஒதுக்கீடு செய்யப்பட்டது, மற்றும் நேரடியாக பெறப்பட்ட கல்வி, சிறுதொழில் போன்றவைக்கு ரூ. 42,000 ஒதுக்கீடு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
இக்ராஃ / ஷிஃபா:
அடுத்து இக்ரா மற்றும் ஷிபா அமைப்பு பற்றிய சில தகவல்களை மன்ற தலைவர் சக உறுப்பினர்களுடன் பரிமாறிக்கொண்டார், அதே நேரத்தில் நம்மன்றம் சிறப்பாக செயல்படுவதற்கு நம் அனைவரின் ஒற்றுமையே பிரதானம் என்று வலியுறித்தினார், எல்லா தருணங்களிலும் ஒரே கோட்டின் கீழ் நின்று இன்னும் நற்பல சேவையை நமதூருக்கு தொண்டாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
ஜன்சேவா (JANSEVA):
கடந்த சில வாரங்களுக்கு முன் நமதூரில் இருந்து வந்த ஜன்சேவா (வட்டி இல்லா வங்கி) அமைப்பின் நிர்வாகிகள் ரியாத் மாநகரில் நடத்திய கூட்டத்தின் சாரம்சத்தை அந்த நிகழ்வில் கலந்து கொண்ட உறுப்பினர்களின் அதன் முக்கியத்துவம் மற்றும் நமதூருக்கு இன்றைய சூழலில் எவ்வளவு அத்தியாவசியம் என்று சக உறுப்பினர்களோடு கலந்துரையாடி, அந்த வங்கி துறையில் தங்களையும் பங்கு தாரராக இணைய வலியுறுததப்பட்டது.
வாழ்த்துகள்:
எம் மன்ற ஆலோசகர் சகோதரர் ஹைதர் அலி அவர்கள் இந்திய சர்வதேச பள்ளி-ரியாதின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பாராட்டையும், அவரின் பணி மேலும் சிறப்பாக அமைய துஆ செய்யப்பட்டது.
சிறப்பு பார்வையாளர்கள்:
நம்மன்ற அனைத்து செயற்குழு கூட்டத்திற்கும் 2 அல்லது 3 பொதுக்குழு உறுப்பினர்கள் சிறப்பு பார்வையாளர்களாக அழைக்கப்பட்டு பெறப்படுகிற கடிதங்களுக்கு எவ்வாறு உதவி செய்யப்படுகிறது (சந்தா மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் அன்றைய பங்களிப்பு) எவ்வாறு செய்யப்படுகிறது என்ற நோக்கில் இக்கூட்டத்திற்கு சகோதரர்கள் முத்துப்பேட்டை ஷாகுல் ஹமீத், அஹ்மத் சாலிஹ், அபூபக்கர் சித்தீக் மற்றும் ஜித்தா மன்ற உறுப்பினர் ஷாஹிப் மீரான் ரியாழ் அவர்கள் கலந்து கொண்டு தங்களது மேலான கருத்துகளையும், ஆலோசனைகளையும் பரிமாறிகொண்டனர்.
எனக்கும் காயல்பட்டனத்திற்கும் 35 வருட தொடர்பு இருப்பதாகவும், நான் சென்னை புதுக்கல்லூரியில் படிக்கும்பொழுதே அறிந்த விஷயம் நல்ல மார்க்கப்பற்றுள்ள ஊர் என்றும், உதவி செய்வதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்றார் ஷாகுல் ஹமீத் அவர்கள், உதவி கேட்டு வரும் விண்ணப்பங்கள் வாசிக்கும்போது அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் போட்டி போட்டுக்கொண்டு உதவ முன்வருவது மிகுந்த சந்தோஷத்தையும், வியப்பாகவும் இருப்பதாக அபூபக்கர் சித்தீக் மற்றும் அஹ்மத் சாலிஹ் அவர்கள் தெரிவித்தார்கள்.
கூட்ட ஒருங்கிணைப்பாளர்கள்:
இச்செயற்குழு கூட்ட ஒருங்கிணைப்பாளர்கள் PMS லெப்பை, இப்ராஹிம் பைசல், SB முஹ்யித்தீன், மற்றும் PSJ ஆப்தீன் அவர்களின் அணுசரணையில் ருசியான மீன் வருவல், வெண்டக்காய் கூட்டோடு சாப்பாடு பரிமாறப்பட்டது.
நன்றியுரை:
இதனிடையில் வருகிற 2015ம் ஆண்டிற்கான செயற்குழு கூட்ட அட்டவனையை மன்ற செயலாளர் ஸூபி இப்ராஹிம் பகிர்ந்து கொண்டு இறுதியாக நன்றியுரையும் நவின்றார்.
ஊடகக்குழு சார்பில் குழுமப்படம் எடுக்கப்பட்டபின் ஹாபிழ் PSJ ஆப்தீன் அவர்களின் துஆவோடு கூட்டம் சிறப்புடன் நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
நோனா செய்யித் இஸ்மாஈல்
செய்தி தொடர்பாளர் - ரியாத் காயல் நல மன்றம்
ரியாத் காயல் நல மன்றத்தின் முந்தைய செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |