காயல்பட்டினம் அருணாச்சலபுரம் - கடையக்குடி இடைச்சாலையில், குடிநீர் வினியோகக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அப்பகுதியில் நீண்ட நாட்களாகத் தேங்கியிருக்கும் மழை நீர் குழாய் உடைப்பிற்குள் புகுந்து, அசுத்தமடைந்த நீர் வீடுகளுக்கு வினியோகமானதாகத் தெரிகிறது.
நேற்று (ஜனவரி 06) 14.00 மணியளவில், அப்பகுதியை உள்ளடக்கிய 01ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.ஐ.அஷ்ரஃப் மேற்பார்வையில் - காயல்பட்டினம் நகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு, உடைப்பைச் சரி செய்தது.
|