புகழ்பெற்ற தொழிலதிபரும், பல்வேறு கல்வி நிறுவனங்களையும் - பொதுநல அமைப்புகளையும் உருவாக்கியவரும், சேனா ஆனா (செ.அ.) என பரவலாக அழைக்கப்பட்டவரும், இ.டீ.ஏ. குழும நிறுவனங்களின் துணைத்தலைவரும் - கீழக்கரையைச் சேர்ந்தவருமான ஹாஜி பி.எஸ்.அப்துர்ரஹ்மான் என்ற புகாரீ செய்யித் அப்துர் ரஹ்மான் இம்மாதம் 07ஆம் நாள் புதன்கிழமையன்று 17.30 மணியளவில் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 87.
அன்னாரின் ஜனாஸா, நேற்று (ஜனவரி 08) வியாழக்கிழமை 11.30 மணியளவில், சென்னையிலுள்ள அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, 13.15 மணியளவில், சென்னை - வண்டலூர் கிரஸண்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்திலுள்ள பள்ளிவாசலில் தொழுகை நடத்தப்பட்டு, பள்ளியின் முன்புறம் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நல்லடக்க நிகழ்ச்சியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள், தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் உட்பட – பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகரில், 1927ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் நாளன்று - மர்ஹூம் செய்யித் முஹம்மத் புகாரீ - மர்ஹூமா யூஸுஃப் சுலைஹா தம்பதியின் மகனாகப் பிறந்தார்.
பல்வேறு கல்வி நிறுவனங்களை நிர்வகித்து வரும் சீதக்காதி அறக்கட்டளை, All India Islamic Foundation (அனைத்திந்திய இஸ்லாமிய நிறுவனம்), பி.எஸ்.அப்துர்ரஹ்மான் பல்கலைக் கழகம் உட்பட பல நிறுவனங்களை இவர் நிறுவி, நிர்வகித்து வந்துள்ளார்.
இ.டி.ஏ. குழும நிறுவனங்களை நிறுவிய முதன்மையானவர்களுள் ஒருவராகத் திகழ்ந்ததன் மூலம், உலகின் பல்வேறு நாடுகளில் தமிழகத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தகுந்த வேலைவாய்ப்பு கிடைக்க முக்கிய காரணமாக விளங்கினார்.
இந்தியப் பிரதமர், தமிழகத்தில் அவர் காலத்தில் ஆட்சி செய்த அனைத்து முதலமைச்சர்களோடும் தொடர்பு வைத்திருந்தார்.
அவரது வாழ்வின் சரித்திரங்களை விளக்கும் அரிய படத்தொகுப்புகள் வருமாறு:-
குடும்பத்தினருடன்...
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடன்...
தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் உடன்...
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன்...
தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவுடன்...
தகவல் & படங்கள்:
சென்னையிலிருந்து...
S.K.ஷமீமுல் இஸ்லாம்
K.K.S.முஹம்மத் ஸாலிஹ்
பெங்களூருவிலிருந்து...
முஹம்மத் அலீ |