புகழ்பெற்ற தொழிலதிபரும், பல்வேறு கல்வி நிறுவனங்களையும் - பொதுநல அமைப்புகளையும் உருவாக்கியவரும், சேனா ஆனா (செ.அ.) என பரவலாக அழைக்கப்பட்டவரும், இ.டீ.ஏ. குழும நிறுவனங்களின் துணைத்தலைவரும் - கீழக்கரையைச் சேர்ந்தவருமான ஹாஜி பி.எஸ்.அப்துர்ரஹ்மான் என்ற புகாரீ செய்யித் அப்துர் ரஹ்மான் இம்மாதம் 07ஆம் நாள் புதன்கிழமையன்று 17.30 மணியளவில் சென்னையில் காலமானார். அன்னாரின் ஜனாஸா, நேற்று (ஜனவரி 08) 13.15 மணியளவில் சென்னையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் மறைவை முன்னிட்டு - அவரது எண்ணிலடங்கா சேவைகளால் பயன்பெற்றதைக் கருத்திற்கொண்டு, பல்வேறு இடங்களில் ஙாயிப் ஜனாஸா தொழுகையும், இரங்கல் கூட்டங்களும் நடத்தப்பட்டு, அவருக்காக பிரார்த்தனை செய்யப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில், காயல்பட்டினம் துளிர் அறக்கட்டளையால் நடத்தப்பட்டு வரும் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி வளாகத்தில், நாளை (ஜனவரி 10 சனிக்கிழமை) 16.30 மணிக்கு இரங்கல் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், அனைவரும் பங்கேற்குமாறும் அந்நிர்வாகத்தால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
துளிர் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |