ப்ளஸ் 2 மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, அவர்கள் விரும்பும் தொழில்துறை தேடலில், சரியான விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டல்களை வழங்கிடுவதற்காக, பெங்களூரு காயல் நல மன்றம் சார்பில் “துறை சார் ஆலோசகர் நியமன திட்டம்” (Mentor & Mentee Programme) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்து விளக்கவும், விரும்பும் மாணவர்களை - தகுந்த ஆலோசகர்களுடன் இணைப்பதற்காகவும், அம்மன்றத்தின் சார்பில் - இக்ராஃ கல்விச் சங்க ஒருங்கிணைப்பில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியில் இம்மாதம் 02ஆம் நாள் வெள்ளிக்கிழமை 16.30 மணியளவில் சிறப்பு நிகழ்ச்சி, எல்.கே.மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் தலைமையில் நடைபெற்றது.
மன்றத் தலைவர் பீ.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன் - பெங்களூரு காயல் நல மன்றம் குறித்து அறிமுகவுரையாற்றினார்.
“துறை சார் ஆலோசகர் நியமன திட்டம்” (Mentor & Mentee Programme) குறித்து, மன்ற துணைத்தலைவர் ‘ஹனீவெல்’ எம்.முஹம்மத் இப்றாஹீம் அறிமுகவுரையாற்றினார்.
மன்றத்தின் மற்றொரு துணைத்தலைவர் ‘ஹனீவெல்’ எஸ்.ஏ.கே.ஜபரூத் மவ்லானா, திட்ட விளக்கவுரையாற்றினார்.
பின்னர் நடைபெற்ற கேள்வி-பதில் நிகழ்ச்சியில், இத்திட்டம் குறித்தும், அதில் இணைவதற்கான வழிமுறைகள் மற்றும் இணைவதன் பயன்கள் குறித்தும் மாணவர்களும், பெற்றோர் மற்றும் பார்வையாளர்களும் கேட்ட கேள்விகளுக்கு, மன்றத் துணைத்தலைவர்கள் இருவரும் விரிவான விளக்கமளித்தனர்.
இட வசதி செய்து தந்த எல்.கே.மேனிலைப்பள்ளி நிர்வாகத்திற்கும், இணைந்து நடத்திய இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, மன்றத்தின் முன்னாள் துணைத்தலைவரும் - KCGC செயற்குழு உறுப்பினருமான கே.கே.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், முன்னாள் செயலாளரும் - கத்தர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினருமான எம்.என்.சுலைமான், இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் ஆகியோர் ஒருங்கிணைப்பில், ‘ஜுனிபர்’ ஷேக் சுலைமான், மூஸா நெய்னா, ஹாஃபிழ் வி.டி.என்.மஹ்மூத், ஷிஹாபுத்தீன், ஹஸன், ‘நேஷனல்’ ஜுல்ஃபிகார், வாவு முஹம்மத், ஹாஃபிழ் அப்துல்லாஹ் முஹாஜிர் ஆகியோர் செய்திருந்தனர்.
தகவல்:
ஜாஃபர் சுலைமான்
படங்கள்:
ஹஸன்
செய்தியாக்கம்:
எஸ்.கே.ஸாலிஹ்
பெங்களூரு காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |