மத்திய அரசின் Municipal Solid Wastes (Management and Handling) Rules, 2000 விதிமுறைகள் மாநிலங்களில் முறையாக அமல்படுத்தப்படுகிறதா என கண்காணிக்க - அம்மாநிலங்களின் மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் - MUNICIPAL SOLID WASTES RULES 2000 விதிமுறை 8(1)இன் படி, மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள், ஒவ்வோர் ஆண்டும் - டில்லியில் உள்ள மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (CENTRAL POLLUTION CONTROL BOARD; CPCB) - இந்த சட்டம், தத்தம் மாநிலங்களில் அமல்படுத்தப்படுவது எந்த நிலையில் உள்ளது என்ற அறிக்கையை வழங்க வேண்டும்.
பல மாநிலங்களின் மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள், இந்த அறிக்கையை - மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் சமர்ப்பிக்காததால், இது குறித்து - தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வில் (PRINCIPAL BENCH) வழக்கு (ALMITRA H. PATEL & ORS. VS UNION OF INDIA & ORS.; ORIGINAL APPLICATION NO. 199 OF 2014) ஒன்று பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் - நவம்பர் 03, 2014 அன்று - தேசிய பசுமை தீர்ப்பாயம், நாட்டில் உள்ள அனைத்து (35) மாசு கட்டுப்பாட்டு வாரியங்களும், 2 வாரங்களில் - தங்கள் ஆண்டறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
We make it clear that every SPCBs/PCCs of this country shall file such report to the CPCB within two weeks from today
after receipt of the copy of this order. And after receiving such Status reports, the CPCB shall present the same with a
comprehensive report before the Tribunal on the next date of hearing so as to enable the Tribunal to pass further orders. And
we have given two weeks time to the SPCBs/PCCs for the reason that as per the Statutory rules the SPCBs/PCCs should have
filed such reports even by the end of 15th of September, 2014. Therefore, we make it clear to every State Boards to comply
with the such requirement within the time granted by this Tribunal.
Each of the State Governments shall also file their time bound action plan for the purpose of implementing the Municipal
Solid Waste Management and Handling rules before the Tribunal. We also make it clear that CPCB after receiving reports from
each of the SPCBs/PCCs, such reports shall also be forwarded to this Tribunal along with its comments in the form of a chart.
அதன்படி - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TAMIL NADU POLLUTION CONTROL BOARD; TNPCB), மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு
(CENTRAL POLLUTION CONTROL BOARD; CPCB) - தமிழக நிலைமை குறித்து அறிக்கை வழங்கியுள்ளது.
நவம்பர் 21, 2014 அன்று வழங்கப்பட்ட அந்த ஆண்டறிக்கையில் - தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 123 நகராட்சிகள் மற்றும் 529 டவுன் பஞ்சாயத்துகள் இருப்பதாகவும், அவற்றில் - MSW (M&H) Rules 2000-படி 5 மாநகராட்சிகளிலும், 39 நகராட்சிகளிலும், 69 டவுன் பஞ்சாயத்துகளிலும் - குப்பைக்கொட்டும் இடங்கள் துவக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இதர இடங்களிலும் - இந்த சட்டம் அமல் செய்யப்படுவது வெவ்வேறு நிலையில் உள்ளதாகவும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நவம்பர் 21, 2014 தேதிய ஆண்டறிக்கை முழுமையாக
|