1986ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட Environment (Protection) Act, 1986 (29 of 1986) சட்டம் வழங்கிய அதிகாரத்தின் அடிப்படையில் - 1991ம்
ஆண்டில் COASTAL REGULATION ZONE NOTIFICATION விதிமுறைகளையும், 2000ம் ஆண்டில் MUNICIPAL SOLID
WASTES (MSW) (MANAGEMENT AND HANDLING) RULES விதிமுறைகளையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
மேலும் - தமிழக அரசு, MSW விதிமுறைகள்படி குப்பைக்கொட்ட இடம் தேர்வு செய்ய, 2004ம் ஆண்டில் நகராட்சியாக தரம் உயர்ந்த காயல்பட்டினம்
நகராட்சிக்கு 5 லட்சம் ரூபாய் நிதியும் - 2006ம் ஆண்டு ஒதுக்கியது.
மேலும் - தமிழக நகராட்சிகளில் எவ்வாறு குப்பைக்கொட்டும் இடங்கள் அமைய வேண்டும் என்ற செயல்முறை அறிக்கையினை - 2008ம் ஆண்டு,
சென்னையில் உள்ள நகராட்சிகள் நிர்வாகத்துறை ஆணையம் வெளியிட்டது.
MSW சட்டம் BUFFER ZONE அமைக்கப்படவேண்டும் என்ற விதிமுறையை மட்டுமே தெரிவித்தது. எவ்வளவு தூரத்திற்கு என்ற அளவுகோலை தெரிவிக்கவில்லை. நகராட்சிகளின் நிர்வாகத்துறையின் அறிக்கை தான், குப்பைக்கொட்ட தேர்வு செய்யப்படும் இடம் சுற்றி 500 மீட்டருக்கு BUFFER ZONE (குடியிருப்புகளுக்கு தடை) அமைக்க வேண்டும் என்ற வழிக்காட்டுதலை வழங்கியது.
அரசின் இந்த சட்டங்கள், விதிமுறைகள் - காயல்பட்டினத்தில் முதல் முறையாக குப்பைகள் கொட்ட முயற்சி எடுக்கப்பட்ட அக்டோபர் 2009
காலகட்டத்தில், அமலில் தான் இருந்தன. இருப்பினும் இந்த விதிமுறைகளை முற்றிலும் கடைபிடிக்காமல், அப்போதைய நகர்மன்றம் செயல்புரிந்ததால், சர்வே எண் 278இல் குப்பைகள் கொட்ட அப்போதைய நகர்மன்றம் எடுத்த முயற்சி விரைவாக தோல்வியுற்றது.
அக்டோபர் 2009இல் முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யத் அப்துர்ரஹ்மான், காயல்பட்டினம் நகராட்சிக்கு -
அவரின் சர்வே 278 இடத்தில் இடம் ஒதுக்கி வழங்கிய - 3 மாதம் மட்டும் செல்லத்தக்க - பத்திரம் நகல்
1991ம் ஆண்டு அமலுக்கு வந்த COASTAL REGULATION ZONE NOTIFICATION விதிமுறைகள், CRZ பகுதிகளில் குப்பைக்கொட்ட தடை விதித்திருந்தது.
இருப்பினும் - 2009ம் ஆண்டு, அப்போதைய நகராட்சியினால் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம், குப்பைக்கொட்ட CRZ
பகுதிக்குள் உள்ள இடத்தினையே தேர்வு செய்தே அனுப்பியது.
COASTAL REGULATION ZONE NOTIFICATION 1991 இல் இருந்து
...
2. Prohibited Activities:
The following activities are declared as prohibited within the Coastal Regulation Zone, namely:
...
(vi) dumping of city or town waste for the purposes of landfilling or otherwise; the existing practice, if any, shall be
phased out within a reasonable time not exceeding three years from the date of this Notification;
...
CRZ விதிமுறைகளை மீறி சர்வே எண் 278இல் வழங்கப்பட்ட இடத்தின் - விண்ணப்பத்துடன் 2009ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட -
வரைப்படம்
தேர்வு செய்யப்பட்ட இடம் CRZ விதிமுறைகளை மீறி இருந்தாலும், நகராட்சியின் செயல் அலுவலர் - மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு
விண்ணப்பத்துடன் அனுப்பிய கடிதத்தில், CRZ என்ற வார்த்தையையும் உள்ளடக்கியே அனுப்பியிருந்தார்.
மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்த விதிமீறலை கண்டு கொள்ளாது என்று எண்ணி - அந்த இடம் தேர்வு செய்யப்பட்டதா? அல்லது அப்போதைய
நகர்மன்ற அங்கத்தினர், அதிகாரிகளிடம் CRZ விதிமுறைகள் குறித்த தெளிவு அப்போது இல்லையா? இக்கேள்விகளுக்கான விடைகள் இன்று வரை
இல்லை.
விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம், CRZ விதிமுறைகளை காரணம் காட்டி, சர்வே எண் 278யை 2010ம் ஆண்டு நிராகரித்தது. அதே பகுதியில் - மாற்று இடம் வழங்கவும், நிலம் வழங்கியவர் அப்போது எந்த முயற்சி
செய்யவில்லை.
மேலே காணும் காயல்பட்டினம் நகராட்சியின் அப்போதைய செயல் அலுவலரின் கடிதத்தில், CRZ வார்த்தை மட்டுமன்றி, MUNICIPAL SOLID WASTES
(MANAGEMENT AND HANDLING) RULES 2000 விதிமுறையும் மேற்கோள்காட்டப்பட்டது. ஏற்கனவே கண்டது போல், MSW விதிமுறைகள் BUFFER ZONE
அறிவிப்பினை கட்டாயமாக்கியுள்ளன.
2009ம் ஆண்டு விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட காயல்பட்டினம் தென் பாக கிராம அதிகாரியின் கடிதம் - தேர்வு செய்யப்பட்ட இடத்தில இருந்து
ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு எந்த குடித்தனமும் இல்லை என்ற சான்றிதழையும் வழங்கியது.
இருப்பினும் - MSW விதிமுறைகள் கோருவது போல், காயல்பட்டினம் நகராட்சி, அதிகாரப்பூர்வமாக BUFFER ZONE அறிவிக்க எந்த முயற்சியும்
அப்போது செய்யவில்லை. நகராட்சியின் விண்ணப்பம் ஆரம்ப கட்டத்திலேயே, CRZ விதிமுறை மீறலால் நிராகரிக்கப்பட்டதால், BUFFER ZONE
குறித்த விவாதம் அப்போது எழவில்லை.
|