இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, காயல்பட்டினத்தில் பல்வேறு ஆன்மிக மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் மீலாத் விழாக்கள் தொடராக நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில், காயல்பட்டினம் மஹப்பத்துர் ரஸூல் மீலாது கமிட்டி சார்பில் கடந்தாண்டு முதல் மீலாத் விழா நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு மீலாத் விழா நிகழ்ச்சி, இம்மாதம் 10, 11 நாட்களில் (சனி, ஞாயிறு) நடைபெற்றது.
முதல் நாள் நிகழ்ச்சிகள்:
துவக்க நாள் நிகழ்ச்சிகள், இம்மாதம் 10ஆம் நாள் சனிக்கிழமையன்று நடைபெற்றன. அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் ஸலவாத் மஜ்லிஸும், இஷா தொழுகைக்குப் பின் மார்க்க சொற்பொழிவும் நடைபெற்றது. காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ, “ஸலவாத்தின் சிறப்புகள்” எனும் தலைப்பில் உரையாற்றினார்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள்:
இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் இம்மாதம் 11ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
அதிகாலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பின், சிறிய குத்பா பள்ளியின் முஅத்தின் தாஹா தலைமையில், கத்முல் குர்ஆன் ஓதி, தமாம் செய்யப்பட்டது. 10 மணிக்கு, நபிகள் நாயகம் புகழ்பாடல்கள், இளவல்களால் பாடப்பட்டன.
அஸ்ர் தொழுகைக்குப் பின், ஸெய்யிதினா பிலால் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ தலைமையில், நபிகளார் புகழ்பாடும் ஸுப்ஹான மவ்லித் மஜ்லிஸ் நடைபெற்றது. அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் எளியோருக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.
ஸதக்கா எனும் தர்மம் குறித்து மவ்லவீ கத்தீபு ஏ.பி.மக்தூம் சிற்றுரையாற்றினார். இஷா தொழுகைக்குப் பின், தாருல் உலூம் ரப்பானிய்யா இப்றாஹீமிய்யா அரபிக்கல்லூரியின் ஆசிரியர் மவ்லவீ ஜவ்வாத் ஹுஸைன் ரப்பானீ ஃபாழில், “மீலாதும், மவ்லிதும்” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சிகள் அனைத்திலும், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
விழா ஏற்பாடுகளை, பிலால் என்.எம்.எச்.செய்யித் முஹம்மத் புகாரீ, கே.எம்.எஸ்.நூர் முஹம்மத், கே.எம்.முஹம்மத் அலீ, கே.எம்.முஹம்மத் உமர் ஃபாரூக், எஸ்.ஐ.ஜமால் முஹம்மத், ஹாஃபிழ் எம்.எம்.முஹ்யித்தீன் தம்பி, எம்.ஏ.எஸ்.முஹ்யித்தீன் தம்பி, எம்.எச்.முஹம்மத் சுஹைல், வி.ஓ.ஏ.கே.அனஸுத்தீன், என்.எம்.ஏ.செய்யித் அப்துல் ரஹ்மான், கே.எம்.சுலைமான், ஹாஃபிழ் எஸ்.எம்.முஹம்மத் ஜிஸ்தீ, எம்.ஏ.முஹம்மத் மீரா நெய்னா, பீ.இசட்.ஏ.முஹம்மத் அப்துல் காதிர், விளக்கு ஜவஹர், மவ்லவீ கே.ஏ.ஜாஸிர் மஸ்லஹீ உள்ளிட்டோரடங்கிய குழுவினர் செய்திருந்தனர்.
படங்கள்:
M.A.C.சுஹைல் இப்றாஹீம்
மஹப்பத்துர் ரஸூல் மீலாத் கமிட்டி சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) நடத்தப்பட்ட மீலாத் வழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |