காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட (NSS) கிராம சீரமைப்பு முகாம், 24.12.2014 முதல் 30.12.2014 வரை ஒரு வார காலம் நடைபெற்று முடிந்துள்ளது. இதுகுறித்து அப்பள்ளியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை வருமாறு:-
எல்.கே.மேனிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டப் பிரிவின் சார்பில், கிராம சீரமைப்பு முகாம் துவக்க விழா, 24.12.2014 புதன்கிழமையன்று எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளி தலைவர் பீ.எம்.புகாரீ முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர் ஏ.முஹம்மத் சித்தீக் திட்ட விளக்கவுரையாற்றினார்.
ஆசிரியர்களான எஸ்.அஜ்மல் கான், அஹ்மத் ஏ.ஜெ.முஸ்தஃபா, ஓய்வுவெற்ற ஆசிரியர் எம்.ஏ.புகாரீ, எல்.கே. மெட்ரிக் மேனிலைப் பள்ளி ஆசிரியை செய்யிதலி ஃபாத்திமா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆசிரியர் எம்.செய்யித் ரஃபீக் நன்றி கூறினார். ஆசிரியர் பீ.ஆனந்தக் கூத்தன் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
25.12.2014 வியாழக்கிழமையன்று கிராமிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. ஆசிரியர் எல்.ஜமால் முஹம்மத் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி, வெற்றிபெற்ற சிறுவர் சிறுமியரைத் தேர்ந்தெடுத்தார்.
26.12.2014 வெள்ளிக்கிழமையன்று ஹாஜி அக்பர்ஷா நகர் 2ஆம், 3ஆம் தெருக்களிலுள்ள மக்களுக்கு இடையூறளித்த உடை மரங்கள், கள்ளிச் செடிகளை நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் அகற்றினர். மஸ்ஜித்துர் ரஹ்மான் பள்ளி வளாகத்தையும் சுத்தம் செய்தனர்.
27.12.2014 சனிக்கிழமையன்று சுற்றுப்புறச் சூழல் மற்றும் ப்ளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. அக்பர்ஷா நகர் முதல் தெருவில் உள்ள உடை மரங்கள், குப்பைகள் அகற்றப்பட்டன.
28.12.2014 ஞாயிற்றுக்கிழமையன்று சிறுசேமிப்பு நாள் மற்றும் மத நல்லிணக்கப் பேரணி நடத்தப்பட்டது.
29.12.2014 திங்கட்கிழமையன்று கால்நடை இலவச மருத்துவ முகாம், மருத்துவர் காந்தமதி தலைமையில் நடைபெற்றது.
30.12.2014 செவ்வாய்கிழமையன்று எல்.கே. மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட நிறைவு விழா நடைபெற்றது. தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் வரவேற்புரையாற்றினார்.
மாணவர் எஸ்.சலீம் முகாம் அறிக்கை வாசித்தார். காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் பள்ளியின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் ஜனாப் ஹாஜி டீ.ஏ.எஸ்.உவைஸ், ஆசிரியை செய்யிதலி ஃபாத்திமா, ஆசிரியர் எஸ்.சிதம்பரம், 15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிகளை நெறிப்படுத்திய நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஏ.முஹம்மத் சித்தீக் நன்றி கூறினார்.
விழா ஏற்பாடுகளை, அலுவலக உதவியாளர் எஸ்.எல்.முஹம்மத் ரஃபீக் ஒருங்கிணைப்பில், அலுவலர்களும், ஆசிரியர்களும் செய்திருந்தனர்.
தகவல் & படங்கள்:
ஆசிரியர் SBB புகாரீ
கூடுதல் படங்கள்:
ஆசிரியர் அஹ்மத் A.J.முஸ்தஃபா
எல்.கே.மேனிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
எல்.கே.மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |