இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்து, மைத்ரி பால யப்பா சிரிசேன அந்நாட்டின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றார். ரணில் விக்ரமசிங்க பிரதம மந்திரியாகக் கொண்டு புதிய அமைச்சரவையும் பொறுப்பேற்றுக்கொண்டது. அதில், அந்நாட்டின் வணிகத்துறை அமைச்சராக ரிஷாத் பதீயுத்தீன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
அவருக்கு வாழ்த்து தெரிவிக்குமுகமாக, இலங்கை தலைநகர் கொழும்புவில் இம்மாதம் 11ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று, இலங்கை வாழ் முஸ்லிம் சமூக நல விரும்பிகள் சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அதில், இலங்கை காயல் நல மன்றம் - காவாலங்காவின் செயலாளர் பி.எம்.முஹம்மத் ரஃபீக் கலந்துகொண்டு, வாழ்த்துரை வழங்கியதோடு, புதிய அமைச்சருக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார்.
காவாலங்கா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |