நகருக்கு குப்பைக்கொட்ட புதிய இடம் தேட துவங்கிய 2006ம் ஆண்டில் இருந்து, இதற்கு தேவையான இடம் 5 ஏக்கர் என்றே கூறப்பட்டு
வந்தது. அந்த அடிப்படையில் தான் 2009ம் ஆண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தற்போது - முன்னாள் நகர்மன்றத் தலைவர் காயல்பட்டினம் நகராட்சிக்கு இரண்டு பத்திரங்களில் வழங்கியுள்ள நிலங்களின் மொத்த அளவு 5.5 ஏக்கர்
என்றாலும், முந்தைய செய்திகளில் கண்டது போல் - அதில் 1.5 ஏக்கர் நிலம், சாலைகளுக்கு உரியதாகும். மீதி 4 ஏக்கர் நிலம் தான் குப்பைகள்
கொட்ட வழங்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே திட்டமிடப்பட்ட 5 ஏக்கர் நிலத்தில், 1 ஏக்கர் குறைவு (20 சதவீதம்).
குப்பைக்கொட்டப்படும் இடத்தில் பயோ காஸ் திட்டம் அமையவேண்டிய அவசியம் இல்லை என்றாலும், அதே இடத்தில் தான் பெருவாரியான உறுப்பினர்கள்
பயோ காஸ் திட்டம் அமையவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளதால் - 4 ஏக்கர் நிலத்தில், 25 சென்ட் முதல் 50 சென்ட் வரை, பயோ காஸ்
திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டால், குப்பைக்கொட்ட இருக்க போகும் நிலம், 3.5 ஏக்கர் நிலம் தான். இது ஏற்கனவே திட்டமிடப்பட்ட 5 ஏக்கர் நிலத்தில்,
1.5 ஏக்கர் குறைவு (30 சதவீதம்).
விதிமுறைகள்படி குறைந்தது 20 - 25 ஆண்டுகளாவது பயன்பாட்டில் இருக்க வேண்டிய குப்பைக்கொட்டவேண்டிய இடத்திற்கு இந்த அளவு (3.5
ஏக்கர்) நிலம் போதுமா என்ற கேள்வியும்,
ஏற்கனவே குறைவாக உள்ள இடத்தில், பயோ காஸ் திட்டம் அமைந்து - இன்னும் அந்த இடத்தின் அளவினை குறைக்க வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது.
பயோ காஸ்
திட்டத்திற்கு நகரில் இடத்திற்கு பஞ்சமில்லை. பயோ காஸ் திட்டத்திற்கு தேவையான் இடம் சுமார் 25 சென்ட். இந்த அளவில் நிலங்கள், நகரின் பல
பகுதிகளில் உள்ளன.
2013, 2014 ஆண்டுகளில் - மாவட்ட ஆட்சியர்கள் ஆசிஸ் குமார் IAS மற்றும் ரவிகுமார் IAS, நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள், திருச்செந்தூர்
வட்டாச்சியர் உட்பட பலர் பல இடங்களை அடையாளம் காட்டினர். இருப்பினும் அவற்றை உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை.
பல அதிகாரிகள் பரிந்துரைத்த நிலங்களில் ஒன்று - நகராட்சிக்கு பாத்தியப்பட்ட, மொத்தம் 7.5 ஏக்கர் அளவு விஸ்தீரணம் கொண்ட, சர்வே எண்
392/5 நிலமாகும்.
டிசம்பர் 3, 1958 அன்று - இந்நிலத்தின் 2 ஏக்கர் 6 சென்ட் இடத்தில் குப்பைக்கொட்டவும், மீதி நிலத்தை மயானப்பகுதியாக பயன்படுத்தவும், ஹாஜி
எம்.கே.டி. அபூபக்கர் தலைமையிலான அப்போதைய பஞ்சாயத் தீர்மானம் நிறைவேற்றியது.
மயானத்திற்கு இடம் கோரி அப்போதைய 1வது வார்டு உறுப்பினர் வழங்கிய கடிதம் (டிசம்பர் 3, 1958)
குப்பைக்கொட்டவும், மயானப்பகுதிக்காக அனுமதி வழங்கியும் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் (டிசம்பர் 3, 1958)
56 ஆண்டுகளாக அந்த தீர்மானம் முழுமையாக நிறைவேற்றப்படாமலேயே உள்ளது. 56 ஆண்டுகளுக்கு முன்பு குப்பைக்கொட்டவே அனுமதிக்கப்பட்ட இடத்தில், தற்போது அது சாத்தியம் இல்லை என்றாலும், இன்றைய உறுப்பினர்கள் - கழிவுகளை கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யும் பயோ காஸ் திட்டத்தினை கூட கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்து
வருகின்றனர்.
சர்வே எண் 392/5 இடம் அக்டோபர் 8, 2013 அன்று மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் IAS ஆய்வு செய்து பரிந்துரைத்த இடங்களில் ஒன்று. அதற்கு முன்னர் - அப்போதைய நகராட்சி மண்டல இயக்குனர் டி.மோகன், திருச்செந்தூர்
வட்டாச்சியர் நல்லசிவன் ஆகியோரும் இவ்விடத்தை பரிந்துரைத்துள்ளனர்.
392/5 இடத்தை பயோ காஸ் திட்டத்திற்கு பரிந்துரைத்து காயல்பட்டினம் நகராட்சி ஆணையர், 8.10.2013 அன்று மாவட்ட
ஆட்சியருக்கு அனுப்பிய கடிதம் நகல்
திருச்செந்தூர் வட்டாச்சியரை மேற்கோள்காட்டி - 392/5 இடத்தை பரிந்துரைத்து தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர்,
நகராட்சி ஆணையருக்கு அனுப்பிய 18.12.2013 தேதிய கடிதம்
மாவட்ட வருவாய் அலுவலரை மேற்கோள்காட்டி தூத்துக்குடி ஆட்சியர், 392/5 இடத்தை பரிந்துரைத்து காயல்பட்டினம் நகராட்சி
ஆணையருக்கு அனுப்பிய 27.12.2013 தேதிய கடிதம்
பல அரசு அதிகாரிகள் இவ்விடத்தை பரிந்துரைத்தும், ஜனவரி 20, 2014 அன்று நடந்த கூட்டத்தில் 5வது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கிர் மற்றும்
13வது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.சம்சுதீன் தவிர்த்து இதர உறுப்பினர்கள் - 392/5 இடம் இத்திட்டத்திற்கு உகந்தது அல்ல என தீர்மானம்
நிறைவேற்றினர்.
அதிகாரிகளால் சர்வே எண் 392/5 தவிர வேறு சில இடங்களும் பயோ காஸ் திட்டத்திற்கு பரிசீலிக்கப்பட்டது.
உதாரணமாக - கிராம நிர்வாக அதிகாரி இடத்திற்கு அருகில் உள்ள, சர்வே எண் 625/2 இடம், மாவட்ட ஆட்சியர் ஆசிஸ் குமார் IAS காலத்தில்
பரிந்துரைக்கப்பட்டது.
பரிந்துரைக்கப்பட்ட 625/2 அரசு இடம் (கடிதத்தில் தவறுதலாக 625/3 என உள்ளது)
சர்வே எண் 334/1, 334/2, 334/12, 334/15 போன்ற இடங்களும் பரிந்துரைக்கப்பட்டன.
சர்வே எண் 42/1 இடத்தை நிராகரித்து 27.2.2014 அன்று உறுப்பினர்கள் நிறைவேற்றிய தீர்மானம்
உறுப்பினர்களை பொறுத்த வரை, முன்னாள் நகர்மன்றத் தலைவர் தரும் இடத்தில் தான் குப்பைக்கொட்டும் இடமும், பயோ காஸ் திட்டமும் அமைய வேண்டும் என தெளிவாக இருந்தனர். முன்னாள் நகர்மன்றத் தலைவர் நகராட்சிக்கு அவ்விடத்தை எழுதிக்கொடுப்பதற்கு ஓர் ஆண்டிற்கு முன்பே, அவ்விடத்தில் அவ்விரு திட்டங்களும் அமைய வேண்டும் என உறுப்பினர்கள் தீர்மானமும் நிறைவேற்றினர்!
சர்வே எண் 278 இடத்தை தேர்வு செய்து உறுப்பினர்கள் அக்டோபர் 11, 2013 அன்று - அவ்விடம் நகராட்சிக்கு வழங்கப்படுவதற்கு ஓர் ஆண்டிற்கு முன்பே - நிறைவேற்றிய தீர்மானம்
|